உலக அளவில் பிரபலமான எதிர்காலத்தை கணிப்பவர் பாபா வாங்கா. வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா என்ற பெயருடைய இவர் பாபா வாங்கா என்றும்அறியப்படுகிறார்.
பல்கேரியாவைச் சேர்ந்த இவர் 1970 மற்றும் 80களில் மிகவும் பிரபலமாக இருந்தவர். அந்த நேரத்தில் அவர் கணித்ததாக கூறப்படும் பல விஷயங்கள் இப்போது நடப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல் மற்றும் கருப்பின ஆப்ரிக்க அமெரிக்கர் (ஒபாமா) ஜனாதிபதியாவது முதலிய விஷயங்களை அவர் முன்னதாக கணித்திருந்ததாக கூறுகின்றனர்.
எண் அடிப்படையில் கூற வேண்டுமானால் பாபா வாங்கா கூறிய விஷயங்களில் சுமார் 85% கணிப்புகள் அப்படியே நடந்துள்ளதாக வியான் தளம் கூறுகிறது.
2022ல் ஆஸ்திரேலியா மற்றும் சில ஆசிய நாடுகளில் பெருவெள்ளம் ஏற்படும் என அவர் கணித்திருந்தால் அதற்கு ஏற்ப ஆஸ்திரேலியாவிலும் நிலைமை மோசமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.
2023ஆம் ஆண்டில் பூமியின் சுற்று வட்டப்பாதை மாற்றம் காணும், 2028ஆம் ஆண்டில் மனிதன் வெள்ளி கோளுக்கு பயணிப்பான், 2046 காலகட்டத்தில் மனிதர்களின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளாக இருக்கும், 2100ஆம் ஆண்டு வாக்கில் உலகில் இருள் என்பதே இருக்காது, செயற்கை சூரியன் மூலம் உலகின் மறுபக்கத்துக்கு ஒளிகொடுக்கப்படும் என்பன அவரது பிரபலமான கணிப்புகள்.
பாபா வாங்கா கூறியதிலேயே மிகவும் முக்கியமானதாகவும், ஒரு சிலரால் ஆபத்தானதாகவும் கருதப்படும் கணிப்பு இன்னும் 50 ஆண்டுகளுக்கும் குறைவான தொலைவில் இருக்கிறது.
2040 - 43க்குள் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இஸ்லாம் மயமாகும் என்பதும் அமெரிக்கா சுற்று சூழலை அழிக்கும் கருவியை ('environmental destructor') கண்டுபிடிக்கும் என்பதும் தான் அந்த கணிப்புகள்.
இந்த கணிப்புகள் அனைத்தும் இப்போது மிகவும் தீவிரமானதாகவும், அசாதாரணமானதாகவும் தெரிந்தாலும், இவை நிறைவேறக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அரபு நாடுகள் ஐரோப்பாவில் புற்று நோயை பரவ வைக்கும் என்றும் பாபா வாங்கா கணித்ததாக கூறப்படுகிறது. இது பாபா வாங்கா கணித்தது அல்ல, இஸ்லாமிய வெறுப்பின் வெளிப்பாடே இது போன்ற வதந்திகளாக பரவுகிறது என்ற கருத்தும் இருக்கிறது.
சோவியத் ரஷ்யா 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று அவர் கணித்தார் ஆனால் அது ஏறுக்கு மாறாக நடந்தது. மூன்றாம் உலகப் போர் 2010ல் தொடங்கும் என்ற கணிப்பும் பொய்த்துப் போனது.
பாபா வாங்காவின் கணிப்புகள் பல அவர் கூறியதே அல்ல. அவரை வைத்து வியாபாரம் பார்க்க சீடர்கள் செய்த சதிவேலை என்ற கருத்தும் இருந்து வருவதால் நெகட்டிவான கணிப்புகள் குறித்து நாம் அஞ்ச அவசியமில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust