Princess Diana : இன்றும் டயானா மரணம் குறித்து உலாவும் 5 சந்தேகங்கள் - A detailed report

இவரது மறைவு இங்கிலாந்து மக்கள் மட்டுமின்றி உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இளவரசி டயானாவின் மரணம் விபத்து என்றுக் கூறப்பட்டாலும், ஒரு புறம் அவர் கொல்லப்பட்டார் என்ற சூழ்ச்சிக் கோட்பாடுகள் இன்றளவும் இருக்கின்றன அவற்றில் சில...
Princess Diana
Princess Dianaட்விட்டர்
Published on

இங்கிலாந்து வரலாற்றை எடுத்துக்கொண்டால் தவிர்க்க முடியாத பெயர் டயானா. பார்ப்பதற்கு அழகாகவும், மிகவும் மென்மையான குணம் கொண்டவராக இருந்தார் இளவரசி டயானா. இவர் தற்போதைய இங்கிலாந்து அரசர் சார்லஸின் முன்னாள் மனைவி ஆவார்.

ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிந்த சாதுப் பெண்ணாக ஒரு புறமும் கட்டுக்கடங்கா புரட்சியாளரின் முகமாக இன்னொரு புறம் இருந்தார்.

தனது அரசக் குடும்ப அந்தஸ்தை பயன்படுத்தி மக்களுக்கு தொண்டுகள் புரிந்து வந்தார்.

ஆனால் அரசக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது வைக்கப்பட்ட கட்டுப்பாடுகள், எதிர்பார்ப்புகள், மற்றொரு புறம் திருமண வாழ்க்கையில் விழத் தொடங்கிய விரிசல்கள் அவரை Postnatal Depressionக்குள் தள்ளியது எனக் கூறுகிறது பிரிட்டானிகா தளம்.

இதனால் கணவரை பிரிந்தார் டயானா. சார்லஸுக்கும் இவருக்கும் வில்லியம், ஹாரி என்ற இரு மகன்கள் அப்போது இருந்தனர்.

இளவரசியாக அரசக் குடும்பம் இவரை அங்கீகரிக்காவிட்டாலும், மக்கள் மனதில் ராணியாக வாழ்ந்தார் டயானா. பாமர மக்களின் நிலையை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக எப்போதும் தன் மகன்களை உடன் அழைத்து சென்றார் டயானா.

இவர்களுடன் எங்கு சென்றாலும் மூன்றாவது கண்ணாக கேமராக்களும் டயானாவை பின் தொடர்ந்தது.

1997ல் அப்படி ஒரு முறை பாரிசில் ஒரு பத்திரிகையாளரிடமிருந்து தப்பித்து சென்றுக்கொண்டிருக்கும் போது தான் டயானா பயணித்த கார் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்தார்.

இவரது மறைவு இங்கிலாந்து மக்கள் மட்டுமின்றி உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

இளவரசி டயானாவின் மரணம் விபத்து என்றுக் கூறப்பட்டாலும், ஒரு புறம் அவர் கொல்லப்பட்டார் என்ற சூழ்ச்சிக் கோட்பாடுகள் இன்றளவும் இருக்கின்றன

அவற்றில் சில...

Princess Diana
Mary Bell: பாலியல் தொழிலாளியின் மகள் சீரியல் கில்லரான கதை - ஒரு விறுவிறு வரலாறு

1. தான் கொல்லப்படுவேன் என நம்பிய டயானா:

இளவரசி டயானாவுக்கு தான் கொல்லப்படுவார் என்ற சந்தேகம் ஆழ்மனதில் எப்போதும் இருந்ததாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

டயானாவின் பட்லரான பால் புர்ரெல் என்பவரிடம் டயானா கடிதம் ஒன்றை பத்திரப்படுத்த சொல்லி கொடுத்திருந்ததாகவும், அதிலும் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் இந்துஸ்தான் டைம்ஸ் தளம் தெரிவிக்கிறது.

அந்த கடிதத்தில் டயானா, “என் வாழ்வின் இந்த குறிப்பிட்ட தருணம் மிகவும் ஆபத்தானது. சார்லஸின் அடுத்த திருமணத்திற்காக என்னை கொலை செய்ய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. பிரேக் பழுதினால் கார் விபத்து, தலையில் காயம் என்பது போன்ற சூழ்ச்சி திட்டங்கள் வகுக்கப்படுகின்றன” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாம்

2. வேண்டுமென்றே காரை விபத்துக்குள்ளாக்கிய paparazzi (புகைப்படக் கலைஞர்):

இளவரசி டயானாவின் கார் விபத்துக்குள்ளானதற்கு புகைப்படக் கலைஞர்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. புகைப்படக் கலைஞர்கள் சிலர் டயானாவின் காரை வலுக்கட்டாயமாக துரத்திச் சென்றதால் விபத்து ஏற்ப்பட்டது என்று கூறப்படுகிறது

3.கார் ஓட்டுநரின் சதி:

டயானா பாரிஸில் உயிரிழந்தபோது அவர் பயணித்த காரை ஓட்டிய டிரைவர் ஹென்ரி பால் அந்த சமயத்தில் குடித்திருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. பாரிஸின் ரிட்ஸ் ஹோட்டலின் தலைமை பாதுகாவலரான ஹென்ரி இதனை வேண்டுமென்றே செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது வெறும் வதந்தி எனவும் கூறுகிறது ஒரு தரப்பு

Princess Diana
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் : அ முதல் ஃ வரை முழுமையான தகவல்கள்

4. டயானா பயணித்த கார் பழுதாகியிருந்தது:

டயானா பயணம் செய்த மெர்சடீஸ் காரில் ஏதோ பழுது இருந்ததாக கூறப்படுகிறது. அவர் சென்ற வழித்தடத்தில் தடைகள் இருந்ததாகவும், அதிவேகமாக காரை ஓட்டி சென்றதாகவும் கூறப்படுகிறது

5.தாமதிக்கப்பட்ட மருத்துவ உதவி:

விபத்திற்கு பிறகு மருத்துவர்கள் டயானாவுக்கு தேவையான சிகிச்சையை அளிக்கவில்லை எனவும், அவரை மரணிக்க விட்டதாகவும் தியரிகள் சொல்கின்றன.

Princess Diana
சார்லஸ் - டயானா : 41 ஆண்டுகள் பழமையான திருமண கேக்கை ஏலம் விட முடிவு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com