எரியும் இலங்கை : ”10 % ஃபசில் ராஜபக்‌ஷே” - எதிர்கட்சிகள் விமர்சனம்

ராஜபக்‌ஷே குடும்பம், இலங்கை அரசின் முக்கிய பதவிகளில் இருப்பது மக்களுக்கு பெரும் அதிருப்தியை கொடுத்திருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு, ராஜ்பக்‌ஷே சகோதரர்களின் தவறான பொருளாதாரக் கொள்கையும், ஊழலுமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம்.
Sri Lanka Economic Crisis
Sri Lanka Economic CrisisNewsSense
Published on

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். தற்போதைய சூழல் எப்படி இருக்கிறது? அடுத்தடுத்து அங்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்களைப் பார்க்கலாம்!

Sri Lanka Economic Crisis
எரியும் இலங்கை : தீவு தேசத்தில் அவசர நிலை பிரகடனம் - Latest 10 Updates
Sri Lanka Economic Crisis
எரியும் இலங்கை : நெருக்கடி, போராட்டம் - நேற்று இரவு என்ன நடந்தது? | விரிவான தகவல்கள்
Basil
BasilNewsSense

1. இலங்கையில் கடந்த சில நாட்களாக டீசல் தட்டுப்பாடு அதிகரித்தது. டீசல் இல்லாததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பேருந்து மற்றும் தனியார் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

2. டீசல் தட்டுப்பாட்டிலிருந்து ஓரளவு ஆறுதல் தரும் வகையில், இன்று $500 மில்லியன் மதிப்பிலான, 40,000 டன் டீசல் இந்தியாவிடமிருந்து இலங்கை சென்று சேர்ந்தது.

3. இலங்கையில் நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று, ஆளும் அரசின் முக்கிய அமைச்சரான ரோஷன் ரணசிங்கே பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

4. தலைநகர் கொழும்பில் தொடங்கிய போராட்டம், நாட்டின் இதர பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.

5. அதிபர் கோத்பயா ராஜபக்‌ஷேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருவதால், வன்முறையில் ஈடுபடுவோரை விசாரணையின்றி கைது செய்ய ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது!

6. ராஜபக்‌ஷே குடும்பமும் அவர்கள் கையில் இருக்கும் அதிகாரமும்:

- சமல் ராஜபக்‌ஷே - மூத்த சகோதரர் - விவசாயத்துறை அமைச்சர்!

- மகிந்தா ராஜபக்‌ஷே - இரண்டாவது சகோதரர் - பிரதமர்

- கோத்தபய ராஜபக்‌ஷே மூன்றாவது சகோதரர் - இலங்கை அதிபர்

- ஃபசில் ராஜபக்‌ஷே - நான்காவது சகோதரர் - நிதியமைச்சர்

- நமல் ராஜபக்‌ஷே - மகிந்தாவின் மூத்த மகன் - விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர்

Sri Lanka Economic Crisis
எரியும் இலங்கை : தீவுநாட்டை சிதைத்த ராஜபக்சே சகோதரர்களின் கதை
Sri Lanka Economic Crisis
இலங்கை : இன்றைய நெருக்கடிக்கு 5 முக்கிய காரணங்கள்
NewsSense

7. ராஜபக்‌ஷே குடும்பம், இலங்கை அரசின் முக்கிய பதவிகளில் இருப்பது மக்களுக்கு பெரும் அதிருப்தியை கொடுத்திருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு, ராஜ்பக்‌ஷே சகோதரர்களின் தவறான பொருளாதாரக் கொள்கையும், ஊழலுமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம்.

8. நிதியமைச்சர் ஃபசில் ராஜபக்‌ஷேவை ”10 பெர்சென்ட்” என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறார். அரசு கான்டிராக்ட்களில் 10% கமிஷன் வாங்குவார் என்று அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது!

9. இலங்கைக்கு இந்தியா 2022-ம் ஆண்டில் மட்டும் $2.4 பில்லியன் அளவுக்குக் கடன் உதவி கொடுத்திருக்கிறது.

10. இலங்கையில் விலைவாசி 17% உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருட்களின் விலைவாசி 30% உயர்ந்திருக்கிறது. ஒரு குடும்பம் நாள் ஒன்றை வாழ இலங்கை ரூபாயில் குறைந்தபட்சம் 1000 தேவைப்படுகிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com