இறந்துவிட்டதாக நாடகம் ஆடிய கணவன்; கைது செய்யப்பட்ட மனைவி - ஒரு ஷாக் ஸ்டோரி

அப்போது அதிர்ச்சிகர செய்தி ஒன்றை அறிகிறார் ரோமன். தன் மனைவி, தன்னை கொலை செய்ய ஒரு ஹிட் மேனை ஏற்பாடு செய்திருப்பதாக அறிகிறார் அவர்!
இறந்துவிட்டதாக நாடகம் ஆடிய கணவன்; கைது செய்யப்பட்ட மனைவி - ஒரு ஷாக் ஸ்டோரி
இறந்துவிட்டதாக நாடகம் ஆடிய கணவன்; கைது செய்யப்பட்ட மனைவி - ஒரு ஷாக் ஸ்டோரிட்விட்டர்
Published on

மனைவி தன்னை கொலை செய்ய ஆள் ஏற்பாடு செய்ததால், இறந்தது போல நடித்து தப்பித்திருக்கிறார் ரோமன் சோசா என்ற குத்துச்சண்டை வீரர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வாக்கில், பிரபல குத்துச்சண்டை வீரர் ரோமன் சோசா என்பவர் இறந்து கிடக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.

இதனையடுத்து அவரது மனைவி கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

என்ன நடந்தது? இறந்துவிட்டது போல இவர் நடிக்க என்ன காரணம்?

திருமணம் மற்றும் விவாகரத்து:

குத்துச்சண்டை வீரரான ரோமன், கடந்த 2007ல் தனது மனைவி லுலுவை சந்தித்திருக்கிறார். லுலு மெக்சிகோவை சேர்ந்தவர். சில நாட்களிலேயே இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

திருமணமான ஒரு சில நாட்களிலேயே அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் வரத் தொடங்கியது.

இந்நிலையில், திருமணமான மூன்றே ஆண்டுகளில் லுலுவிற்கு அமெரிக்க குடியுரிமையும் கிடைத்தது.

அமெரிக்க குடியுரிமையை பெற்றபின்னர், தன் மனைவியின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட்டதாக கூறினார் ரோமன்.

“நான் இப்போது அமெரிக்காவை சேர்ந்தவள். உங்களுக்கு இருக்கும் எல்லா உரிமையும் இனி எனக்கும் இருக்கிறது” என லுலு ரோமனிடம் தெரிவித்திருக்கிறார்.

அப்போது தான், தன் மேல் லுலுவிற்கு காதல் இல்லை என்பதும் புரிந்ததாக ரோமன் கூறினார்.

இதனால், இருவரும் பிரிய முடிவெடுத்து விவாகரத்து வழக்கு தொடுக்கப்பட்டது.

இறந்துவிட்டதாக நாடகம் ஆடிய கணவன்; கைது செய்யப்பட்ட மனைவி - ஒரு ஷாக் ஸ்டோரி
சென்னையில் மினி ராபின் ஹுட் : 10 ஆண்டுகள் திருடிய நபர் - சிக்கியது எப்படி?

கொலை முயற்சி:

விவாகரத்து வழக்கு நடந்துக்கொண்டிருக்கிறது. எனினும், தன் மனைவியை பிரிய மனமில்லாமல், எப்படியாவது சமாதானம் செய்து சேர்ந்து வாழ முயற்சிகளை மேற்கொள்கிறார் ரோமன்.

அப்போது அதிர்ச்சிகர செய்தி ஒன்றை அறிகிறார் ரோமன். தன் மனைவி, தன்னை கொலை செய்ய ஒரு ஹிட் மேனை ஏற்பாடு செய்திருப்பதாக அறிகிறார் அவர்!

முதலில் இதனை அவர் நம்பவில்லை. ஆனால், வழக்கை விசாரித்தவர்கள், இந்த செய்தியை அறிந்து, அவரிடம் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

கொலை செய்ய நண்பனையே நியமித்த கொடூரம்:

லுலு ரோமனை கொலை செய்ய ஏற்பாடு செய்திருந்த நபர், ரோமனின் நண்பர்களில் ஒருவர். அவரது பெயர் கஸ்தாவோ. கஸ்தாவோ ரோமனிடம் இந்த உண்மையை தெரிவித்தார்.

”இதை அறிந்ததும், எனக்கு கோபம், குழப்பம், அழுகை என சொல்லமுடியாத உணர்வுகள் ஏற்பட்டன. ஆனால், இன்னொரு புறம், என்னை கொல்ல முயற்சித்த ஒருத்தியுடன் நான் சேர்ந்து வாழவேண்டுமா என்ற அச்சமும் இருந்தது” என்றார் ரோமன்.

இறந்துவிட்டதாக நாடகம் ஆடிய கணவன்; கைது செய்யப்பட்ட மனைவி - ஒரு ஷாக் ஸ்டோரி
Mary Bell: பாலியல் தொழிலாளியின் மகள் சீரியல் கில்லரான கதை - ஒரு விறுவிறு வரலாறு
Keerthanaa Ravikumar

கொலை முயற்சி ஏன்?

ரோமனின் கூற்றுப்படி, அமெரிக்க குடியுரிமையை பெற்ற பின்னர், மெல்ல ரோமனின் பிசினஸ்களை தன் வசப்படுத்தினார் லுலு.

ஆனால், சில நாட்களிலேயே நஷ்டத்தை சந்தித்ததால், பணவரத்து குறைந்துள்ளது. இதனால், ரோமன் இறந்தால், தனக்கு நிறைய பணம் கிடைக்கும் என்பதால் தன்னை கொலை செய்ய அவர் நினைத்திருக்கலாம் என்றார் ரோமன்.

மேலும், விவாகரத்து, லுலுவிற்கு சாதகமாக அமையவில்லை. இதனால், ரோமன் தன்னை துன்புறுத்தியதாகவும், குடித்துவிட்டு வந்து தன்னை கொடுமை[ப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் லுலு

ஆதாரம் போதவில்லை:

இந்நிலையில், ரோமனின் மனைவியை குற்றவாளி என நிரூபிக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.

அதன்படி, முதலில் லுலு கஸ்தாவோவுடன் அடுத்த முறை பேசியபோது, அந்த கலந்துரையாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட ஃபோன்காலை ஹவுஸ்டன் நகர காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால், லுலுவை கைது செய்ய இந்த ஆதாரம் போதவில்லை எனக் காவல்துறையினர் கூறினர்.

இறந்துவிட்டதாக நாடகம்:

இதனால், ரோமன் இறந்துவிட்டதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.

அதாவது, லுலு ஏற்பாடு செய்திருந்த ஹிட் மேன், ரோமனை சுட்டு கொன்றது போல சித்தரிக்கப்பட்டது. FBIயின் உதவியுடன், சுட்டுக்கொல்லப்பட்டது போல அவருக்கு மேக் அப் செய்யப்பட்டிருந்தது.

“அந்த புகைப்படத்தை இப்போது பார்க்கும்போதும் எனக்கு நடுங்குகிறது. என் வாழ்நாளில் நான் செய்த மிக கடினமான காரியம் அது” என்று கூறியிருந்தார் ரோமன்.

லுலு ஏற்பாடு செய்திருந்த ஹிட் மேன் கஸ்தாவோவை போல காவல்துறை அதிகாரி அண்டர்கவரில் சென்று லுலுவிடம் செய்தியை தெரிவித்திருக்கிறார்.

அப்போது தான் லுலு சிக்கிக்கொண்டுள்ளார்.

அக்டோபர் 2016 ஆம் ஆண்டு, லுலு மீதான் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தனது இந்த அனுபவத்தை புத்தகமாக வெளியிட்டார் ரோமன். “I Walked on My Own Grave" என தலைப்பிடப்பட்ட அந்த புத்தகம் 2019ஆம் ஆண்டு வெளியானது.

இறந்துவிட்டதாக நாடகம் ஆடிய கணவன்; கைது செய்யப்பட்ட மனைவி - ஒரு ஷாக் ஸ்டோரி
7 வருடத்திற்கு முன் கொலை செய்யப்பட்ட பெண்; உயிருடன் இருப்பதை கண்டறிந்த போலீஸ் - எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com