Morning News Today : காபூலில் இரு பாலர்களும் தனித்தனி நாட்களில் கல்லூரிக்கு வர உத்தரவு

காபூல் பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் தெரிவித்த யோசனைப்படி எடுக்கப்பட்டிருக்கிற அம்முடிவில் இரு பாலர்களும் தனித்தனியாகப் படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kabul  college
Kabul collegeTwitter
Published on

காபூல் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி நாட்கள் ஒதுக்கீடு - தாலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்கள். இந்நிலையில், உயர்கல்வி அமைச்சக செய்தித்தொடர்பாளர் அகமது தாகி, இருபாலர் சேர்ந்து படிக்கும் முறையில் நேற்று புதிய உத்தரவை அறிவித்தார்.

காபூல் பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் தெரிவித்த யோசனைப்படி எடுக்கப்பட்டிருக்கிற அம்முடிவில், புதிய கால அட்டவணைப்படி, வாரத்தில் 3 நாட்கள் முழுக்க முழுக்க மாணவிகள் மட்டும் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவர். அந்த நாட்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. மீதி 3 நாட்கள் முழுக்க முழுக்க மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பாலர்களும் தனித்தனியாகப் படிக்க இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் முன்மாதிரியாகத் திகழும் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பொருட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபைக் கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், செங்காடு கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்புக் கிராம சபைக் கூட்டம் நடந்தது.

அப்போது பேசிய முதல்வர்," 600 ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘கிராம செயலகம்’, மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்துப் பேசினார். 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்தக் கோரி கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். உங்கள் கோரிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கப்படும். தமிழக கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் முன்மாதிரியாகத் திகழும்" எனப் பேசினார்.

MK Stalin
MK Stalin Twitter

தமிழகத்தில் கொரோனா பரவல் - முதல்வர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் சமீபமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் வரும் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

Kabul  college
HBD M K Stalin : முதல் தோல்வி டூ முதல்வர் - மு க ஸ்டாலின் குறித்த 25 விஷயங்கள்

`விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்' - காஷ்மீர் பண்டிட்டுகள் தர்ணா போராட்டம்

நேற்று தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது இதையொட்டி காஷ்மீரில் நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் மோடி.

அவர் நேற்று காஷ்மீருக்குச் சென்ற நிலையில், அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில், காஷ்மீர் பண்டிட்டுகள் நேற்று ஜம்முவில் தர்ணா போராட்டம் நடத்தினர். விக்ரம் கவுல் என்பவர் தலைமையில், காஷ்மீர் பண்டிட் தன்னார்வலர்கள், ஜம்முவில் பிரஸ் கிளப் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர். போலீஸார் அந்த தர்ணா போராட்டத்தை அப்புறப்படுத்தினர்.

வலதுசாரி வேட்பாளர் தோல்வி; 2-வது முறையாக பிரான்ஸ் அதிபராகிறார் இமானுவேல் மேக்ரான்!

2017- ம் ஆண்டு பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரானின் பதவி காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், நாட்டின் 12-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு 2 சுற்றுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தலில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்பட 12 பேர் களமிறங்கினர். பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்றுத் தேர்தல் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

முதல் சுற்று அதிபர் தேர்தல் கடந்த 10-ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல், நேற்று நடைபெற்றது. பின் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. முடிவில், மேக்ரான் 58 சதவிகித வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராகப் பதவியேற்கும் வாய்ப்பை பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வலதுசாரி வேட்பாளரான மரைன் லு பென் 42 சதவிகித வாக்குகள் பெற்றார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இமானுவல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Kabul  college
சென்னையில் ரயில் விபத்து : கடற்கரை நிலையத்தில் தடம்புரண்டதால் பரபரப்பு

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்டஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com