Travel: ஒரே நாளில் ஐரோப்பாவின் இந்த இடங்களை பார்த்து விட முடியுமா?
சுற்றுலா செல்வோருக்கு நிறைய இடங்களை பார்க்கவேண்டும் என்ற பேராசை இருக்கும். இதில் தவறு எதும் இல்லை தான். கிடைக்கும் நேரத்தில் உலகின் பல்வேறு மூலைகளுக்கு சென்று, பலரை அறிந்துகொள்ள வேண்டும், தங்களை தாங்களே கண்டுபிடிக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்புகள் இருக்கும்.
இது உலக சுற்றுலாவாக இருந்தாலும் சரி, உள்ளூர் சுற்றுலாவாக இருந்தாலும் சரி.
அதனால் ஒரே நாளில் பல இடங்களை பார்க்க்வேண்டும் எனவும் சிலர் முயற்சிப்பர்.
ஒரு வேளை நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் ஐரோப்பாவாக இருந்தால், ஒரே நாளில் சுற்றிப்பார்க்க என்ன செய்யலாம்? ஒரு நாளைக்குள் யூரோப்பின் எந்தெந்த இடங்களை கவர் செய்திட முடியும்? இந்த பதிவில்
எங்கு தொடங்கலாம்?
உங்கள் ஒரு நாள் ஐரோப்பா ட்ரிப்பை ஜெர்மனியில் இருந்து தொடங்குவது சிறந்ததாக இருக்கும். ஜெர்மனியிலும் நைட்லைஃப் நன்றாக இருக்கும். வரலாற்று சிறப்புமிக்க தலங்களும், அழகிய பிரம்மாண்ட கட்டிடங்களும் இங்கு உள்ளன.
மற்றுமொரு முக்கிய காரணம் நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்த்ரியா, போலந்து என பல சிறிய நாடுகளுடன் தனது எல்லையை சுற்றிலும் பகிர்ந்துகொண்டுள்ளது ஜெர்மனி
ஜெர்மனி சென்றால், இந்த நாடுகளுக்கு நாம் சாலை மார்க்கமாகவே குறைந்த நேரத்தில் சென்று விடலாம். நிறைய நாடுகளை பார்த்த கணக்கும் சேரும்
நெதர்லாந்து
இது மலர்களின் தேசம். ஆம், உலகில் அதிக அளவில் பூக்களை ஏற்றுமதி செய்யும் நாடு நெதர்லாந்து தான். உலகின் இரண்டாவது பெரிய பீர் நிறுவனமான ஹைனெகென் இங்கு தான் உள்ளது, வரலாற்று சிறப்புமிக்க விண்ட் மில்கள், பாரம்பரிய உணவுகள் கிடைக்கும் உணவகங்களும் இங்கு உள்ளன.
நெதர்லாந்தில் மக்களை விட அதிகமாக சைக்கிள்கள் தான் உள்ளன
பெல்ஜியம்
ஜெர்மனிக்கு அருகில் இருக்கும் மற்றுரு நாடு பெல்ஜியம். இது நிச்சயம் பார்த்துவிட வேண்டும் என்கிற நாடுகளில் ஒன்று. இங்கு மியூசிக்கல் ஃபெஸ்டிவல்கள் நடக்கும்.
மேலும் இந்த நாடு வைர தொழிற்சாலைகளுக்கு பெயர்பெற்றது. இதனை உலகின் வைர தலைநகரம் என்கின்றனர்.
குறிப்பாக இங்கு ஒரு சிறுவன் சிறுநீர் கழிக்கும் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அது உலகில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களுள் ஒன்று
பிரான்ஸ்
காதலின் நகரமான பிரான்ஸ் குறித்து அறிமுகங்கள் தேவையில்லை. இங்கு சிறிய சிறிய வண்ணமயமான கிராமங்கள் பல பரவியுள்ளன.
சுவிட்சர்லாந்து
இயற்கையின் அழகை பிரதிபலிக்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. மாபெறும் மலைகளால் சூழப்பட்டுள்ள சுவிஸ் அதன் சீஸ் மற்றும் சாக்லேட் வகைகளுக்கு பிரபலம்
ஆஸ்திரியா
கலை, கலாச்சாரம் மற்றும் இசைக்கு பெயர் பெற்ற நாடு இந்த ஆஸ்த்ரியா. க்ளிம்ப்ட் முதல் மொஸார்ட் வரை, ஆஸ்திரியா பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது.
கலையின் மறுவடிவமான இந்த நாடு நமக்கு புத்துணர்ச்சிய தரும்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust