ரணில் விக்ரமசிங்கே : இலங்கை ஜனாதிபதி குறித்த 10 தகவல்கள்

மக்களின் போராட்ட முழக்கங்களில் "பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும்" என்பதும் இருந்ததை மனதில் கொள்ளவேண்டியிருக்கிறது. தொடர்ந்து ராஜபக்சேக்களின் இடத்தை கோத்தபயவின் ஆதரவுடன் நிரப்பும் இவர் யார்? இவரின் வரலாற்றுப் பின்னணி என்ன? இவரால் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியுமா?
ரணில் விக்ரமசிங்கே
ரணில் விக்ரமசிங்கேTwitter
Published on

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகினார்.

அதிபர் மாளிகை மற்றும் அலுவலகத்தைப் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இராணுவ விமானம் மூலமாக மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளார் கோத்தபய.

முன்னதாக ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமிக்க சபாநாயகரிடம் கோத்தபய ராஜபக்சே கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனடிப்படையிலேயே அதிபர் பதவியை ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே. மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போது பிரதமாராக இவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி

இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்க சபையில் அறிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகபெருமவிற்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இதையடுத்து, சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 14ம் தேதி தனது விலகல் கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பியிருந்தார்.

சரி...இவர் யார்? இவரின்பின்னணி என்ன? இவரால் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியுமா?

ரணில் விக்ரமசிங்கே
ரணில் விக்ரமசிங்கேTwitter

73 வயதான இந்தத் தலைவர் 1993 இல் இருந்து ஐந்து முறை பிரதமராக இருந்துள்ளார். இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு மேற்கத்திய சார்பு மற்றும் தடையற்ற சந்தை சீர்திருத்தவாதியாகக் காணப்படுகிறார். சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுடன் இலங்கை திவால் ஆவதை தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இவரால் சுமூகமாக நடத்த முடியும் என நம்பப்படுகிறது.

1. இவர் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர். விக்கிரமசிங்க 70 களில் அரசியலில் நுழைந்தார். அவர் 1977 இல் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர் மற்றும் அவரது மாமா ஜூனியஸ் ஜெயவர்த்தன ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜனாதிபதியாக பணியாற்றினார்.

2. மூத்த தலைவரான ரனில் விக்கிரமசிங்க ஒருமுறை AFP செய்தி நிறுவனத்திடம் பேசிய போது 1973 இல் அவரது குடும்பத்தின் செய்தித்தாள் வணிகத்தை அப்போதைய அரசாங்கம் தேசியமயமாக்கவில்லை என்றால், அவர் ஒரு பத்திரிகையாளராகத் தொழிலைத் தொடர்ந்திருப்பேன் என்று கூறினார்.

ரணில் விக்ரமசிங்கே
எரியும் இலங்கை, உடையும் செருக்கு: அதிபர் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்- தப்பினாரா கோத்தபய?
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேTwitter

3. அவர் 1994 முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் அவரது கட்சியின் ஒரே பிரதிநிதியும் ஆவார்.

4. இலங்கையின் பல பத்தாண்டுக் காலம் நடந்த உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளின் குண்டுத் தாக்குதலில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1993 இல் விக்கிரமசிங்கே முதன்முதலில் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரது முதல் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு மேல் நீடித்தது.

5. அவர் 2001 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். நாட்டை மந்த நிலையிலிருந்து வெளியேற்றிய பிறகு, சிறந்த பொருளாதார நிர்வாகத்திற்கான நற்பெயரைப் பெற்றார். இருப்பினும், ஜனாதிபதியுடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

6. 2015 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் தோல்விக்குப் பின்னர் எதிர்க்கட்சிகள் ஐக்கிய வேட்பாளராக அவருக்குப் பின்னால் அணிதிரண்ட பின்னர் அவர் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

ரணில் விக்ரமசிங்கே
இலங்கை : பொருளாதார நெருக்கடி - தீவு தேசம் மீள என்ன வழி? - விரிவான விளக்கம்

7. மத்திய வங்கிப் பத்திரங்கள் சம்பந்தப்பட்ட ஒரு உள் வர்த்தக ஊழலால் அவரது அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்ட பிறகு அந்த ஆண்டு அவரது "மிஸ்டர் க்ளீன்" இமேஜ் கெட்டு விட்டது. இந்த ஊழல் குற்றம் சாட்டப்பட்ட மத்திய வங்கியின் தலைவர் அர்ஜுன மகேந்திரன், விக்கிரமசிங்கவின் பள்ளித் தோழன் மற்றும் அவரால் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டது.

8. விக்கிரமசிங்கே தனது பதவிக்காலத்தில் குரோனிசம் எனப்படும் நண்பர்கள், உறவினர்களுக்கு பதவி கொடுப்பது, மற்றும் அவர்களுக்கு ஆதாயம் தரும் வகையில் நடந்து கொள்வதாக குற்றஞ் சாட்டப்பட்டார். மேலும் முந்தைய ராஜபக்ச ஆட்சியின் உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் அவர்கள் மீது வழக்குத் தொடரத் தவறிவிட்டார்.

9. 2018ல், அப்போதைய இலங்கை அதிபர் மதிரிபால சிறிசேனா, விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, நாட்டை அரசியலமைப்பு நெருக்கடிக்குள் தள்ளினார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, விக்கிரமசிங்க மீண்டும் பிரதமரானார்.

10. நான்கு பத்தாண்டுகளுக்கும் மேலான அவரது அரசியல் வாழ்க்கையில், அவர் இரண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார் மற்றும் அவரது கட்சியை தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளுக்கு இட்டுச் சென்றார்.

ரணில் விக்ரமசிங்கே
இலங்கை: ராஜபக்சேக்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் - ஒரு விரிவான கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com