உலகெங்கிலும் உள்ள மர்ம நினைவுச்சின்னங்கள் - அதன் பின்னணி என்ன?

உலகமெங்கும் உள்ள மர்மமான பண்டைய நினைவு சின்னங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Mysterious ancient monuments from across the world
Mysterious ancient monuments from across the worldTwitter
Published on

உலகில் மனிதன் எழுப்பியுள்ள நினைவு சின்னங்கள், அவர்களின் நினைவுகளை மட்டும் கூறாமல் அந்த காலகட்டத்தில் உள்ள மக்களின் நிலைகளையும் கூறுவதாக அமைந்துள்ளது. அவற்றில் சில மர்மமானதாகவும் உள்ளன.

அப்படி உலகமெங்கும் உள்ள மர்மமான பண்டைய நினைவு சின்னங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஈஸ்டர் தீவு

ஈஸ்டர் தீவு (Easter Island) என்பது பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ளது. ஈஸ்டர் தீவின் வரலாறு மிகுந்த சர்ச்சைக்குள்ளாகிய ஒன்றாக இருக்கின்றது. இங்கு உள்ள மக்கள் பஞ்சம், தொற்றுநோய்கள், உள்நாட்டுப் போர், அடிமை வாழ்வு, குடியேற்றவாதம், காடுகள் அழிப்பு எனப் பல இன்னல்களை சந்தித்துள்ளதாக சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கி.பி 1722இல் டச்சைச் சேர்ந்த ஜேக்கப் ரகவீன், ஈஸ்டர் தினத்தில் இந்த தீவுக்கு வந்தார். அவரே தாம் வந்தநாளின் நினைவாக "ஈஸ்டர் தீவு" என்று பெயரிட்டதாக கூறப்படுகிறது.

மனித முகம் போல் தோற்றமுடைய நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன. இவற்றின் உயரம் சராசரியாக 10 மீட்டரும், எடை 80 டன்னும் உள்ளன.

இது குறித்த ஆய்வுகள் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு சவாலாக அமைந்தன. இந்த பகுதி தற்போது மர்மதேசமாக இருக்கிறது.

ஸ்டோன்ஹெஞ்ச்

பிரிட்டனில் அமைந்துள்ள ஸ்டோன் ஹெஞ்ச் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கிறது. இது மிகவும் பழமையான நினைவு சின்னங்களில் ஒன்றாகும். இது கிமு 2500-2200 இல் அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பாலென்கு

பாலென்கு என்பது தெற்கு மெக்சிகோவின் சியாபாஸில் உள்ள ஒரு நகரமாகும். இதனை மாயன் இன மக்கள் கிமு 500 -700 அமைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று வரை இந்த பகுதி மர்மம் நிறைந்த ஒன்றாக உள்ளது.

Mysterious ancient monuments from across the world
போவெக்லியா தீவு : சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கும் மர்ம தேசத்தின் பின்னணி என்ன?

கோபெக்லி டெபே

துருக்கியில் உள்ள இந்த தலமானது ஸ்டோன்ஹெஞ்சை விட 6,000 ஆண்டுகள் பழமையானது என கூறுகின்றனர்.

இது உலகின் முதல் கோவிலாக இருக்கலாம் என கணிக்கின்றனர். இப்போது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக உள்ளது.

இங்கு இருக்கும் ஐந்து மீட்டர் உயரமுள்ள தூண்களில் கழுகுகள், பாம்புகள், நரிகள், மான்கள் மற்றும் வீட்டு விலங்குகளின் சிற்பங்கள் உள்ளன. இந்த இடம் மர்மம் நிறைந்ததாக உள்ளது.

Mysterious ancient monuments from across the world
சென்டினல் தீவு : கால்வைத்த வெளிநபர்கள் உயிருடன் திரும்பியதில்லை - ஒரு திக்திக் பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com