Ronaldo: 7 கோடி ரூபாய் காரை ரொனால்டோவுக்கு பரிசளித்த காதலி
Ronaldo: 7 கோடி ரூபாய் காரை ரொனால்டோவுக்கு பரிசளித்த காதலிTwitter

Ronaldo: கிறிஸ்துமஸ்க்கு ரூ.7 கோடி காரை பரிசளித்த காதலி - ரொனால்டோவின் மற்ற கார்கள் என்ன?

இந்த சொகுசு கார் அதன் வடிவமைப்பிற்கு பெயர் பெற்றது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.7 கோடி, வரிகள் அல்லாமல்.
Published on

நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோவுக்கு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கியிருக்கிறார் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்பே நமக்கு பிடித்தமானவர்களுக்கு பரிசு கொடுப்பது தான். நாம் கொடுக்கும் பரிசு, ஒருவரோடு ஒருவர் எவ்வளவு அன்னியோனியமாக இருக்கிறோம் என்பதை குறிக்கும்.

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரோல்ஸ் ராய்ஸ் டான் காரை ரொனால்டோவுக்கு பரிசாக வழங்கியுள்ளார் ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா .

இந்த சொகுசு கார் அதன் வடிவமைப்பிற்கு பெயர் பெற்றது.

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.7 கோடி, வரிகள் அல்லாமல். 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் டான் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஒரே கன்வர்டிபிள் காரும் இதுதான்

Ronaldo: 7 கோடி ரூபாய் காரை ரொனால்டோவுக்கு பரிசளித்த காதலி
ரொனால்டோ : ரசிகரின் மொபைலை தட்டிவிட்டத்துக்கு 50 லட்சம் அபராதம், விளையாட தடை!

தனக்கு பரிசாக வழங்கப்பட்ட காரின் புகைப்படத்தை ரொனால்டோ தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அவரது காதலி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரொனால்டோவுக்கு இந்த பரிசை வழங்கும் தருணத்தை முழுமையாக வீடியோவாக பதிவிட்டிருந்தார்

இந்த ரோல்ஸ் ராய்ஸ் டான் காரை தவிர, ரொனால்டோவிடம் இன்னும் சில சொகுசு கார்களும் உள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், ஃபெராரி f12 TDF, லம்போர்கினி அவெண்டாடோர், பார்ஷே 911 டர்போ, மெர்சிடீஸ் பென்ஸ் S65, மெக்லாரன் சென்ன, பென்ட்லி கான்டினென்டல், புகாட்டி, செவர்லே கேமரோ ZL1 உள்ளிட்ட 18 கார்கள் உள்ளன

Ronaldo: 7 கோடி ரூபாய் காரை ரொனால்டோவுக்கு பரிசளித்த காதலி
ரொனால்டோ : இன்ஸ்டாவில் 50 கோடி பேர் பின்தொடரும் ஒரே நபர்! - டாப் 10-ல் இருப்பது யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com