விக்டோரியா மகாராணி போதை பொருளுக்கு அடிமையா? காம வெறியரா?

பல வருடங்கள் கர்ப்பமாக இருந்த விக்டோரியா பிரசவ வலி தாங்க முடியாமல் இருந்தார். அதை சரி செய்வதற்குக் கஞ்சா பயன்படுத்தப்பட்டது. இராசயனக் கலவைகள், பொடிகள், திரவ கலவைகள் மற்றும் ஜின் போன்ற புதிய மதுபானங்களை அவர் பயன்படுத்துவதற்குத் தயங்கவில்லை.
விக்டோரியா
விக்டோரியாTwitter
Published on

பிரிட்டனை ஆண்ட விக்டோரியா மகாராணியின் முழுப்பெயர் அலெக்சாண்டிரினா விக்டோரியா. கிபி 1819 இல் பிறந்து 1901இல் மறைந்தார். பிரிட்டனின் மகாராணியாக 1837 முதல் சாகும் வரை ஆட்சி செய்தார்.

1857 இல் முதல் இந்திய சுதந்திரப் போர் நடைபெற்ற பிறகு கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிடமிருந்து இந்தியா நேரடியாகப் பிரிட்டனின் அரசாங்கத்திற்கு சென்றது. அதை அறிவித்தவர் இதே விக்டோரியா தான்.

விக்டோரியா மகாராணி பல விசயங்களுக்கு அடையாளமாக இருக்கிறார். ஆனால் அவற்றில் தெரியாமல் மறைக்கப்பட்ட விசயங்களும் உண்டு.

அவர் போதை மருந்துகளுக்கு அடிமையானவர் என்பது பலருக்கும் தெரியாது. மேலும் அவர் சாகும் போது அவரது சொந்த நாட்குறிப்புகள் இளைய மகளால் அழிக்கப்பட்டன. அவருக்கு அரண்மனையில் வேலை பார்த்த ஸ்காட்டிஷ் வேலைக்காரர் ஜான் பிரவுனுடன் உறவிருந்தது. அவருக்கு ஒன்பது குழந்தைகள் இருந்தாலும் விக்டோரியா பொதுவில் குழந்தைகளை விரும்பவில்லை.

அவரது காலத்தில் அறிவியலில் பல பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. புதிய விசயங்களை முயற்சிப்பதற்கு விக்டோரியா பயப்படவில்லை. பல்வேறு இராசயனக் கலவைகள், பொடிகள், திரவ கலவைகள் மற்றும் ஜின் போன்ற புதிய மதுபானங்களை அவர் பயன்படுத்துவதற்குத் தயங்கவில்லை.

Print Collector

விக்டோரியா போதைப் பொருளுக்கு அடிமையா?

அவரது யுகத்தில் அபின் ஒரு வலி நிவாரணியாக விற்கப்பட்டது. விக்டோரியாவுக்கு ஆல்கஹாலில் கரைந்த அபின் அடங்கிய டானிக் மிகவும் பிடித்தமானது. இத்தகைய மருந்துகளைப் பெற்றுக் கொள்வது அவருக்கு ராணி என்பதால் சுலபமாக இருந்தது. அவரிடம் கோகோயின் கலந்த இனிப்புகள் இருந்தன. மேலும் கஞ்சாவையும் அவர் சில தருணங்களில் பயன்படுத்தினார்.

அவருக்கு ஒன்பது குழந்தைகள் என்பதால் பல வருடங்கள் கர்ப்பமாக இருந்தார். பிரசவ வலி தாங்க முடியாததாக இருந்தது. அதை சரி செய்வதற்குக் கஞ்சா பயன்படுத்தப்பட்டது. இப்போது மருத்துவ ரீதியாக கஞ்சாவின் நன்மைகள் ஏற்கப்படுகிறது. பல நாடுகள் மருத்துவ ரீதியாக கஞ்சாவை அனுமதிக்கின்றன. அப்போது அது பரிசோதனை நிலையில் இருந்தது.

மேலும் பிரசவத்தின் போது குளோஃபார்ம் எனப்படும் மயக்க மருந்தினை பயன்படுத்திய முதல் பெண்களில் விக்டோரியா மகாராணியும் ஒருவர். அதை எல்லை கடந்த மகிழ்ச்சி என்று அவர் அழைத்தார்.

