"வட கொரியாவிலிருந்து ஏவுகனைகளும் பீரங்கி குண்டுகளும் வாங்கும் ரஷ்யா" அமெரிக்க உளவுத்துறை

அமெரிக்க உளவுத்துறை அதிகாரி மாஸ்கோவின் நடவடிக்கைகள் குறித்து "பொருளாதார தடைகள் மற்றும் ஏற்றுமதி தடைகள் காரணமாக ரஷ்ய படைகள் உக்ரைனில் ஆயுத விநியோக பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது." என்று கூறியிருக்கிறார்.
Kim Jong Un - Putin
Kim Jong Un - PutinTwitter
Published on

அமெரிக்க உளவுத்துறை அளித்த புதிய தகவலின் படி உக்ரைனுடனான போருக்காக ரஷ்யா, வட கொரியாவிடமிருந்து பல ஏவுகனைகளையும் பீரங்கி குண்டுகளையும் வாங்க உள்ளதாக அசோசியேடட் பிரஸ் (AP) செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் ரஷ்யா இந்த போரை நடத்தி வருகிறது.

இதற்காக உலக நாடுகள் ரஷ்யாவை கடுமையாக கண்டித்து வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக வெவ்வேறு பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன.

நேட்டோ அமைப்புடன் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் நேரடியாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குதல் போன்ற உதவிகளை செய்து வருகின்றன.

இதற்கிடையில் பெயர் வெளியிடப்படாத அமெரிக்க உளவுத்துறை அதிகாரி மாஸ்கோவின் நடவடிக்கைகள் குறித்து செய்தி நிறுவனத்திடம் "பொருளாதார தடைகள் மற்றும் ஏற்றுமதி தடைகள் காரணமாக ரஷ்ய படைகள், உக்ரைனில் ஆயுத விநியோக பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது." என்று கூறியிருக்கிறார்.

மேலும் உளவுத்துறை அதிகாரி, "ரஷ்யா வடகொரியாவிலிருந்து இராணுவ ஆயுதங்கள் வாங்க தயாராகி வருகின்றனர். எவ்வளவு ஆயுதங்கள் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை" என்றும் கூறியுள்ளார்.

Kim Jong Un - Putin
உக்ரைன் ரஷ்யா போர்: இறுதியில் ரஷ்யா வீழ வாய்ப்பு இருக்கிறதா? - அமெரிக்கா கூறுவது என்ன?

சமீபத்தில் ரஷ்யா இரானிய தயாரிப்பு ட்ரோன்களை வாங்கியதாக ஜோபைடன் நிர்வாகம் உறுதி செய்தது. ஆனால் அந்த ட்ரோன்களை செயல்படுத்துவதில் ரஷ்ய வீரர்களுக்கு தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இதற்கிடையில் "ஆறு மாதத்துக்கும் மேலாக ஆக்கிரமிப்பு போர் நடத்தி வரும் ரஷ்யா அதன் அடிப்படை நோக்கங்கள் எதிலுமே வெற்றி பெற வில்லை" என பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

போரில் தொடர்ந்து ரஷ்யா ஆயுதங்களையும் வீரர்களையும் இழந்து வருகிறது. இது அந்த நாட்டின் வருங்கால போர்த்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பென் வாலஸ் கூறியிருந்தார்.

Kim Jong Un - Putin
அமெரிக்கா - ரஷ்யா அணு ஆயுத போர் நடந்தால் எத்தனை பேர் உயிரிழப்பர்? : அதிர வைக்கும் தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com