சூழ்ச்சி கதைகள் : கோவிட்19 டூ 9/11 தாக்குதல் - உலகமே நம்பும் சில Conspiracy Theories

உலகில் நிறைய சூழ்ச்சிக் கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்
சூழ்ச்சி கதைகள் : கோவிட்19 டூ  9/11 தாக்குதல் - உலகமே நம்பும் சில Conspiracy Theories
சூழ்ச்சி கதைகள் : கோவிட்19 டூ 9/11 தாக்குதல் - உலகமே நம்பும் சில Conspiracy TheoriesNS Web Team

உலகில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னாலும், நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். விளைவுகளுக்கு ஏற்றவாறு அடுத்தடுத்த சம்பவங்கள் இருக்கும்.

இவற்றில், பெரும்பாலும், எதிர்மறை விளைவுகளின் தாக்கமே மிக சீக்கிரத்தில் தெரியவரும். அதனை சில சமயங்களில் சூழ்ச்சி கோட்பாடுகளுடன் நாம் ஒப்பிடுவதுண்டு. உலகில் நிறைய சூழ்ச்சிக் கோட்பாடுகள் இருக்கின்றன

அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

One Year of News Sense
One Year of News SenseTwitter

ஹாலோகாஸ்ட்:

ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் அரங்கேறிய கொடுமைகளில் மிகக் கொடூரமானது ஹாலோகாஸ்ட். யூதர்களை பூண்டோடு அழிக்க நினைத்த ஹிட்லர், அவர்களை உயிருடன் எரித்தார். கிட்ட தட்ட 6 மில்லியன் யூதர்கள், 1941 முதல் 1945 வரையிலான காலக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.

இது குறித்து வரலாற்று ஆவணங்கள் இருந்தாலும், ஹாலோகாஸ்ட் என்ற ஒன்று நடைபெறவே இல்லை எனக் கூறுகிறது ஒரு தரப்பு. 2014ல் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. சுமார் 100 நாடுகளிலிருந்தும் 50,000த்துக்கும் அதிகமான மக்களிடம் ஹாலோகாஸ்ட் குறித்து கேட்கபட்டது. அவர்களில் 30 சதவிகிதம் பேர் ஹாலோகாஸ்ட் நடந்ததாக நம்புகின்றனர். ஆனால், 65 வயதுக்கும் கீழ் இருந்தவர்களில் சிலர் இதற்கு எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டனர்.

சில சூழ்ச்சி கோட்பாட்டாளர்கள், ஹாலோகாஸ்ட் என்ற ஒரு விஷயம் மிகைப்படுத்தப்பட்டது என்று குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி கொலை

அமெரிக்காவின் 35வது ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி. நவம்பர் 22 1963ல் இவர் படுகொலை செய்யப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற லீ ஹர்வி ஆஸ்வால்ட் அன்றே கைது செய்யப்பட்டார். எனினும், இரு தினங்களுக்கு சிறைக்குக் கூட்டிச் செல்லும் வழியில் லீ ஜேக் ரூபி என்ற நபரால் கொலை செய்யப்பட்டார். ஜேக் நைட்கிளப் ஒன்றை நடத்திவந்தார். இந்த சம்பவம் தான் பலரது மனதில் சந்தேக விதைகளை விதைத்தது.

அதிபர் கென்னடி கொலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சி ஐ ஏவின் தொடர்பு இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. 1961ல் கம்யூனிச தலைவர் ஃபிடேல் காஸ்ட்ரோவை வீழ்த்த நடத்தப்பட்ட Bay of Pigs படையெடுப்புக்கு பதிலடியாக இதை சி ஐ ஏ செய்ததாக கூற்று.

மேலும் லீ ஹார்வி ஆஸ்வால்ட் அல்லாது, மற்றொரு நபரும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக ஒரு தரப்பு கூறுகிறது.

சூழ்ச்சி கதைகள் : கோவிட்19 டூ  9/11 தாக்குதல் - உலகமே நம்பும் சில Conspiracy Theories
மாதங்கி ஹஸ்ரா : 73 வயது முதியவரை கண்டு அஞ்சிய பிரிட்டன் அரசு - ஒரு வீரமிகு கதை

நீல் ஆம்ஸ்ட்ராங் உண்மையில் நிலவில் கால் பதித்தாரா?

