ஸ்காட்லாந்து : 1200 மான்களை 'கொல்ல' வாக்கெடுப்பு நடத்தும் எஸ்டேட் - ஏன் இந்த விபரீதம்?

மான்கள் கொல்லப்படுவதே நம் ஆரோக்கியத்துக்கு நல்லது என சிலரும், என்ன ஆனாலும் மான்களை கொலை செய்வது நியாயமாகாது என சிலரும் வாதாடி வருகின்றனர்.
ஸ்காட்லாந்து : 1200 மான்களை 'கொல்ல' வாக்கெடுப்பு நடத்தும் எஸ்டேட் - ஏன் இந்த விபரீதம்?
ஸ்காட்லாந்து : 1200 மான்களை 'கொல்ல' வாக்கெடுப்பு நடத்தும் எஸ்டேட் - ஏன் இந்த விபரீதம்?Twitter
Published on

ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு எஸ்டேட்டில் சுமார் 1200 மான்களை கொல்வதற்காக வாக்கெடுப்பு நடந்துவருகிறது.

93,000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சவுத் உயிஸ்ட் எஸ்டேட்டில் வாழும் மக்களில் சிலர், அங்குள்ள மான்களை கொல்லவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மான்களை பூச்சிகள் கடித்து ஏற்படும் காயத்திலிருந்து லைம் என்ற நோய் பரவும் என்பதால் இத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த எஸ்டேட்டை ஸ்டோரஸ் உபிஷிட் என்ற நிறுவனம்தான் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனம் அந்த எஸ்டேட்டில் அதிகப்படியான மான்கள் இருப்பதாகவும் பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதிகமான மேய்ச்சல், சொத்துக்கள் சேதமடைதல், தோட்டங்களை நாசப்படுத்துதல் என மான்களால் அந்த பகுதியில் பல பிரச்னைகளை இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும் மான்களை கொல்லுவது அந்த பகுதிக்கு மட்டுமல்லாமல் மொத்த சூழலியல் சமநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என நிறுவனத்தில் சார்பாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைம் நோய்

லைம் ஒரு பாக்டீரியாத் தொற்று ஆகும். இது நரம்பியல் பிரச்னைகளை ஏற்படுத்தும். மூட்டு வலி முதல் இதய பாதிப்பு வரை படிப்படியாக சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது.

மான்களில் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாக இருப்பது உன்னிப்பூச்சிகளே. இவை சமீபத்திய சில மாதங்களில் பெருமளவு அதிகரித்துவிட்டதாக மக்கள் கூறுகின்றனர்.

ஸ்காட்லாந்து : 1200 மான்களை 'கொல்ல' வாக்கெடுப்பு நடத்தும் எஸ்டேட் - ஏன் இந்த விபரீதம்?
Steppe Bison: 10,000 ஆண்டுகளுக்குப் பின் அழிவிலிருந்து மீண்டு வந்த காட்டெருமை

இதனால் மான்கள் கொல்லப்படுவதே நல்லது என சிலரும், என்ன ஆனாலும் மான்களை கொலை செய்வது நியாயமாகாது என சிலரும் வாதாடி வருகின்றனர்.

மற்றொருபக்கம் உள்ளூர்வாசிகளில் சிலருக்கு மான்களை பராமரிக்கும் பணியும் போய்விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

எஸ்டேட் நிர்வாகம் மான்களை சரியாக பராமரிக்கத் தவறியதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். பல அமைப்புகள் மான்களை கொல்லும் எண்ணத்தைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

லைம் நோய்களுக்காக மான்கள் கொல்லப்படுவது பற்றிய விவாதம் ஸ்காட்லாந்தில் பல பகுதிகளில் தசாப்தகாலத்துக்கும் மேலாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்து : 1200 மான்களை 'கொல்ல' வாக்கெடுப்பு நடத்தும் எஸ்டேட் - ஏன் இந்த விபரீதம்?
Zombie -ஆக மாறும் மான்கள், மனிதர்களுக்கும் பரவும் நோய் - அச்சத்தில் மக்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com