ஷாருக் கான், அமித்தாப் பச்சன், விராட் கோலி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் தங்களது ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்துக்குள் ட்விட்டர் நிறுவனம் அறிவித்தபடி ப்ளூ டிக் பெற கட்டணம் செலுத்தி சப்ஸ்க்ரிப்ஷன் பெறாதவர்களின் கணக்குகளில் இருக்கும் அங்கீகாரம் தான் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
செயலியை இணையத்தில் பயன்படுத்தும் போது மாதம் 8 டாலர் அல்லது மொபைலில் செயலியை பயன்படுத்தினால் மாதம் 11 டாலர் கட்டணம் செலுத்தவேண்டும் என்பதும் நிபந்தனையாக இருந்தது
கடந்த அக்டோபர் மாதம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கியதிலிருந்து, நிறுவனத்தில் செயலியின் பயன்பாட்டில் எத்தனை மாற்றங்கள் வந்தது என்பதை தினசரி நாம் பார்த்துக்கொண்டிருந்தோம்.
அவர் அறிவித்த மாற்றங்களில் முக்கியமான ஒன்று கணக்குகளுக்கு வழங்கப்படூம் ப்ளூ டிக். இந்த ப்ளூ டிக் என்பது ஒரு கணக்கு அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கான சான்றாக இருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு இந்த அம்சத்தை செயலி அறிமுகப்படுத்தியது.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நிறுவனங்கள், பிராண்டுகள் உள்ளிட்டவையை தனி நபர்களிடமிருந்து தனித்து அடையாளம் காண்பிக்க இந்த அம்சம் கொண்டுவரப்பட்டது.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னர் இந்த ப்ளூ டிக் பெற பயனர்கள் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை.
ஆனால் இந்த ப்ளூ டிக்கை இனிமேல் பயன்படுத்த கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவித்திருந்தார் மஸ்க். அப்படி கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்குகளில் இருக்கும் ப்ளூ டிக் அகற்றப்படும் எனவும், கட்டணம் செலுத்தி சப்ஸ்க்ரிப்ஷன் பெற ஏப்ரல் மாதம் வரை கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
அந்த கால அவகாசத்துக்குள் சந்தா பெறாதவர்களின் ப்ளூ டிக்குகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.
எலான் மஸ்க் ட்விட்டரை ஆளத் தொடங்கியதிலிருந்து, இந்த வெரிஃபிகேஷன் என்பது தரம் பிரிக்கப்பட்டது. கோல்டன் டிக் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, கிரே டிக் அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு, ப்ளூ டிக் தனி நபர்களுக்கு என்று தெரிவிக்கப்பட்டிருந்ததது.
நரேந்திர மோடி
ராகுல் காந்தி
ஷாருக் கான்
அமித்தாப் பச்சன்
சின்மயி
விராட் கோலி
பிரகாஷ் ராஜ்
பிரியங்கா சோப்ரா
மம்தா பேனர்ஜி
யோகி ஆதித்யாநாத்
இன்னும் சில நபர்களும் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர். கிட்டதட்ட 4 லட்சத்துக்கும் மேலான பயனர்கள் ப்ளூ டிக் அங்கீகாரத்தை பெற்றிருந்த நிலையில், தற்போது அது அகற்றப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust