நித்தியானந்தா : கைலாசா நாட்டை உருவாக்க முடியுமா? - தனி நாடு உருவாக்க வழிமுறைகள் என்ன?

ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, அந்த நிலப்பரப்பில் வாழ்வதற்கான மக்கள், அந்த நிலப்பரப்பையும் மக்களையும் நிர்வகிக்க ஓர் அரசாங்கம், மற்ற நாடுகளோடு நல்ல உறவு முறையை உருவாக்கும் திறன் ஆகிய நான்கு விஷயங்கள் இருந்தாலே போதுமானது.
நித்தியானந்தா : கைலாசா நாட்டை உருவாக்க முடியுமா? - தனி நாடு உருவாகும் வழிமுறைகள் என்ன?
நித்தியானந்தா : கைலாசா நாட்டை உருவாக்க முடியுமா? - தனி நாடு உருவாகும் வழிமுறைகள் என்ன?Nithyananda
Published on

பசிபிக் பெருங்கடலில் புகைன்வில்லே என்கிற தீவு, தொடர்ந்து பப்புவா நியூ கினியா நாட்டின் அதிகாரத்தின் கீழ் இருப்பதா அல்லது தனி சுதந்திர நாடாகப் பிரிவதா..? என்கிற வாக்கெடுப்பைக் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தியது. அதில் பெரும்பாலான மக்கள் தனி நாடாகப் பிரிந்து செல்ல ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.  

வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் புகைன்வில்லே தீவு தனி நாடாகப் பிரிந்து செல்ல அனுமதி கொடுக்கப்படும் என பப்புவா நியூ கினியாவின் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது அதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதே போல, தமிழகத்தைச் சேர்ந்த சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவும் தனக்கென ஒரு தனி நாட்டை பசிபிக் பெருங்கடலில் ஏதோ ஒரு பகுதியில் நிறுவி இருப்பதாகக் கூறப்படுகிறது.

 இப்படி உலகம் முழுக்க பல்வேறு பிராந்தியங்களும் பிரதேசங்களும் தனிநாடு கோருகிறார்கள்.  உதாரணத்திற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்து செல்ல கடலோனியா கோரிக்கை வைத்து வருகிறது.  குர்திஸ்தான் என்கிற பெயரில் தங்களுக்கென தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என குர்து இன மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.  பல தசாப்தங்களாக திபெத் தங்களைத் தனி நாடாக அறிவிக்குமாறு சீனாவோடு போராடிக் கொண்டிருக்கிறது.

நித்தியானந்தா : கைலாசா நாட்டை உருவாக்க முடியுமா? - தனி நாடு உருவாகும் வழிமுறைகள் என்ன?
குர்து மக்கள் : தனி நாடு -  மத்திய கிழக்கில் போராடும் ஒரு தேசிய இனத்தின் விறுவிறு வரலாறு!
குர்திஸ்தான்
குர்திஸ்தான்

இப்படி ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி ஒரு தனி நாடாக உருவாகிறது?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இதற்கென சரியான விதிமுறைகள் எதுவும் இல்லை.  ஒரு தனி நாடு உருவாக, ஒரு சில  அடிப்படைத் தேவைகளைத் தாண்டி,  புதிதாக உருவாகத் துடிக்கும் நாடு, மற்ற நாடுகளில் எத்தனை நாடுகளை, எத்தனை சர்வதேச அமைப்புகளை தங்களுக்குச் சாதகமாக ஆதரவளித்து அங்கீகரிக்க வைக்கிறது  என்பதைப் பொறுத்தே ஒரு தனி நாடு உருவாக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை ஒரு நாட்டை தனி நாடாக அங்கீகரிப்பது உலகின் மிகப்பெரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

நித்தியானந்தா : கைலாசா நாட்டை உருவாக்க முடியுமா? - தனி நாடு உருவாகும் வழிமுறைகள் என்ன?
குப்தா சகோதரர்கள் : உத்தர பிரதேசம் டூ தென் ஆப்ரிக்கா - உலகை மிரள வைத்த சகோ-களின் கதை

யார் ஒரு தனி நாட்டை அறிவிக்க முடியும்?

எதார்த்தத்தில் யார் வேண்டுமானாலும் தங்களுடைய  ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை  ஒரு தனி நாடாக அறிவித்துக் கொள்ள முடியும். கடந்த 2017 - 18 ஆம் ஆண்டில், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில், ஒரு கிராம சபை தங்களை ஒரு உயர்ந்த அதிகாரம் படைத்தவர்களாகக் கிட்டத்தட்ட தங்களை ஒரு தனி நாடாகக் கூறிக் கொண்டதாக சில வலைத்தளங்களில் செய்தி வெளியானது. 

somaliland
somaliland

சோமாலியாவில்  சோமாலிலேண்ட் கடந்த 1991 ஆம் ஆண்டிலிருந்து தங்களை ஒரு தனி நாடாக அழைத்துக் கொள்கிறது. அதேபோல செர்பியாவில் உள்ள கொசவோ கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தங்களை ஒரு தனி நாடாக அழைத்துக் கொள்கிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் இப்படி தங்களைத் தனி நாடாக அழைத்துக் கொள்பவர்களை மிகக் குறைவான நாடுகளே அங்கீகரித்து ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஒரு தனி நாடு அறிவிக்க வேண்டுமானால் என்னவெல்லாம் தேவை?

