இலங்கை: ராஜபக்சேக்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் - ஒரு விரிவான கதை

விடுதலைப் புலிகளை அழித்தமைக்காக தென்னிலங்கையில் சிங்கள – பௌத்த மக்கள் ராஜபக்சேக்களை பெரிதும் மதித்தனர். அதிலிருந்து ராஜபக்சேக்கள் தங்களை வெல்லமுடியாதவர்கள் என்று கருதினர். அவர்கள் அரசாங்கத்தை தமது குடும்பத் தொழில் போல நடத்துவதாக சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டனர்.
Gotabaya Rajapaksa
Gotabaya RajapaksaTwitter
Published on

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையில் கடந்த சனிக்கிழமை அன்று மக்கள் அலையெனப் புகுந்தனர். அதிபரின் அரண்மனை மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது. அரண்மனையில் உள்ள நீச்சல் குளத்தில் மக்கள் நீந்தினர். உடற்பயிற்சிக்கூடத்தை நிரப்பினர்.

சுருக்கமாக சொன்னால் அந்த அரண்மனை மக்கள் அரண்மனையாக மாற்றப்பட்டது. அதிபர் கோத்தபய தலைமறைவாக உள்ளார்.

அவர் கடற்படையால் சூழப்பட்ட இராணுவ தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக வதந்திகள் வருகின்றன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியபடி, அதிபர் கோத்தபய தனது பதவியில் இருந்து ஜூலை 13 ஆம் தேதி அதாவது இன்று பதவி விலக உள்ளார். இது இலங்கையில் மேலும் நிச்சமற்ற நிலைக்கு வழிவகுக்கும்.

gotabaya rajapaksa
gotabaya rajapaksaTwitter

அதிபர் கோத்தபயவின் அரசியல் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் மீதான கோபம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. 2 கோடியே 20 லட்சம் மக்கள் வாழும் நாடு, இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடி அங்கு நிலவி வருகிறது. அரசாங்கத்தில் தவறான பொருளாதார நிர்வாகத்தால் எரிபொருள், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திலிருந்தே போராடும் மக்கள் வீதிகளில் திரண்டு அதிபர் கோத்தபயவை ராஜினாமா செய்யுமாறு போராடினர். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு அதிபரது அரசாங்கமே காரணமென்று குற்றம் சாட்டினர்.

ஆனால் அதிபர் கோத்தபய பதவி விலக மறுத்து விட்டார். அவர் ஏறக்குறைய 70 லட்சம் மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும், 2019 இல் தொடங்கிய அவரது 5 ஆண்டு பதவிக்காலத்தை முடிக்க இன்னும் காலம் உள்ளது என்பது அவரது வாதம்.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாட்டின் மீட்பர் என்ற தனது பிம்பம் தற்போதைய கொந்தளிப்பிலிருந்து தம்மைக் காப்பாற்றும் என நினைத்த அதிபர் தற்போது தலைமறைவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Mahinda Rajapaksa
Mahinda RajapaksaTwitter

அதிகாரத்தின் உச்சத்தில் ராஜபக்சேக்கள்

ராஜபக்சேக்கள் தெற்காசியாவின் மிகப்பெரிய அரசியல் குடும்பமாகக் கருதப்படுகிறார்கள். 2015 இல் அவர்கள் தோல்வியடைந்தாலும் 2018இல் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா அதிபராக இருந்த காலத்தில் மஹிந்த ராஜபக்சே பிரதமராக 2004 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டிலிருந்து ராஜபக்சே குடும்பம் அதிகாரத்தைக் கைப்பற்றத் துவங்கியது.

Gotabaya Rajapaksa
இலங்கை : பொருளாதார நெருக்கடி - தீவு தேசம் மீள என்ன வழி? - விரிவான விளக்கம்

2005 ஆம் ஆண்டில் மஹிந்த அதிபராக மாறியதோடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு முழுமையான போரைத் துவக்கினார். அவரது சகோதரர் கோத்தபய அப்போது பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தார்.

