Queen Elizabeth II: உடல் நல்லடக்கம் - மீளா துயில் கொண்டார் இங்கிலாந்து அரசி

ராணியின் உடல் செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மகாராணியின் உடல் அவரது கணவர் பிலிப்பின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
Queen Elizabeth II: உடல் நல்லடக்கம்
Queen Elizabeth II: உடல் நல்லடக்கம் டிவிட்டர்
Published on

நல்லடக்கம் செய்யப்பட்டார் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி காலமானார். இவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். 

Queen Elizabeth II: உடல் நல்லடக்கம்
Queen Elizabeth II: ராணியின் இறுதி சடங்கில் காவலாளி மயக்கம் - பதைபதைக்க வைக்கும் வீடியோ
Queen Elizabeth II
Queen Elizabeth II Twitter

இங்கிலாந்தை நீண்ட காலம் ஆட்சி செய்தவர் மகாராணி எலிசபெத். இதனால் இவரது இறுதிச் சடங்கு பத்து நாட்கள் கழித்து நடைபெறும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.  இந்த பத்து நாட்களில் பொதுமக்கள் இவருக்கு இறுதி மரியாதை செலுத்தவும் அனுமதிகள் வழங்கப்பட்டது.

இரவு நெடுநேரம், நீண்ட வரிசைகளில் காத்திருந்து பொதுமக்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தினர். 

ராணி எலிசபெத்தின் உடல், செப்டம்பர் 19 அன்று மறைந்த அவரது கணவர் பிலிப்பின் கல்லறைக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

இந்நிலையில், நேற்று மகாராணிக்கு இறுதி மரியாதைகள் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உட்பட உலக தலைவர்கள் கலந்துகொண்டனர். 

ராணியின் சவப்பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்த அவரது கிரீடம், செங்கோல் மற்றும் Orb அகற்றப்பட்டது

பின்னர் ராணியின் உடல்  செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மகாராணியின் உடல் அவரது கணவர் பிலிப்பின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் ராணியின் கல்லறைக்கு அருகில், அவரது தந்தை அரசர் ஆறாம் ஜார்ஜ், தாயார் அரசி முதலாம் எலிசபெத், தங்கை மார்க்ரெட் அவர்களது சமாதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Queen Elizabeth II: உடல் நல்லடக்கம்
Queen Elizabeth : இறுதி சடங்கிற்கு எத்தனை கோடி செலவு? யார் யாருக்கு அனுமதி? விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com