1933 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாண்டவீடியோ உடன்படிக்கையின் (Montevideo Convention) படி  நான்கு விஷயங்கள் இருந்தால் போதும் ஒரு தனி நாட்டை அறிவித்துக் கொள்ளலாம். 

ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு,  அந்த நிலப்பரப்பில் வாழ்வதற்கான மக்கள், அந்த நிலப்பரப்பையும் மக்களையும் நிர்வகிக்க ஓர் அரசாங்கம்,  மற்ற நாடுகளோடு நல்ல உறவு முறையை உருவாக்கும் திறன் ஆகிய நான்கு விஷயங்கள் இருந்தாலே போதுமானது.

 மாண்டவீடியோ உடன்படிக்கையின்
மாண்டவீடியோ உடன்படிக்கையின்

1945 ஆம் ஆண்டு சுய நிர்ணயம் செய்து கொள்வது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் சேர்க்கப்பட்டது.  எனவே ஒரு நிலப்பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும், யாரால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை அந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் தீர்மானிப்பதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்பதே பொருள்.

ஒரு சில காலணி ஆதிக்க நாடுகள் உலகில் உள்ள பல நாடுகளையும் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது கொண்டுவரப்பட்டது தான் சுயநிர்ணய சாசனம். எனவே அப்போது சுய நிர்ணயம் கூறியவர்கள் அல்லது தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்கிற உரிமையைப் பயன்படுத்தி தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்து கொள்வது சற்று எளிதாக இருந்தது.

ஐ.நா
ஐ.நா

ஆனால் இன்று இந்த சுய நிர்ணயம் மற்றும் தங்களை யார் ஆட்சி செய்வது என்கிற உரிமை குறித்த விஷயங்கள் மிகச் சிக்கலான இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.  ஒரு நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மிக அதிக அளவில் அதிகாரம் குவிந்திருப்பதும்,  அல்லது ஒரு நாட்டின் ஒரு சில இடங்களில் மட்டும் நீண்ட காலமாக ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் பிரச்சனைகள் நடந்து வருவதும் அல்லது இரண்டும் ஒரே நாட்டுக்குள் நிகழ்வதும் நம்மால் நிறையப் பார்க்க முடிகிறது.

 இதற்கு நல்ல உதாரணம் சீனா - தைவான் பிரச்சனையைக் குறிப்பிடலாம். தைவான் நாடு தங்களை ஒரு தனி நாடாகக் கருதுகிறது. அப்படித்தான் தங்களை வெளி உலகுக்கும் சொல்லிக் கொள்கிறது. ஆனால் தைவான் நாட்டை உலக அளவில் சுமார் 14 நாடுகள் மட்டுமே தனி நாடாக அங்கீகரித்துள்ளன. 

நித்தியானந்தா : கைலாசா நாட்டை உருவாக்க முடியுமா? - தனி நாடு உருவாகும் வழிமுறைகள் என்ன?
தைவான் வரலாறு : இந்த நாடு உருவானது எப்படி? இந்த தீவுக்கு சீனாவுடன் என்ன பகை?

ஏன் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது?

ஒரு நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு அங்கீகரிக்கிறது என்றால் அவர்களால் உலக வங்கி சர்வதேச பன்னாட்டு நிதியம் என்றழைக்கப்படும் ஐ எம் எஃப் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளும் ஆலோசனைகளும் நிறையக் கிடைக்கும். 

அந்நாட்டின் கரன்சி நோட்டுகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.  அதைக் கொண்டு உலக அளவில் வர்த்தகங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.  எனவேதான் எல்லா நாடுகள் எப்படியாவது அடித்துப் பிடித்து ஐக்கிய நாடுகள் சபையில் தங்கள் நாட்டை அங்கீகரித்துக் கொள்ள விரும்புகிறது.

நித்தியானந்தா : கைலாசா நாட்டை உருவாக்க முடியுமா? - தனி நாடு உருவாகும் வழிமுறைகள் என்ன?
Tamil Trekker: ஆப்ரிக்காவில் பபூன் வேட்டை; தாலிபான்களுடன் டீ- உலகைசுற்றும் புவனிதரன் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com