ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் தன்னைத் தானே ஏலியன் என்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருப்பதாகவும் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்ட பதிவுகளில் தான் ஒரு ஏலியன் என்றும் உலகத்தை அணு ஆயுத மோதலில் இருந்து பாதுகாக்க வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
போரிஸ் கிப்ரியனோவிச் (Boris Kipriyanovich) என்ற அந்த நபர் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதாக கருதப்படும் மார்ஷியன் இனத்தைச் சேர்ந்தவன் என்றும் அந்த இன ஏலியன்கள் அடிக்கடி கிரகங்கள் கடந்து பயணிப்பது வழக்கம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் அடிக்கடி பூமியை பார்வையிட்டுள்ளதாகவும், குறிப்பாக லெமூரியா கண்டம் இருந்த காலத்தில் கூட பூமிக்கு வந்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
போரிஸ் ஒரு ஸ்பேஸ்ஷிப் வைத்திருந்ததாக கூறியிருக்கிறார். அது திடமான உலோகத்தால் ஆன வெளிப்பகுதி 25%, ரப்பர் போன்ற பொருளால் ஆன உட்பகுதி 30%, அதற்குள் 30% உலோக பகுதி மற்றும் 4% காந்தம் உள்ளிட்ட பொருட்களால் ஆனது என்றும் காந்தத்தை இயக்குவதன் மூலம் அந்த ஸ்பேஷிப்பை பயன்படுத்தி பறந்து செல்லலாம் என்றும் கூறியுள்ளார்.
போரிஸின் தாயும் அவரது மகன் மார்ஸிலிருந்து வந்திருப்பதாகக் கூறுகிறார். மருத்துவரான அவர், " 1996ம் ஆண்டு போரிஸ் பிறக்கும் போது எனக்கு எந்த வலியும் ஏற்படவில்லை. அவன் பிறந்ததுமே பெரிய மனிதர்களைப் போல என்னை உற்றுப் பார்த்தான். ஒரு மருத்துவராக பிறந்த குழந்தைகளுக்கு உற்று பார்க்கும் திறன் இருக்காது என எனக்குத் தெரியும்" என்று போரிஸின் பிறப்புக் குறித்து கூறுகிறார்.
மேலும் போரிஸ் வளர வளர அவனிடம் பல தனித்துவங்களைக் கவனித்ததாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக போரிஸுக்கு 1 வயது இருக்கும் போதே அவர் செய்தி தாள் தலைப்புகளைப் படித்தார் எனவும், குழந்தையாக இருக்கும் போது எந்த உள்வாங்களும் இல்லாமல் செவ்வாய் கிரகம் குறித்து பல விஷயங்களைப் பேசுவார் என்றும் கூறியிருக்கிறார். சிறுவயதிலேயே விண்வெளிக்குறித்த தெளிவான புரிதல் சிறுவனுக்கு இருந்ததாகவும் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் லோனோஸ்பேரில் உள்ள Institute of Terrestrial Magnetism மற்றும் Russian Academy of Sciences உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னதாக போரிஸை ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வுக்காக அவரது ஆரா-வை புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இறுதியாக போரிஸிடம் வழக்கத்துக்கு மாறான அதிர்வுகள் (vibes) இருப்பதாக கூறியுள்ளனர்.
கதையில் முக்கியமான ட்விஸ்ட் என்னவென்றால் தற்போது அந்த தாயும் மகனும் காணவில்லை என டெய்லி ஸ்டார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அவர்கள் ரஷ்யாவின் பாதுகாப்பில் யாருக்கும் தெரியாத கிராமத்தில் வாழ்ந்து வருவதாக சிலர் கூறுகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust