30 கோடி ரூபாய் மதிப்புள்ள எலும்புக்கூடு; அப்படி என்ன சிறப்பு?

டெய்னோனிசஸ் (Deinonychus) எலும்புக் கூடு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 11ஆம் தேதி வரை கண்காட்சிக்கு வைக்கப்படவிருக்கிறதாம். மே 12ஆம் தேதி ஏலம்விட்டு அதற்கான விலையை நிர்ணயிக்கவிருக்கிறார்கள்.
எலும்புக்கூடு
எலும்புக்கூடுTwitter
Published on

நீங்கள் படித்த தலைப்பு சரிதான், ஒரு எலும்புக் கூடுக்கு இத்தனை கோடி ரூபாய் கொடுக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அது யாருடைய எலும்பு? ஏன் இந்த எலும்புக் கூடுக்கு மட்டும் இத்தனை சிறப்பு? வாருங்கள் பார்ப்போம்.

நியூயார்க் நகரத்தில் இந்த வசந்த காலத்தில், டெய்னோனிசஸ் (Deinonychus) என்றழைக்கப்படும் ஒரு வித டைனோசர் இனத்தின் எலும்புக் கூட க்றிஸ்டீஸ் என்கிற பிரபல ஏல நிறுவனத்தால் ஏலத்தில் விட இருப்பதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த டெய்னோனிசஸ் இனத்தை அடிப்படையாகக் கொண்டு தான் ஜுராசிக் பார்க் என்கிற திரைப்படத்தில் காட்டப்பட்ட வெலொசிராப்டர் டைனோசர் வடிவமைக்கப்பட்டது. இந்த டெய்னோனிசல் கடந்த 1964ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த டைனோசரின் எலும்புக் கூடு தான் 4 மில்லியன் டாலர் முதல் 6 மில்லியன் டாலர் வரை (இந்திய ரூபாய் மதிப்பில் 30 கோடி ரூபாய் - 45 கோடி ரூபாய்) ஏலத்தில் விலை கோரப்பட வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

எலும்புக்கூடு
Bermuda Triangle : உண்மையில் இங்கு கப்பல்கள் காணாமல் போகிறதா? - விலகும் மர்மம்

டெய்னோனிசஸ் (Deinonychus) எலும்புக் கூடு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 11ஆம் தேதி வரை கண்காட்சிக்கு வைக்கப்படவிருக்கிறதாம். மே 12ஆம் தேதி ஏலம்விட்டு அதற்கான விலையை நிர்ணயிக்கவிருக்கிறார்கள்.

இந்த டைனோசரின் எலும்புக் கூடு தான் இருப்பதிலேயே முழுமையாகக் கிடைத்திருக்கும் எலும்புக் கூடு. இந்த டைனோசரின் 126 புதைபடிம எலும்புகள், க்ளாஸ் என்றழைக்கப்படும் அதனுடைய கால் பகுதி உட்பட அனைத்தும் இருக்கின்றன என கிறிஸ்டீஸ் ஏல நிறுவனத்தின் அறிவியல் மற்றும் இயற்கை வரலாறு பிரிவின் தலைவர் ஜேம்ஸ் ஹைஸ்லாப் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.

இந்த ஏலத்தில் டைனோசரின் எலும்புக் கூட்டைத் தாண்டி, உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் ஓவியம் ஒன்றும் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் வரை விலை போகலாமென கூறியுள்ளார் ஜேம்ஸ் ஹைஸ்லாப்.

எலும்புக்கூடு
ஹாபிட் : மனித குல மூதாதையர்கள் இன்னும் இந்தோனேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?
Andy Warhol
Andy WarholTwitter

ஒருகாலத்தில் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும், புகைப்படக் கலைஞராகவும், ஓவியராகவும் இருந்த ஆண்டி வார்ஹோல் வரைந்த ஓவியம் அது. அவ்வோவியத்தை ஐகானிக் சேஜ் ப்ளூ பேக் கிரண்ட் கொண்ட மர்லின் மன்றோ ஓவியம் (sage-blue background portrait of Marilyn Monroe) என்கிறார்கள். 20ஆம் நூற்றாண்டின் மிக விலை உயர்ந்த கலைப் படைப்பாக இந்த ஓவியம் விலை போகும் எனப் பல தரப்பிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஹென்றி ஹத்வே என்கிற இயக்குநர் இயக்கிய நையாகரா என்கிற படத்தைப் பார்த்து ஊக்கப்பட்டு, இந்த ஓவியம் வரையப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு, ஆண்டி வார்ஹோலின் 'சில்வர் கார் கிராஷ்' என்கிற ஓவியம் 104.5 மில்லியன் டாலருக்கு விற்பனையானதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

எலும்புக்கூடு
இடி அமீன் : மூன்று லட்சம் மக்களை கொன்று குவித்த கொடூரனின் வரலாறு

உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிகாசோவின் 'வுமன் ஆஃப் அல்ஜைர்ஸ்' என்கிற ஓவியம் கடந்த 2015ஆம் ஆண்டு 179.4 மில்லியன் டாலருக்கு ஏலம் கோரப்பட்டது. இதுதான் உலகிலேயே 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கலைப்படைப்புக்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இந்த ஏலத்தில், ஆண்டி வார்ஹோலின், சேஜ் ப்ளூ பின்புலத்தில் நிற்பது போன்ற மர்லின் மன்றோவின் படம், 179.4 மில்லியன் டாலரை விட அதிகமாக ஏலம் கோரப்பட்டாலே, அது உலகிலேயே அதிக விலை கோரப்பட்ட 20ஆம் நூற்றாண்டின் கலைப் படைப்பு என்கிற பெருமையைத் தட்டிச் செல்லும் என்பது மட்டும் உறுதி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com