ரஷ்யா vs உக்ரைன் : இந்த போர் எந்த திசையில் செல்லும்? - இதுதான் கள நிலவரம்

உக்ரைன் போர் இன்னும் இப்படியே நீட்டிக்கும் என்றால், அது உக்ரைன் ரஷ்யா போராக இருக்காது. அது நேட்டோ ரஷ்யா போராக மாறக்கூடும் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா vs உக்ரைன்
ரஷ்யா vs உக்ரைன்IStock
Published on

உக்ரைன் போர் இப்படியே தொடர்ந்தால் மிக மோசமான விளைவுகளை இவ்வுலகம் சந்திக்கக்கூடும் என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா vs உக்ரைன்
உக்ரைன் போர் முதல் ஹிஜாப் போராட்டம் வரை: 2022ன் 5 முக்கிய நிகழ்வுகள்
ரஷ்யா vs உக்ரைன்
Ukraine Volodymyr zelenskyy : காமெடி நடிகர் டு உக்ரைன் அதிபர்; யார் இந்த செலன்ஸ்கி?
நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க்
நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க்Nato

`பெரும் போருக்கான சாத்தியங்கள்`

உக்ரைன் போர் இன்னும் இப்படியே நீட்டிக்கும் என்றால், அது உக்ரைன் ரஷ்யா போராக இருக்காது. அது நேட்டோ ரஷ்யா போராக மாறக்கூடும் என தெரிவித்துள்ளார்.

அதைத் தவிர்க்கவே நாங்கள் தினமும் போராடி வருகிறோம்.

நார்வே முன்னாள் பிரதமர் ஜென் ஸ்டோலன்பெர்க், “பெரும் போர் வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளது என்பதில் எந்த ஐயமும் வேண்டாம். ஐரோப்பாவின் பல நாடுகள் இதில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளன. இதனை தவிர்க்க அனைத்து வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.” என்று கூறி உள்ளார்.

’நேட்டோவே காரணம்’

ஆனால் ரஷ்யா நேட்டோ அமைப்பை தொடக்கம் முதலே குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த போரை மறைமுகமாக நேட்டோ அமைப்புதான் நடத்துகிறது. உக்ரைனுக்கான அனைத்து உளவு மற்றும் ராணுவத் தளவாடங்களை நேட்டோ தான் வழங்கி வருகிறது என தொடர்ந்து ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது.

அமெரிக்காவிடம் நாங்கள் கற்றுக்கொண்டது

அமெரிக்கா தாங்கள் தாக்கப்படலாம் என்ற சந்தேகத்தில் தமது எதிரிகளை முதலில் தாக்கும். தங்களது பாதுகாப்பிற்காகவே தாக்கினோம் என்று அந்நாடு கூறும்.  நாங்களும் இந்த அமெரிக்கச் சித்தாந்தத்தை உள்வாங்க உள்ளோம் என்கிறது ரஷ்யா.

உக்ரைனை எங்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாக மேற்கத்திய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. 

உக்ரைன் டோன்பஸ் பகுதியின் வளத்தை அமெரிக்கா கொள்ளை அடித்தது. தனது காலனி போல அப்பகுதியை மேற்குலகம் வைத்திருந்தது. இப்போது ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மக்களைத் தூண்டிவிட்டு, அம்மக்களைச் சுரண்டு வருகிறது என்கிறது ரஷ்யா.

ரஷ்யா vs உக்ரைன்
உக்ரைனின் 15% பகுதிகளை இணைத்துக் கொண்ட ரஷ்யா- அமெரிக்காவின் ரியாக்‌ஷன் என்ன?
Angrei

உக்ரைன் நிலைப்பாடு

இழந்த நிலங்களை மீட்போம் என்பதில் உக்ரைன் உறுதியாக உள்ளது. 

இந்த குளிர்காலம் முடிவதற்குள் நாங்கள் ரஷ்யாவிடம் இழந்த அனைத்து நிலங்களையும் மீட்ப்போம் என்கிறது உக்ரைன்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com