ரிஷி சுனக் தான் அடுத்த பிரதமரா? இங்கிலாந்தில் அரசியல் வெற்றிடம் - விரிவான தகவல்கள்

ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் போட்டியிட்டு வென்று பிரதமரானார் லிஸ் ட்ரஸ். 45 நாட்கள் மட்டுமே பதவியிலிருந்த அவர் இங்கிலாந்தின் மோசமான பொருளாதார நிலைக் காரணமாக பதவி விலகியுள்ளார்.
இங்கிலாந்து அரசில் ஏற்பட்ட வெற்றிடம், இந்த நிலைக்கு காரணமென்ன? - அடுத்தது என்ன நடக்கும்?
இங்கிலாந்து அரசில் ஏற்பட்ட வெற்றிடம், இந்த நிலைக்கு காரணமென்ன? - அடுத்தது என்ன நடக்கும்?Twitter
Published on

இங்கிலாந்து பிரதமாரக 6 வாரங்களுக்கு முன் பதவியேற்ற லிஸ் ட்ரஸ் அக்டோபர் 18ம் தேதி பதவி விலகுவதாக அறிவித்தார். அதன் படி, கடந்த வியாழன் அன்று பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து அரசு நிலையற்றதாக இருந்து வருகிறது. லிஸ் ட்ரஸ்ஸின் இடத்தை யார் நிரப்பபோகிறார்? என்ற கேள்வியை மொத்த ஐரோப்பியாவும் எழுப்பி வருகிறது.

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக இருந்த டொனால்ட் டிரம்ப் பதவி விலகலுக்கு பிறகு, அந்தக் கட்சியின் சார்பில் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் போட்டியிட்டு வென்று பிரதமரானார் லிஸ் ட்ரஸ். 45 நாட்கள் மட்டுமே பதவியிலிருந்த அவர் இங்கிலாந்தின் மோசமான பொருளாதார நிலைக் காரணமாக பதவி விலகியுள்ளார்.

பிரிட்டனின் பொருளாதார நெருக்கடி

கோவிட் பிறகான பொருளாதார அழுத்தம் இங்கிலாந்தை விட்டு முழுவதுமாக விலகவில்லை. 2022ம் ஆண்டு இங்கிலாந்தில் பணவீக்கம் பல மடங்கு அதிகரித்தது.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல உக்ரைன் - ரஷ்யா போரும் அமைந்தது. ரஷ்யா மீதான பொருளாதார தடைகளால் எண்ணெய் விலை அதிகரித்தது.

இதற்கிடையில் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிக வரிகளை விதிக்கத் தொடங்கியது அரசு. அரசின் வரிகளால் நடுத்தர வர்க மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

போரிஸ் ஜான்சன் மீதான குற்றச்சாட்டுகளால் அவர் பதவி விலகினார்.

இங்கிலாந்து அரசில் ஏற்பட்ட வெற்றிடம், இந்த நிலைக்கு காரணமென்ன? - அடுத்தது என்ன நடக்கும்?
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா: அவரது வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்கள்

புதிதாக பதவியேற்ற லிஸ் ட்ரஸ், நிதியமைச்சர் ரிஷி சுனக்கிற்கு பதிலாக குவாசி குவார்டெங்கால் என்பவரை அமர்த்தினார். இவர்கள் கூட்டணி மினி பட்ஜெட் என்ற பெயரில் வரிகளை குறைத்தனர், மின்சார கட்டணத்தை குறைத்தனர். இதனால் அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது. பணமதிப்பிழப்பு ஏற்பட்டது.

45 நாட்கள் மட்டுமே பதவிலிருந்த லிஸ்ட்ரஸ் இறுதியில் குவாசி குவார்டெங்கால்க்கு பதிலாக ஜெர்மி ஹன்ட் என்பவரை அமர்த்தினார். இவர் வரிக்குறைப்பை நீக்கியும் மின்சார கட்டணக் குறைப்பு ஏப்ரல் வரை மட்டும் செல்லும் என்று மாற்றியும் ஆணையிட்டார்.

 எதிர்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர்
எதிர்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர்

இங்கிலாந்தில் மீண்டும் பொதுத் தேர்தல்?

குவாசி குவார்டெங்கால் பதவி நீக்கத்திலிருந்தே இங்கிலாந்தின் நிலையற்றத் தன்மையைப் போக்க தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி வருகிறார் எதிர்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர்.

உழைப்பாளர் கட்சியின் சார்பில் கன்சர்வேடிவ் கட்சியின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த ஐந்து வருட ஆட்சியில் ஆறாவது முறையாக பிரதமரைத் தேடி வருகிறது கன்சர்வேடிவ் கட்சி.

உள்துறை அமைச்சராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் பதவி விலகல் மற்றும் நிதி அமைச்சர் குவாசி குவார்டெங் பதவி மாற்றம் போன்றவை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிரான அலையை எழுப்பியிருக்கிறது.

இதனால் பொதுத்தேர்தல் கோரிக்கை வலுத்துள்ளது. அரசுக்கு உச்சபட்ச அழுத்தம் ஏற்பட்டால் பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு இடையில் இது நடை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவுதான்.

பென்னி மொர்டன்ட்
பென்னி மொர்டன்ட் Twitter

கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த பிரதமர் யார்?

ரிஷி சுனக்

லிஸ் ட்ரெஸுடன் பிரதமருக்கான போட்டியில் இருந்த இந்திய வம்சாவளி ரிஷி சுனக் கடந்த பிரதமருக்கான தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார். கன்சர்வேடிவ் கட்சியின் 1,60,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்த கடைசிகட்டத் தேர்தலில் ரிஷி சுனக் 43% வாக்குகளைப் பெற்றார். இதனால் இவர் அடுத்த பிரதமராக வர வாய்ப்புகள் இருக்கிறது.

பென்னி மொர்டன்ட்

சுனக்கிற்கு போட்டியாக இருக்கிறார் பென்னி மொர்டன்ட். ஹவுஸ் ஆஃப் காமன்ஸின் தற்போதைய தலைவராக இருக்கும் இவர் கடந்த தேர்தலில் 3ம் இடம் பிடித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.

போரிஸ் ஜான்சன்

ட்விட்டரில் #BringBackBories என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சில கன்சர்வேடிவ் கட்சித் தலைவர்கள். போரிஸ் ஜான்சனின் வெற்றிடம் நிரப்ப முடியாததாகவே இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

இவர்கள் தவிர பாதுகாப்புத் துறைச் செயலர் பென் வாலஸ் மற்றும் சமீபத்தில் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்ட சுயெல்லா பிரேவர்மேன் ஆகியோரும் பிரதமருகான தேர்தலில் பங்கெடுக்க வாய்ப்பு இருக்கிறது.

இவர்களில் வரும் திங்கள் கிழமை 100க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுபவர்கள் தேர்தலை சந்திக்கலாம். மொத்தமாக 357 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதால் அதிக பட்சம் 3 போட்டியாளர்களே இருப்பார்கள்.

இங்கிலாந்து அரசில் ஏற்பட்ட வெற்றிடம், இந்த நிலைக்கு காரணமென்ன? - அடுத்தது என்ன நடக்கும்?
ரிஷி சுனக்: பிரிட்டன் பிரதமர் ஆக பதவி ஏற்கவிருக்கும் இவர் யார்? இவர் இந்திய பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com