நித்தியானந்தா: "கைலாசா பிரதிநிதிகள் பேசியது நிராகரிப்பு" - ஐ.நா சபையின் நிலைப்பாடு என்ன?

ஐ.நா சபையில் கைலாசாவின் பிரதிநிதிகள் பேசியது பரபரப்பபை ஏற்படுத்திய நிலையில், கற்பனை தேசத்தின் கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது. முழுமையான விளக்கம் உள்ளே...
நித்தியானந்தா: "கைலாசா பிரதிநிதிகள் பேசியது நிராகரிப்பு" - ஐ.நா சபையின் நிலைப்பாடு என்ன?
நித்தியானந்தா: "கைலாசா பிரதிநிதிகள் பேசியது நிராகரிப்பு" - ஐ.நா சபையின் நிலைப்பாடு என்ன?Twitter

பாலியல் குற்றவாளியான நித்யானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறியது பலருக்கும் நகைச்சுவையானதாக தோன்றியது.

ஆனால் அந்த நாட்டின் சார்பாக விஜய பிரியா நித்தியானந்தா என்பவர் ஐ.நா.சபையில் பேசியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கலாம்.

ஐ.நா.சபை கைலாசாவை அங்கீகரித்துவிட்டதாக பரப்பப்பட்டு வரும் தகவல்கள் போலி என்பதை ஐ.நா உறுதிபடுத்திவிட்டது.

அவர்கள் ஐ.நா.வில் பேசிய அனைத்தையும் நிராகரிப்பதாகவும் ஐ.நா.கூறியுள்ளது.

எங்கே இருக்கிறது என்று கூட தெரியாத அந்த கற்பனை தேசத்தின் பிரதிநிதிகளின் பேச்சுக்கும், ஐ.நா கூட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

இது குறித்து ஐ.நா அதிகாரிகள் பிபிசி செய்தி தளத்துக்கு அளித்துள்ள விளக்கதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

ஐ.நா.வின் விளக்கம்

பிப்ரவரி 22, 24 தேதிகளில் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கூட்டங்களில் யுனிட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

முதலாவது கூட்டத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதனை CEDAW என்ற குழு ஏற்பாடு செய்திருந்தது.

இரண்டாவது கூட்டம் நிலையான வளர்ச்சி குறித்து பொருளாதாரம் சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழு CESCR நடத்தியதாகும்.

இந்த இரண்டு கூட்டங்களிலும் பங்கேற்க எந்த ஒரு நாட்டின் பிரதிநிதியாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்வமுள்ள யாரும் பங்கேற்க முடியும். தன்னார்வலர் அமைப்புகளுக்கு அழைப்புவிடுக்கப்படும்.

நித்தியானந்தா: "கைலாசா பிரதிநிதிகள் பேசியது நிராகரிப்பு" - ஐ.நா சபையின் நிலைப்பாடு என்ன?
நித்யானந்தா : சூரியனையே உதிக்க விடாமல் காக்க வைத்த இவருக்கு இப்போது என்ன ஆனது?

இந்த இரண்டு கூட்டங்களிலும் கைலாசா பிரதிநிதிகளாக கூறிக்கொண்டவர்கள் சம்பந்தமில்லாத கருத்துக்களைப் பேசியதால் அவர்கள் பேசிய ஒரு வார்த்தைக் கூட கவனத்தில் கொள்ளப்படாது என இரண்டு குழுக்களையும் மேற்பார்வையிடும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய ஊடக அதிகாரி விவியன் குவோக் தெரிவித்துள்ளார்.

ஆனால் நித்தியானந்தாவின் சமூக வலைத்தள பக்கங்களில் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நித்தியானந்தா: "கைலாசா பிரதிநிதிகள் பேசியது நிராகரிப்பு" - ஐ.நா சபையின் நிலைப்பாடு என்ன?
Kailasa : நித்தியானந்தாவின் நாடு எங்கு இருக்கிறது? ஐநா சபை அங்கீகாரம் கிடைத்ததா?

ஐ.நா சபையில் அதிகாரப்பூர்வ காணொளியிலும் விஜய பிரியா நித்தியானந்தாவின் கருத்துகள் உள்ளன.

ஐ.நாவின் கூட்டத்தில் எந்த அமைப்பு அல்லது எந்த நிறுவனத்தின் பெயரில் அவர் கலந்துகொண்டார் என்பது தெரியவில்லை.

இதுமாதிரியான ஐ.நாவின் கிளை அமைப்புகளுக்கான கூட்டத்தில் தனிநாடுகள் சார்பாக கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நித்தியானந்தா: "கைலாசா பிரதிநிதிகள் பேசியது நிராகரிப்பு" - ஐ.நா சபையின் நிலைப்பாடு என்ன?
நித்தியானந்தா : கைலாசா நாட்டை உருவாக்க முடியுமா? - தனி நாடு உருவாக்க வழிமுறைகள் என்ன?

சரி, விஜயபிரியா நித்தியானந்தா என்ன பேசினார்,

“நான் இங்கு கைலாசாவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொள்கிறேன். நான் ஐநாவுக்கான நிரந்தர தூதர் விஜயபிரியா நித்தியானந்தா, கைலாசா என்பது இந்துக்களுக்கான முதல் இறையாண்மை நாடு. இந்துக்களின் உயரிய தலைவர் நித்தியானந்த பரமசிவத்தால் நிறுவப்பட்டது கைலாசா.” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்து மதத்தின் பழமையான பாரம்பரியம் மற்றும் வாழ்க்கைமுறையை மீட்டெடுப்பதற்காக நித்தியானந்தா துன்புறுத்தல்களை அனுபவிக்கிறார். அவர் போதனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; தான் பிறந்த நாட்டிலிருந்தும் நாடு கடத்தப்பட்டுள்ளார்,” என்று தெரிவித்தார்.

நித்தியானந்தா: "கைலாசா பிரதிநிதிகள் பேசியது நிராகரிப்பு" - ஐ.நா சபையின் நிலைப்பாடு என்ன?
கைலாசா சார்பாக ஐநாவில் பேசிய விஜய பிரியா நித்யானந்தா - யார் இவர்? பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com