நார்வே அரச குடும்பத்து இளவரசி மார்த்தா லூயிஸ்க்கு அமெரிக்கர் ஒருவருடன் காதல் ஏற்பட்டதால் அரச பட்டத்தை துறந்துள்ளார்.
51 வயது இளவரசியான மார்த்தா லூயிஸ், தன்னைத் தானே ஷாமன் எனக் கூறிக்கொள்ளும் டுரெக் வெர்ரெட் என்பவருடன் சமீபத்தில் திருமண நிச்சயம் செய்துகொண்டார்.
டுரெக் வெர்ரெட் Spirit Hacking என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இவர் தான் 6வது தலைமுறை ஷாமன் என்று கூறிக்கொள்கிறார்.
மேலும், “Spirit Optimizer” என்ற பதக்கத்தையும் 222 டாலர் விலைக்கு விற்று வருகிறார். இந்த பதக்கம், தான் கோவிட் 19-ல் இருந்து விடுபட உதவியதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த ஷாமனுடன் சேர்ந்து மாற்று மருத்துவ வியாபாரம் செய்து வருகிறார் இளவரசி மார்த்தா லூயிஸ். இதுவே இவர்கள் காதல் மலரவும் உதவியிருக்கிறது.
மார்த்தா லூயிஸ் - டுரெக் வெர்ரட் திருமண நிச்சயம் அரச குடும்பத்தின் மீது மக்களுக்கு இருந்த மதிப்பை 17% வரை குறைத்திருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகிறது.
"நார்வே ராயல் குடும்பத்தின் அமைதியைக் காக்கும் பொருட்டு நான் எனது அரசக் கடமைகளை துறக்கிறேன்" என அறிவித்தார் மார்த்தா.
இனி அவர் அரச பட்டத்தை எங்குமே உபயோகிக்க அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே தங்களது மாற்று மருத்துவ முறைகளை பிரபலப்படுத்த மார்த்தா அரசப்பட்டத்தை உபயோகித்ததாக குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாற்று மருத்துவம் என்பது சாதாரண ஊசி, மாத்திரைகளைக் கடந்த மருத்துவமுறைகளை பின்பற்றுவது. அக்குபஞ்சர், தியானம், மூலிகைகள் என இதில் பல உள்ளன. ஷாமன் என்பவர் அமெரிக்க பழங்குடி மக்களுள் குறி சொல்லும் சாமியார் ஆவார்.
இளவரசியும் அவரது ஷாமன் காதலரும் திருமணத்துக்கு பிறகு கலிபோர்னியாவுக்கு குடிபெயர முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இளவரசிக்கு முன்னாள் கணவருடன் பெற்றுக்கொண்ட 3 குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust