ஒலெக்சி வடாடுர்ஸ்கி
ஒலெக்சி வடாடுர்ஸ்கிடிவிட்டர்

உக்ரைன் நாட்டின் பெரும் பணக்காரர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழப்பு - என்ன நடந்தது?

மிகோலேவில் இதுவரை நடந்த ரஷ்ய தாக்குதல்களில் இதுதான் மிக மோசமான தாக்குதல் என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
Published on

உக்ரைனின் தெற்கு நகரமான மிகோலேவில் ரஷ்யா நடத்திய தீவிர தாக்குதலில் உக்ரைனின் பணக்காரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் உக்ரைனின் தானிய ஏற்றுமதியில் பெரும் பங்காற்றியவர் என்றும் அந்நாட்டில் பல வளர்ச்சிக்கு உதவியவர் என்றும் கூறப்படுகிறது. எனவே உக்ரைனுக்கு இது மிகப்பெரிய இழப்பு என அந்நாட்டின் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

74 வயது ஒலெக்சி வடாடுர்ஸ்கி மற்றும் அவரின் மனைவி ரைசாவின் வீட்டில் இரவில் நடந்த ரஷ்ய தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டனர்.

ஒலெக்சி வடாடுர்ஸ்கி, நிபுலன் என்னும் நிறுவனத்தின் உரிமையாளர். இந்த நிறுவனம் தானியங்கள் ஏற்றுமதியில் ஈடுபடும். அதுமட்டுமல்லாமல் ஒலெக்சி உக்ரைனின் நாயகன் என்னும் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மிகோலேவில் இதுவரை நடந்த ரஷ்ய தாக்குதல்களில் இதுதான் மிக மோசமான தாக்குதல் என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

கருங்கடலில் இருக்கும் உக்ரைனின் மிகப்பெரிய துறைமுகத்திற்கான முக்கிய பாதை மிகோலேவ் நகரத்தில் அமைந்துள்ளது என்பதால் இந்த நகரம் ரஷ்ய தாக்குதலுக்கு அடிக்கடி உட்பட்டு வருகிறது.

ஒலெக்சி ரஷ்ய படை தாக்குதலால் எதேச்சையாக உயிரிழக்கவில்லை. அவர் குறி வைத்தே தாக்கப்பட்டார் என உறுதியாக நம்புகிறது உக்ரைன்.

உக்ரைனின் விவசாயம், தானியங்கள் ஏற்றுமதி, கப்பல் தள வளர்ச்சி ஆகியவற்றில் ஒலெக்சி பெரும் பங்காற்றியுள்ளார் என கூறப்படுகிறது.

ஒலெக்சி வடாடுர்ஸ்கி
உக்ரைன் ரஷ்யா போர்: இறுதியில் ரஷ்யா வீழ வாய்ப்பு இருக்கிறதா? - அமெரிக்கா கூறுவது என்ன?

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் ஆலோசகர் மிகைலோ போடோலிக், ஒலெக்சி வேண்டுமென்றே ரஷ்ய படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

ரஷ்ய ஏவுகணை ஒன்று ஒலெக்சி இல்லத்தின் படுக்கை அறையை குறி வைத்து செலுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல ஒலெக்சியின் நிபுலன் நிறுவனம் பல தானிய கிடங்குகளைக் கட்டமைத்துள்ளது. அதேபோல தானியங்கள் ஏற்றுமதி செய்வதற்கான பல கட்டமைப்பு வசதிகளையும் அந்நிறுவனம் கட்டமைத்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுமே கோதுமை மற்றும் பிற முக்கிய தானிய ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தனது தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாது என்பதற்காக இந்த தாக்குதல் தொடங்கப்பட்டது.

தானிய ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும் இருநாடுகள் அதை நிறுத்தியுள்ளதால் உலகளவில் ஒரு உணவு நெருக்கடி உருவாகி வருகிறது.

எனவே ஐநா இதில் தலையிட்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. இருநாடுகளும் துருக்கியில் வைத்து இந்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டன. ஆனால் அடுத்த நாளே உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதனால் இந்த ஒப்பந்தத்தின்படி தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தடைப்பட்டது.

அதேபோல துருக்கியில் சில பாதுகாப்பு சோதனைகளுக்காகவும் ஏற்றுமதி தடைப்பட்டது. இருப்பினும் தானியங்கள் அடங்கிய முதல் கப்பல் திங்களன்று ஒடேசாவை விட்டு வெளியேறும் என்றும் துருக்கி தெரிவித்துள்ளது.

ஒலெக்சி வடாடுர்ஸ்கி
ரஷ்யா இணைக்கப் போகும் உக்ரைன் நாட்டின் பகுதிகள், கோபமான அமெரிக்கா - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com