கழுத்தில் அரிவாள், காலில் பூட்டு; 17ஆம் நூற்றாண்டில் புதைக்கப்பட்ட பெண் - காட்டேரியா?

காட்டேரி என்று கருதி அடக்கம் செய்யப்பட்ட ஒரு பெண் சடலத்தின் எச்சங்களை போலாந்து நாட்டின் பைன் (Pien) பகுதியில் கண்டுபிடித்திருக்கிறது ஓர் அகழாய்வுக் குழு.
அக்ழ்வாராய்ச்சி
அக்ழ்வாராய்ச்சிcanva
Published on

மூடநம்பிக்கைகள், பயம், சடங்கு சம்பிரதாயங்கள் என எப்போதும் நம்மைச் சுற்றி அறிவியலுக்கு முரணான விஷயங்கள் இருந்து வருகின்றன. காலப் போக்கில் சில விஷயங்களை அறிவியல் துணை கொண்டு நாம் கடந்து வருகிறோம் அல்லது கல்வி கற்பதன் மூலம் திருந்தி வருகிறோம்.

ஆனால், பல நூற்றாண்டு காலமாக நாம் கடைப்பிடித்து வந்த நம்பிக்கைகளின் எச்சங்களை அவ்வப்போது ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. அப்படி போலாந்து நாட்டில் ஒரு விஷயம் வெளிப்பட்டு இருக்கிறது.

காட்டேரி என்று கருதி அடக்கம் செய்யப்பட்ட ஒரு பெண் சடலத்தின் எச்சங்களை போலாந்து நாட்டின் பைன் (Pien) பகுதியில் கண்டுபிடித்திருக்கிறது ஓர் அகழாய்வுக் குழு. அந்த உடல் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று பேராசிரியர் டரியஸ் பொலின்ஸ்கி (Dariusz Poliński) மற்றும் நிகோலஸ் கோபர்னிகஸ் பல்கலைக்கழகத்தை (Nicolaus Copernicus University) சேர்ந்த அவரது அணியினர் கண்டுபிடித்துள்ளனர்.

போலாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் இருக்கும் பைன் நகரத்திலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் த்ராவ்ஸ்கோ (Drawsko) பகுதியில் ஏழு ஆண்டுகளுக்கு முன் காட்டேரிகளாக கருதப்பட்டு புதைக்கப்பட்ட ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

அப்பெண்ணின் கழுத்துப் பகுதியில் ஒரு கதிர் அரிவாள் போன்ற ஆயுதம் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த உடல் எழுந்தால் அரிவாளால் வெட்டுப்படும் விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த குழுவினர் கூறியுள்ளனர்.

அக்ழ்வாராய்ச்சி
உணவகத்திற்கு சென்றவருக்கு கிடைத்த அதிசய பொருள் - டைனோசர் கால்தடமா? ஆராய்ச்சி சொல்வதென்ன?

இந்த அரிவாள் போன்ற ஆயுதம் அந்த காலத்தில் விவசாயப் பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த ஒன்று. இந்த ஆயுதம் மூடநம்பிக்கை கொண்ட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது காட்டேரிகளாக இருந்து மரணித்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று எழுந்து வராமல் இருக்க உதவும் என்றும் நம்பப்பட்டது.

அந்த உடலோடு பேட்லாக் என்றழைக்கப்படும் பூட்டை வைத்து உடலின் இரு கால்களும் கட்டப்பட்டு இருந்ததாகவும் பேராசிரியர் டரியஸ் நியூயார்க் போஸ்ட் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

இப்படி கழுத்தில் கதிர் அரிவாள் போன்ற ஆயுதம் வைப்பது, காலை பேட்லாக் கொண்டு இறுகக் கட்டிப் போடுவது எல்லாம் காட்டேரியாக கருதியவர்களை அந்த காலத்தில் அடக்கம் செய்யும் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பெண்ணின் வயது என்னவாக இருக்கும் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் எதையும் கூறவில்லை. அதே போல அந்த உடலின் தலையில் ஒரு பட்டு தலைப்பாகையைக் காண முடிந்தது. இது அவர் சமூக ரீதியில் நல்ல அந்தஸ்தான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறது.

கிழக்கு ஐரோப்பா பகுதியில் 11ஆம் நூற்றாண்டு வாக்கில் காட்டேரிகள் குறித்த பயம் பெரிதாகப் பரவி இருந்தது. எனவே, 17ஆம் நூற்றாண்டுவாக்கில் வழக்கத்துக்கு மாறான அடக்கம் செய்யும் முறைகள் போலாந்தில் நடைமுறைக்கு வந்ததாக சில வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

ரத்தக் காட்டேரி குறித்த பயத்தினால், ரத்தக் காட்டேரிகளாக இருந்தவர்கள் மீண்டு உயிர்த்து எழுந்துவிடக் கூடாதென அவர்களின் கை, கால்களை வெட்டி தனித்தனியாக புதைப்பது, உடலை எரிப்பது, முகம் நிலத்தை நோக்கி இருக்கும் வகையில் காட்டேரியாக கருதப்பட்டவர்களைப் புதைப்பது என பல வழிகளை மக்கள் கடைப்பிடித்ததாகவும் கூறுகிறார் பேராசிரியர் டரியஸ்.

அக்ழ்வாராய்ச்சி
110 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட 'லிப்ஸ்டிக் தாவரம்' - அப்படி என்ன சிறப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com