2020ல் தற்கொலை செய்து கொண்ட எழுத்தாளர்? உயிருடன் இருப்பதாக அதிர்ச்சி தகவல் - என்ன நடந்தது?

கடந்த ஜனவரி 6 அன்று, தான் இறக்கவில்லை என்றும், நலமாகவும் தன் வாழ்வில் நல்ல இடத்தில் இருப்பதாகவும் சமீபத்தில் கூறியுள்ளார் சூசன்.
Dead
DeadTwitter

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாக கருதப்பட்ட நாவலாசிரியர் தான் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூசன் மீச்சன் என்ற ஆங்கில நாவலாசிரியர் கடந்த 2020 ஆம் ஆண்டு மற்ற நாவலாசிரியர்கள் அவரை விமர்சிப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதனால் தனக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு வந்த ஒரு சில நாட்களிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவலை சூசனின் மகள் சூசனுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Dead
Facebook: கடனிலிருந்து தப்பிக்க இறந்துவிட்டதாக நாடகம்; வெளியான உண்மை - என்ன நடந்தது?

இதனால் பெரும் சோகத்திற்கு உள்ளான அவரது ரசிகர்கள், சூசனுடைய இறுதிச்சடங்கிற்கு நிதி திரட்டி அவரது குடும்பத்தினரிடம் கொடுத்தனர்.

அவரது புத்தகங்களை இலவசமாக வாசகர்களுக்கு விநியோகித்தனர். தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு, நன்கொடை பெறுதல் போன்ற சம்பவம் எல்லாம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 6 அன்று, தான் இறக்கவில்லை என்றும், நலமாகவும் தன் வாழ்வில் நல்ல இடத்தில் இருப்பதாகவும் சமீபத்தில் கூறியுள்ளார் சூசன். இது ரசிகர்களை கடுங்கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

“இதை நான் உங்களிடம் எப்படி தெரிவிப்பது என்பது குறித்து பல நாட்களாக ஆலோசித்து கொண்டிருந்தேன். உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கும், நான் கிட்ட தட்ட தற்கொலையின் விளிம்பிற்கே சென்றுவிட்டேன்

என் குடும்பத்தினர் நிறைய சங்கடங்களை எதிர்கொண்டனர். இதனால் என்னைக் காப்பாற்ற என்ன செய்யவேண்டுமோ அதனை செய்தனர்” என்று கூறியிருக்கிறார் சூசன்.

அவரது மன நிலையை புரிந்துகொண்டு அவரது குடும்பத்தினர் தனக்கு உதவியதாக தெரிவித்த எழுத்தாளர், மீண்டும் எழுதப்போவதாக தெரிவித்திருக்கிறார்

தங்களை ஏமாற்றி பணம் பறித்ததாகவும், தங்கள் உணர்வுகளுடன் விளையாடியதாகவும் ரசிகர்கள் அவர் மீது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்

Dead
இறந்துவிட்டதாக நாடகம் ஆடிய கணவன்; கைது செய்யப்பட்ட மனைவி - ஒரு ஷாக் ஸ்டோரி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com