அவர் காலத்தில் போதைப் பொருள் தொடர்பான சட்டங்கள் நடைமுறையில் இல்லை. மேலும் குறிப்பிட்ட மருந்துகளின் நீண்ட கால விளைவுகள் முழுமையாக அறியப்படவில்லை. ஆனால் இன்றைய அளவுகோலின் படி அவர் ஒரு போதைப் பொருள் பயன்படுத்திய அடிமை. அவரது கணவர் இளவரசர் ஆல்பர்ட் இறந்த பிறகு ராணி பொது நிகழ்வுகளில் அதிகம் கலந்து கொள்வதில்லை. அவர் பெரும் துக்கத்தில் இருந்தார் என்று பலரும் நினைத்தனர். உண்மையில் அவர் உயர்மட்ட போதையில் இருந்திருக்கலாம். அது யாருக்கும் தெரியாது.

விக்டோரியா
தாஜ்மஹால் : ஷாஜகான் மும்தாஜ் காதல் மற்றும் சோகத்தின் கதை - ஒரு வரலாற்று பயணம்

வேலைக்காரருடன் உறவு

1860ஆம் ஆண்டில் அவரது கணவர் ஆல்பர்ட் எதிர்பாராத விதத்தில் மரணமடைந்த போது விக்டோரியா பால்மோரலில் உள்ள கோட்டையில் நீண்ட காலத்திற்கு தங்கினார். இங்குதான் அவருக்கு வேலைக்காரர் ஜான் பிரவுனுடன் உறவு ஏற்பட்டது. அவர்கள் அந்த கோட்டையில் பல மணிநேரம் தனித்திருந்தனர். அவர்களது உறவின் தன்மை முதல் நாளிலிருந்தே வதந்தியாகப் பரவி வந்தன. 1901இல் விக்டோரியா மகாராணி இறந்த போது அவரது பால்மோரல் கால கட்ட அனைத்து நாட்குறிப்புகளையும் இளைய மகள் பீட்ரைஸ் அழித்தார். இது சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

சில வதந்திகளின் படி ராணிக்கு பிரவுனோடு உள்ள உறவின் காரணமாக ஒரு குழந்தையே பிறந்திருந்தது. மேலும் அவர் பிரவுனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கதைகள் கிளம்பின. அவர்கள் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதோடு ஒருவருக்கொருவர் பாசமாகவும் இருந்தார்கள். எது எப்படியோ விக்டோரியாவின் இதயத்தில் பிரவுனுக்கு ஒரு இடமிருந்தது உண்மை. பிரவுன் இறந்த போது ராணி தனது வாழ்க்கையில் இரண்டாவது தடவையாக பெரும் துக்கத்தில் ஆழ்ந்தார்.

மேலும் தான் இறக்கும் போது பிரவுனின் தலைக் கவசம், அவரது புகைப்படம், கர்ச்சீப் மற்றும் சில கடிதங்களைத் தனது சவப்பெட்டியில் வைக்குமாறு ராணி உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்தக் கடிதங்களில் என்ன இருந்தது என்பது ராணியின் மறைவோடு முடிந்த போன விசயம்.

ராணிக்குக் குழந்தைகளை ஏன் பிடிக்கவில்லை?

விக்டோரியாவுக்கு மொத்தம் 9 குழந்தைகள். ராணிக்கும் குழந்தைகளுக்கும் உறவு கடினமாக இருந்தது. திருமணமான முதல் நாளிலிருந்தே அவர் கர்ப்பமாகி விட்டார் என்று ராணி கோபமாக இருந்தார் மேலும் அவரது அன்பான இளவரசர் பிலிப்போடு நேரத்தைச் செலவிடுவதற்குப் பதில் ஒரு குழந்தையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால் அவர் கோபமடைந்தார்.

விக்டோரியா
பாபிலோன் : தொங்கு தோட்டம், அதிசய வீழ்ச்சி - ஒரு நகரத்தின் அசரடிக்கும் வரலாறு

ராணிக்கும் இளவரசருக்கும் பொருத்தம் இல்லை

முதல் குழந்தை விக்கி, தந்தை ஆல்பர்ட்டின் செல்லக் குழந்தை. ஆனால் ராணி ஒரு அன்பான தாயாக எப்போதும் இருக்கவில்லை. குழந்தைகளை விடப் பெரியவர்களோடு நேரம் செலவழிக்கவே அவர் விரும்பினார். ஆல்பர்ட் அதிக நேரம் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பதாக விக்டோரியா அடிக்கடி புகார் கூறுவார்.

