Steppe Bison: 10,000 ஆண்டுகளுக்குப் பின் அழிவிலிருந்து மீண்டு வந்த காட்டெருமை

இந்த காட்டெருமைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்று இங்கிலாந்து பகுதிகளில் திரிந்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் கென்ட் கவுன்டியில் உள்ள காடுகளில் 3 பெண் காட்டெருமைகள் மட்டுமே விடப்பட்டுள்ளன.
Steppe Bison
Steppe BisonTwitter
Published on

மனித இனம் அறிவியல் மூலம் செழித்து வாழத் தொடங்கியதிலிருந்து, இந்த பூமியில் காணாமல் போன, அழிந்து போன அல்லது அழிக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலைச் சொல்லிமாலாது.

அப்படி மனித தவறுகளாலோ, இயற்கையாகவோ சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன Steppe Bison என்கிற காட்டெருமை இனம் மீண்டும் பிரிட்டனின் காடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரிய விடப்பட்டுள்ளன.

இந்த காட்டெருமைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்று இங்கிலாந்து பகுதிகளில் திரிந்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக கென்ட் கவுன்டியில் உள்ள காடுகளில் 3 பெண் காட்டெருமைகள் மட்டுமே விடப்பட்டுள்ளன.

ஒரு வயதான பெண் காட்டெருமை ஸ்காட்லாந்தில் உள்ள ஹைலேண்ட் வன விலங்குப் பூங்காவிலிருந்தும், இரண்டு இளம்பெண் காட்டெருமைகள் அயர்லாந்திலுள்ள ஃபொடா வனவிலங்கு பூங்காவிலிருந்து கென்ட் காடுகளுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மூன்று காட்டெருமைகளையும் தொடர்ந்து கண்காணிக்க வசதியாக அதன் உடலில் டிராக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பெண் காட்டெருமைகளோடு, ஒரு ஆண் காட்டெருமையும் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் சேர்க்கப்படும் என இத்திட்டத்தில் தொடர்புடைய அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆண் காட்டெருமை ஜெர்மனியிலிருந்து கொண்டு வரப்பட உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த காட்டெருமைகள் சுற்றுச்சூழலைக் கட்டமைக்கும் பொறியாளர்கள் (Ecosystem Engineers) என்று அழைக்கப்படுகின்றன. $1.4 மில்லியன் டாலர் "வைல்டர் ப்ளீன் திட்டத்தின்' கீழ் இக்காட்டெருமைகள் காட்டுக்குள் விடப்படுகின்றன. இந்த விலங்கையும், அதன் இயற்கையான நடத்தைகளையும் வைத்து, ஒரு வணிக ரீதியிலான பைன் காட்டை, இயற்கை வனமாக மாற்றும் ஆய்வு முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.

Steppe Bison
நீருக்கடியில் நிலநடுக்கமா?கடலுக்கு வெளியே வந்த அரியவகை உயிரினம்

இந்த காட்டெருமைகளால் ஒரு முழு பகுதியை முற்றிலும் தலை கீழாக மாற்ற முடியும், புதிய மரம் செடி கொடிகளும் உயிரினங்களும் செழித்து வாழ வழி வகுக்கும் என வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த Steppe Bison இன காட்டெருமைகள் மரப்பட்டைகளை உண்ணும். அதனால் டஸ்ட் பேத் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நுண்துகள் குப்பைகளை ஏற்படுத்தும், அது செடி கொடிகளுக்கும், விலங்கினங்களுக்கும் பெரிதும் உதவும் எனக் கூறப்படுகிறது.

Steppe Bison
250 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினம் : புதை படிமம் கண்டுபிடிப்பு - ஆச்சர்ய தகவல்

மறுபக்கம், பைன் மரங்களைக் காட்டெருமைகள் சாப்பிடுவதால் மரங்கள் சாய்ந்து, சூரிய ஒளி காட்டுப் பகுதியின் நிலத்தில் படும், அது செடி கொடிகள் வளர உதவும். அது போக, அப்புதிய காட்டுப் பகுதி வழக்கத்தை விடக் கூடுதல் கார்பனை உறிஞ்சிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலைகளை எதிர்கொண்டு வருவது இங்குக் குறிப்பிடத்தக்கது.

Steppe Bison
டைனோசர் : இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

தொடக்கத்தில் பெண் காட்டெருமைகளுக்கு ஐந்து ஹெக்டேர் நிலப்பரப்பு திறந்து விடப்படும். ஆண் காட்டெருமை வந்த பின் 50 ஹெக்டேர் நிலப்பரப்பாகக் காட்டெருமைகளுக்கு விரிவாக்கப்படும். ஒட்டுமொத்தத்தில் வைல்டர் ப்ளீன் திட்டத்தின் கீழ் காட்டெருமைகளுக்கு மொத்தம் 200 ஹெக்டேர் நிலப்பரப்பு திறந்துவிடப்படும். இந்த பறந்து விரிந்த நிலப்பரப்பில் காட்டெருமைகளோடு மற்ற விலங்கினங்களும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ பிரிட்டன் திட்டத்தின் படி, காடுகள் உருவாக்கப்பட்டு காலநிலை மாற்றப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தால் சரி. நல்லது நடக்கும் என நம்புவோம்.

Steppe Bison
Hobbits : விஞ்ஞான சமூகத்தை உலுக்கும் பழங்கால சிறிய மனிதன் - ஆச்சரிய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com