வாழைப்பழ சிப்ஸ் டூ சோன் பப்டி: இந்தியன் ஸ்நாக்ஸுக்கு அடிமையான ஆஸ்திரேலிய பெண் |Video

சோன் பப்டியை ஒரு வாய் சாப்பிட்ட பிறகு இதுவரை சாப்பிட்டதில் மிகச் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்று என்று அவர் கூறுகிறார்.
சோன் பப்டி
சோன் பப்டிTwitter

ஆஸ்திரேலிய பெண் ஒருவர் சோன் பப்டி மற்றும் வாழைப்பழ சிப்ஸ் போன்ற இந்திய ஸ்நாக்ஸை முதன்முறையாக முயற்சிக்கும் வீடியோ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இந்தியன் ஸ்நாக்ஸ் வகைகளுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் பல நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் இந்திய ஸ்நாக்ஸ் வகையான சோன் பப்டியை முதன்முறையாக சாப்பிடும் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Snacks
SnacksCanva

அவர் அவ்வபோது தன் பேஸ்புக் பக்கத்தில் சுவாரஸ்யமான வீடியோக்களை பகிர்வது வழக்கம். இந்நிலையில் சோன் பப்டி தொடர்பான வீடியோவில் மற்ற இந்திய தின்பண்டங்களையும் முயற்சித்து அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அந்த வீடியோவில் அவர் வாழைப்பழ சிப்ஸ், சோன் பப்டி என பல்வேறு இந்திய ஸ்நாக்ஸை ஒவ்வொன்றாக முயற்சிப்பதையும் அது எவ்வாறு சுவையாக உள்ளது என்பதை தனது முகபாவனைகள் மூலம் வெளிப்படுத்தி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

சோன் பப்டியை ஒரு வாய் சாப்பிட்ட பிறகு இதுவரை சாப்பிட்டதில் மிகச் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்று என்று அவர் கூறுகிறார்.

சோன் பப்டி
ஆரோக்கியமான வாழ்வு : நோயற்று வாழ உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க 3 விதிகள்!

இந்த வீடியோ வெளியிடப்பட்டதிலிருந்து, 4.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 15,000க்கும் அதிகமான லைக்குகளையும் குவித்துள்ளது.

இந்த வீடியோவுக்கு மக்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். சிலர் சோன் பப்டி மீதான தங்கள் பிரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சோன் பப்டி
உடலில் கொழுப்பு சேராத, எடையை அதிகரிக்காத 9 டேஸ்டியான ஸ்நாக்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com