ஒரு ராணி என்ற நிலையில் கடுமையான கட்டுப்பாட்டு சூழலில் தன்னை தகவமைத்துக் கொள்வது விக்டோரியாவுக்கு பிரச்னையாக இருந்தது. அதனால் அவருக்கு எப்படி அரவணைப்பாகவும் பாசமாகவும் இருப்பது என்று தெரியவில்லை. ராணி தனது கணவருடன் நெருங்கிய அளவுக்கு ஆல்பர்ட் தனது மனைவியிடம் நெருங்கவில்லை. இருவருக்கும் ஒத்துப் போகும் விசயங்கள் பெருமளவு இல்லை. மேலும் 1840இல் திருமணம் நடப்பதற்கு முன்பு அவர்கள் மூன்று முறைதான் சந்தித்துக் கொண்டார்கள்.

ஆகவே குழந்தைகள் என்பது இருவரது பாலியல் உறவினால் மட்டும் பிறந்த விளைவுகளே. இருவருக்கும் வேறுபட்ட இலட்சியங்கள், இலக்குகள் இருந்தன. ஆல்பர்ட் உலகம் மற்றும் ஐரோப்பாவுடன் ஒரு வலுவான கூட்டணி வைக்கும் சிறந்த முடியாட்சியை உருவாக்கும் எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் விக்டோரியா திருமணம் முடிந்து முதல் பத்து வருடங்கள் கர்ப்பகாலத்திலேயே கழித்தார். இதனால் ஆட்சியில் செயலதிகாரம் ஆல்பர்ட்டிடமே இருந்தது.

விக்டோரியா
ஆப்ரிக்காவின் சேகுவேரா: சதியால் கொல்லப்பட்ட தலைவர் இளைஞர்களின் ஹீரோவான வரலாறு

இரண்டாவது மகனின் ஊழல்

விக்டோரியா தனது இரண்டாவது மகனும் எதிர்கால மன்னருமான எட்வர்ட் VII ஐ தனது கணவரான இளவரசர் ஆல்பர்ட்டின் மரணத்திற்குத் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டினார். அதற்குக் காரணம் ஒரு செக்ஸ் ஊழல். எட்வர்ட் பெர்டி என்ற பெயரில் அழைக்கப்படுவார். அப்போது அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது சில மாணவர்கள் அவருக்கு ஓரிரவில் ஒரு பாலியல் தொழிலாளியை ஏற்பாடு செய்தனர். இந்த ஊழல் அம்பலமாகி அப்பா அம்மாவிடம் வந்தது.

இந்நிலையில் ஆல்பர்ட் தனது மகனைப் பார்க்கச் சென்றார். மழையிலும் குளிரிலும் நடுங்கியவாறு அவர் நீண்ட நடைப்பயணத்திற்குப் பிறகு வீடு திரும்பியதும் மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு சில வாரங்களுக்குப் பிறகு அவர் இறந்து போனார். மகனைப் பார்க்கச் சென்றதற்கு முன்பே அவர் நோய்வாய்ப்பட்டிருந்தது உண்மை. எனினும் ராணி தனது கணவரின் மரணத்திற்கு இரண்டாவது மகனையே பொறுப்பாக்கி மன்னிக்க முடியாது என்ற நிலை எடுத்தார்.

விக்டோரியாவின் காலம் ஒரு யுகம்

விக்டோரியா தனது எழுத்தில் கடுமையாக எழுதக்கூடியவராக இருந்தார். தனது குழந்தைகளுக்கு அவர் எழுதிய கடிதங்கள் சில கடுமையானவை. விக்டோரியா சமீப காலம் வரை பிரிட்டீஷ் வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியாக இருந்தார். அவரைப் பற்றிய முரண்பாடுகள் இருந்தாலும் ஒரு புராணக்கதை நாயகியாக அவர் மாறினார்.

அவருடைய வரலாற்றுக் காலம் அதிகம். அந்தக் காலமே அவருடையை பெயரால் அழைக்கப்பட்டது. அதனால்தான் என்னமோ அவரைப் பற்றிய பல விசயங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

விக்டோரியா
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com