Edward Forbes Pigment: உலகிலேயே அரிதான நிறங்கள் எவை தெரியுமா? - ஒரு கலர்ஃபுல் தகவல்!

வரலாறு முழுக்க ஓவியங்களை படைக்க கலைஞர்கள் எந்த விதமான நிறமிகளைப் பயன்படுத்தினர். என்பதை அறிந்து அவற்றை சேமித்தார் எட்வார்ட். அவரின் உழைப்பால் வண்டுகளின் சாறு, மம்மி போன்றவற்றை கூட நிறமியாக பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை இப்போது அறிந்துகொள்கிறோம்.
Edward Forbes Pigment: உலகிலேயே அரிதான நிறங்கள் எவை தெரியுமா? - ஒரு கலர்ஃபுல் தகவல்!
Edward Forbes Pigment: உலகிலேயே அரிதான நிறங்கள் எவை தெரியுமா? - ஒரு கலர்ஃபுல் தகவல்!Canva
Published on

வண்ணங்களை தூரிகையின் வழியாக ஓவியப்பலகைக்கு கொண்டுவருவது இன்றைய காலத்தில் மிகவும் எளிதான ஒன்று. ஒரு நல்ல வாட்டர்கலர் போர்டை வாங்கி அதிலிருக்கும் வண்னங்களை மிக்ஸ் செய்து பூசுவது மிகவும் எளிதானதாக இருக்கிறது.

டிஜிட்டல் யுகத்தில் மில்லியன் கணக்கான வண்ணங்கள் கணினியில் அடைந்துகிடக்கின்றன. அவற்றை டார்க்காகவும் லேசாகவும் மாற்றுவது மிகவும் எளிதானதாக இருக்கிறது.

ஆனால் இன்றும் நாம் கொண்டாடும் தலைசிறந்த பண்டைய ஓவியங்கள் வரையப்பட்ட காலத்தில் ஒரு நிறத்தை பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.

ஓவியர்கள் காடு, மலைகளில் திரிந்து தாவரங்களையும் கனிமங்களையும் ஆராய்ந்து தங்களுக்குத் தேவையான வண்ணத்தைக் கண்டறிந்தனர். தேவையான வண்ணத்தைக் கொண்டிருக்கும் பொருளை நிறமி எனக் கூறலாம்.

சில நிறமிகள் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியனவாக இருந்தன. என்றாலும் அவற்றை கடுமையான உழைப்பின் வழி பெற்று சிறந்த ஓவியங்களை வரைந்தனர்.

அறிவியல் வளர்ந்த பின்னர் எல்லா நிறங்களும் வாட்டர் கலரிலேயே கிடைத்தன. இதனால் உண்மையான பொருட்களில் இருந்து வண்ணங்களை உபயோகப்படுத்தும் பழக்கத்தை ஓவியர்கள் கைவிட்டனர்.

நிஜ வண்ணங்களை நாம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

எட்வர்ட் ஃபோர்ப்ஸ்

2500 மேற்பட்ட நிஜ நிறமிகள் இப்போதும் நம்மிடம் இருக்கின்றன. இதற்காக நாம் எட்வர்ட் ஃபோர்ப்ஸ் என்பவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஹார்வார்ட் பல்கலைகழகத்தின் வரலாற்று ஆசிரியராகவும், ஹார்வார்ட் மியூசியத்தின் இயக்குநராகவும் பணியாற்றிய இவர் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பயணம் செய்து நிறமிகளை சேமித்தார்.

வரலாறு முழுக்க ஓவியங்களை படைக்க கலைஞர்கள் எந்த விதமான நிறமிகளைப் பயன்படுத்தினர். என்பதை அறிந்து அவற்றை சேமித்தார் எட்வார்ட்.

அவரின் உழைப்பால் வண்டுகளின் சாறு, மம்மி போன்றவற்றை கூட நிறமியாக பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை இப்போது அறிந்துகொள்கிறோம்.

இப்படி கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகவும் அறிதான நிறமிகள் எவை?