விடுதலைப் புலிகளை அழித்தமைக்காக தென்னிலங்கையில் சிங்கள – பௌத்த மக்கள் ராஜபக்சேக்களை பெரிதும் மதித்தனர். அதிலிருந்து ராஜபக்சேக்கள் தங்களை வெல்லமுடியாதவர்கள் என்று கருதினர்.

அவர்கள் அரசாங்கத்தை தமது குடும்பத் தொழில் போல நடத்துவதாக சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டனர். மேலும் போருக்கு பிந்தைய தமிழ் சமூகத்துடனான நல்லிணக்கத்தையும் ராஜபக்சேக்கள் ஏற்படுத்தவில்லை.

Mahinda Rajapaksa
Mahinda RajapaksaTwitter

2015 இல் என்ன நடந்தது?

முன்னர் மஹிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையிலிருந்த மைத்திரிபால சிறிசேனா ராஜபக்சேவிடமிருந்து பிரிந்து ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து 2015இல் போட்டியிட்டார். அதில் மஹிந்த ராஜபக்சே தோல்வியுற்றார். இருப்பினும் அவர் 2016இல் ஸ்ரீலங்கா பொதுஜன மக்கள் முன்னணி எனும் கட்சியை ஆரம்பித்து பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்களைக் கவர்ந்தார்.

2018 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவின் கட்சி வெற்றி பெற்றது. அதன் பிறகு அதிபர் மைத்திபால் சிறிசேனா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்து விட்டு மஹிந்தவை பிரதமராக நியமித்தார்.

2019இல் அதிபர் தேர்தல் வந்த போது மஹிந்த ஏற்கனவே இரண்டு முறை அதிபராக இருந்ததினால் போட்டியிடத் தகுதி இல்லை.

Gotabaya Rajapaksa
இலங்கை : இன்றைய நெருக்கடிக்கு 5 முக்கிய காரணங்கள்

ஆகவே அதிபர் தேர்தலுக்கு அவரது சகோதரர் கோத்தபய நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தலுக்கு முன்பு நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பில் 290 பேர் கொல்லப்பட்டதை எதிர்த்து கோத்தபய பிரச்சாரம் செய்தார். இது, அவர்தான் தேசத்தைக் காப்பாற்ற முடியுமென்ற பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தியது.

ஆட்சிக்கு வந்ததும் கோத்தபய நாட்டை நிலையான வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். ஆனால் அழிவைத் தரும் பொருளாதாரத் தவறுகளைச் செய்தார்.

Srilanka protest
Srilanka protestTwitter

அவர் 2019இல் வரிக் குறைப்புகளை அறிவித்தார். அது அரசாங்கத்தின் நிதியைக் குறைத்தது. இரசாயன உரங்கள் மீதான அவரது மோசமான தடையால் விவசாயம் சீர்குலைந்தது. மேலும் கோவிட் பொது முடக்கத்தால் இலங்கை பொருளாதாரம் மேலும் அழிவை நோக்கிச் சென்றது.

ஏப்ரல் 12 வாக்கில் இலங்கை பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைய ஆரம்பித்தது. அரசாங்கம் சர்வதேச கடனாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகைகளைக் கொடுக்க முடியவில்லை. அந்நியச் செலாவணி இருப்பின்மையால் உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து அனைத்தும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. விலைவாசி உயர்வு விண்ணைத் தொட்டது.

இவையெல்லாம் ஒன்று சேர்ந்து மக்கள் போராட்டத்தைத் தூண்டி விட்டது. ராஜபக்சேக்கள் எவ்வளவு விரைவாக அதிகாரத்தைக் கைப்பற்றினார்களோ அதை விட அதிக வேகத்தில் அதிகாரத்தை இழந்து மக்களால் வெறுக்கப்படுகின்றனர்.

Gotabaya Rajapaksa
கோத்தபய ராஜபக்சே: ஹெலிகாப்டர் மூலம் நாட்டை விட்டு தப்பினாரா? இலங்கை ஊடகங்கள் சொல்வது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com