நிலவில் கால்பதித்த முதல் மனிதர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நீல் ஆம்ஸ்ட்ராங். இவருடன் இந்த சாதனையில் உடன் பயணித்த மற்றொரு விண்வெளி வீரரான பஸ் ஆல்ட்ரின் என்பவருக்கும் பங்கு உண்டு என்பதே இதுவரை நாம் கேட்ட, படித்த அறிந்த வரலாறு.

ஆனால், உண்மையில் அவர்கள் நிலவில் கால்பதிக்கவில்லை என்ற கூற்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது. கிட்ட தட்ட 30 சதவிகித அமெரிக்கர்கள், இது போல ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்றே கூறுகின்றனர்.

வில்லியம் கேசிங் என்பவர் எழுதிய We Never Went to the Moon: America’s Thirty Billion Dollar Swindle என்ற புத்தகத்தின் மையக் கருத்தே விண்வெளி வீரர்கள் காலடி தடம் பதித்தது நிலவின் தளத்தில் அல்ல, அமெரிக்காவின் ஏலியன்கள் இருப்பிடமாக கருதப்படும் நெவாடா மாகாணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதே.

நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் நிலவில் கால் பதிப்பதை ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் நேரலையில் பார்த்தது குறிப்பிடத்தக்கது. 2019ல் கருத்துகணிப்பு நடத்தப்பட்டபோதும் 10 சதவிகித அமெரிக்ககர்கள் இதனை நாடகம் என்றே கருதியுள்ளனர்.

கோவிட்-19
கோவிட்-19NewsSense

கோவிட் 19 சீனாவின் பயோ வார்

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி, உலகையே இரண்டு ஆண்டுகள் நடுநடுங்க வைத்த கொரோனா வைரஸ் தொற்றும், சூழ்ச்சிக் கோட்பாடுகளில் இருந்து தப்பவில்லை. வைரஸ் தொற்று வராமல் இருக்க மனிதர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளில் மைக்ரோ சிப் இருப்பதாகவும், அதனை வைத்து மனிதர்களை அரசாங்கம் கண்காணிப்பதாகவும் ஒரு தியரி இருக்கிறது.

இந்த வைரஸ் தொற்று உலகம் முழுக்க பரவ மாஸ்டர் மைண்டாக செயல்பட்டது பில் கேட்ஸ் தான் என்கிறது ஒரு தரப்பு. உலகளவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுத்துக்கொள்ளப்பட்ட நடவடிக்கை தான் இந்த தொற்றுபரவல்.

இந்த வைரஸ் சீனா மறைமுகமாக நடத்திய பயோவார் என்றும் ஒரு கூற்று நிலவுகிறது.

சூழ்ச்சி கதைகள் : கோவிட்19 டூ  9/11 தாக்குதல் - உலகமே நம்பும் சில Conspiracy Theories
சார்லஸ் ஹென்றி : 3000 தலைகளை வெட்டிய மரணதண்டனைக்காரர் - ஓர் உண்மையான ரத்த சரித்திரம்!

9/11 தாக்குதல்:

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 நடந்த ட்வின் டவர் தாக்குதல் அமெரிக்க அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டது என்பதும் ஒரு சூழ்ச்சிக் கோட்பாடு. ஆப்கான் மற்றும் ஈராக் மீது படையெடுக்கும் திட்டத்தில் அப்போதைய அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் அரசு இருந்ததகவும், இந்த சம்வத்தை நிகழ்த்தினால், அவர்களின் திட்டத்திற்கு ஏதுவாக இருக்கும் என்று அவர்கள் நினைத்ததாகவும் சில அமெரிக்கர்கள் நம்புகின்றனர்.

இவற்றை தவிர, பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் மரணம் படுகொலை என்றும், அமெரிக்காவின் நெவாடா மாகாணம் ஏலியன்களின் புகலிடம் போன்ற சூழ்ச்சி கோட்பாடுகளும் நம்பப்பட்டு வருகின்றன

சூழ்ச்சி கதைகள் : கோவிட்19 டூ  9/11 தாக்குதல் - உலகமே நம்பும் சில Conspiracy Theories
விஜய்க்கு இருக்கும் அரசியல் அழுத்தம்; உதயநிதி தான் அடுத்த முதல்வர்- பாரி சாலன் நேர்காணல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com