ஒவ்வொரு நிறமிக்கு பின்னரும் ஒரு கதை இருக்கிறது

சிந்தடிக் அல்ட்ராமரைன் - Synthetic Ultramarine

இந்த நிறமி 1826ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது தங்கநிறமாக பயன்படுத்தப்பட்டது.

ட்ராகனின் ரத்தம் - Dragon's Blood

இந்த நிறமி அடர் இரத்த நிறமாகும். இது பிரம்பு பனையில் இருந்து எடுக்கப்பட்டது.

குவெர்சிட்ரான் - Quercitron

இது ஒரு அடர் மஞ்சள் சாயம். மத்திய மற்றும் மேற்கு அமெரிக்காவில் வளரும் அடர் பழுப்பு ஓக் மரங்களில் இருந்து இந்த நிறம் பெறப்பட்டது.

Edward Forbes Pigment: உலகிலேயே அரிதான நிறங்கள் எவை தெரியுமா? - ஒரு கலர்ஃபுல் தகவல்!
ஏ. ஆர். ரஹ்மான் பகிர்ந்த ‘தமிழணங்கு’ ஓவியம் யார் வரைந்தது தெரியுமா?

அன்னட்டோ - Annatto

இது ஒரு வகை செம்பழுப்பு நிறம். பிக்ஸா ஓரெல்லனா என்ற தாவரத்தில் இருந்து இந்த நிறம் பெறப்படுகிறது. இதனை தண்ணீருடன் சேர்த்து சீஸ், வெண்ணை மற்றும் அழகு பொருட்களுக்கு பயன்படுத்தினர்.

லபிஸ் லசுலி - Lapis Lazuli

இது ஒருவித நீல நிறமுடைய கல். தங்கத்தை விட அரிதான இதனை ஆப்கானிஸ்தான் சுரங்கங்களில் எடுத்து ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தனர்.

Edward Forbes Pigment: உலகிலேயே அரிதான நிறங்கள் எவை தெரியுமா? - ஒரு கலர்ஃபுல் தகவல்!
ஓரே சமயத்தில் 6 ஓவியங்களை வரைந்த ஓவியர்- வியப்பில் நெட்டிசன்கள்

மம்மி பிரவுன் - Mummy Brown

இது 18 மற்றும் 19ம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக இருந்தது. இதனை எடுப்பதற்காக எகிப்தில் இருந்து மம்மிகளைக் கடத்தினர். அதனைச் சுற்றியிருக்கும் பொருளில் இருந்து பழுப்பு நிறத்தை பிரித்து எடுத்தனர்.

கொச்சினல் - Cochineal

இது வகையான சிகப்பு நிறம். வண்டுகளை பிழிந்து எடுக்கப்படுகிறது. உணவுகளுக்கும் அழகு பொருட்களுக்கும் இதனைப் பயன்படுத்தினர்.

Edward Forbes Pigment: உலகிலேயே அரிதான நிறங்கள் எவை தெரியுமா? - ஒரு கலர்ஃபுல் தகவல்!
பலகையைப் பார்க்காமல் இரு கைகளாலும் வரையும் ஓவியர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

பிரேசில்வுட் - Brazilwood

பிரேலிசிவுட் என்ற அடர் சிகப்பு - பழுப்பு நிறம் சில மரங்களின் மையப்பகுதியில் இருந்து பெறப்பட்டது.

எமரல்ட் கிரீன் - Emerald Green

காப்பர் அசிட்டோஅர்செனைட் என்ற வேதிப்பொருளில் இருந்து பூச்சிகளுக்கு பயன்படுத்தும் இந்த பச்சை நிறம் பெறப்பட்டது.

Edward Forbes Pigment: உலகிலேயே அரிதான நிறங்கள் எவை தெரியுமா? - ஒரு கலர்ஃபுல் தகவல்!
நெஞ்சு முடியோடு டிக்டாக் செய்யும் ஓவியர் - பெண் உடலில் முடி இருப்பது தவறா என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com