அங்கோர் வாட் மட்டுமல்ல; கம்போடியாவில் இருக்கும் சர்வதேச சுற்றுலாதலங்கள் பற்றி தெரியுமா?

ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மக்கள் அங்கோர் வாட்டைக் காண கம்போடியாவுக்கு செல்கின்றனர். ஆனால் கம்போடியா என்பது அங்கோர்வாட் மட்டுமல்ல அந்நாட்டில் உள்ள பிற முக்கியமான சுற்றுலாத்தலங்கள் குறித்துக் காணலாம்.
அங்கோர் வாட் மட்டுமல்ல; கம்போடியாவில் இருக்கும் சர்வதேச சுற்றுலாதலங்கள் பற்றி தெரியுமா?
அங்கோர் வாட் மட்டுமல்ல; கம்போடியாவில் இருக்கும் சர்வதேச சுற்றுலாதலங்கள் பற்றி தெரியுமா?Cambodia / Canva
Published on

கம்போடியாவுக்கு சுற்றுலா செல்வது என முடிவு செய்தாலே நம் நினைவுக்கு வருவது அங்கோர் வாட்தான். 12ம் நூற்றாண்டிலேயே மிகவும் கச்சிதமான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்ட நகரம் அது.

அங்கோர்வாட் சூரிய கோவிலுக்கு இணையான கட்டுமானங்கள் எதுவும் அந்த காலத்தில் இருந்ததில்லை. மிகவும் அழகான சிற்பங்களுடன் கூடிய வேலைப்பாடுகள் இன்றளவும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மக்கள் அங்கோர் வாட்டைக் காண கம்போடியாவுக்கு செல்கின்றனர். ஆனால் கம்போடியா என்பது அங்கோர்வாட் மட்டுமல்ல அந்நாட்டில் உள்ள பிற முக்கியமான சுற்றுலாத்தலங்கள் குறித்துக் காணலாம்.

பட்டாம்பாங் (Battambang)

வட கிழக்கு அங்கோர் வாட்டில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தளம் பட்டாம்பாங். இங்குள்ள பசுமையான சூழல் இயற்கையின் கலைநயத்தை உணர்த்தும்.

இங்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் மூங்கில் ரயிலில் செல்ல வேண்டும். அது நிச்சயம் புதுமையான அனுபவமாக இருக்கும்.

மினி அங்கோர் வாட் என அறியப்படும் Wat Banan temple இங்கு இருக்கிறது. நிச்சயம் இதையும் சுற்றிப்பார்க்கலாம்.

கோ ரோங் தீவுக்கூட்டம் (koh rong archipelago)

நீங்கள் ஒரு பீச் பெர்சனாக இருந்தால் நிச்சயம் இந்த இடத்தைச் சுற்றிப்பார்க்கலாம். கடல், காற்று, மணல், சூரியனை ரசிப்பவர்களுக்கு இளைப்பாற இது சிறந்த இடமாக இருக்கும்.

இந்த தெளிவான கடல் வண்ணமயமான பவளப்பாறைகளுக்கு வீடாக திகழ்கிறது. கடலுக்குள் குதித்து ஆழ்கடலை ரசிக்கவும், இரவில் நீல நிறத்தில் ஒளிரும் கடலில் மாயாஜாலத்தை உணரவும் இது சிறந்த இடமாக இருக்கும்.

அங்கோர் வாட் மட்டுமல்ல; கம்போடியாவில் இருக்கும் சர்வதேச சுற்றுலாதலங்கள் பற்றி தெரியுமா?
மைக்கேல் ஜாக்சன் : கலக கலைஞனின் அறியப்படாத வரலாறு | பகுதி - 1

காம்பாட் (Kampot)

தேயுக் சோ நதியால் சூழப்பட்ட இந்த பகுதி உற்சாகமளிக்கக் கூடியது. கடுகு தோட்டங்கள் நிறைந்திருக்கும் இங்கு, அவற்றை பார்வையிடவும் சுற்றுலாப்பகுதிகளுக்கு அனுமதி கிடைக்கிறது.

இந்த பகுதியின் உணவு பிரபலம். இங்குள்ள பிரஞ்சு காலனித்துவ கட்டடங்களையும் பார்க்கலாம்.

மொண்டுல்கிரி (Mondulkiri)

வடகிழக்கு கம்போடியாவின் முழுமையான அழகை ரசிக்க வேண்டுமானால் மொண்டுல்கிரி செல்லாமல் இருக்க முடியாது. மற்ற சுற்றுலாப்பகுதிகளை விட இது மாறுபட்டது.

பசுமையான இந்த இடத்தில் அருவிகளுடன் மலைவாழ் மக்களின் வாழ்வையும் நாம் ரசிக்க முடியும். இது ஒரு யானைகள் காப்பகமாகவும் இருப்பதனால் த்ரில்லான பயணமாகவும் இருக்கும்.

அங்கோர் வாட் மட்டுமல்ல; கம்போடியாவில் இருக்கும் சர்வதேச சுற்றுலாதலங்கள் பற்றி தெரியுமா?
ஜல் மஹால்: நீருக்குள் இருக்கும் முகலாயக் கட்டிடக் கலை - அரண்மனையின் அடடே கதை!

கிராட்டியே (Kratié)

மீகாங் என்ற ஆற்றின் படுகையில் இந்த நதி அமைந்துள்ளது. கம்போடியாவின் கிராமப்புற வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள இதைவிடச் சிறந்த இடம் இருக்க முடியாது.

இந்த ஆற்றில் படகுபயணம் மேற்கொள்வது இனிமையான அனுபவமாக இருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் Irrawaddy dolphins மற்றும் சில அரியவகை உயிரினங்களைப் பார்க்கலாம்.

இவைத்தவிர கம்போடியாவின் கலாச்சாரங்களை எடுத்துரைக்கும் பல இடங்கள் இருக்கின்றன. பிரஞ்சு காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட மலைநகரம் Bokor Hill Station வியக்க வைப்பது நிச்சயம்.

கலாச்சாரத்துடன் மலையேற்றம், காடுகளுக்குள் நடைபயணம், ஏரியில் படகு சவாரி, உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடல் என Banlung-ல் அனுபவிக்க பல விஷயங்கள் இருக்கின்றன.

அங்கோர் வாட் போல மற்றொரு அதிசயமான கோவில் Preah Vihear.

அங்கோர் வாட் மட்டுமல்ல; கம்போடியாவில் இருக்கும் சர்வதேச சுற்றுலாதலங்கள் பற்றி தெரியுமா?
கம்போடியா அங்கோர் வாட்: பிரமிக்க வைக்கும் பொக்கிஷம் - சோழ மன்னர்கள் கட்டியதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com