சோமாலியாவில் நீண்ட நாட்களாக நிலவும் பஞ்சத்தின் காரணமாக கடந்த ஆண்டு 43000 பேர் மரணித்திருப்பதாக சமீபத்திய அறிக்கைகள் கூறியுள்ளது.
சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சங்களிலேயே மிகவும் நீண்ட பஞ்சகாலம் இதுதான் என்றும் இறந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் பெரும் நிலப்பரப்புகளில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தின் விளைவுகள் பற்றி வெளியான முதல் அறிக்கை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் முதல் 6 மாத காலத்தில் 18000 முதல் 34000 பேர் வரை பஞ்சத்தால் மரணிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை உலக சுகாதார மையம், ஐ.நாவின் குழந்தைகள் முகமை மற்றும் சுகாதாரம், வெப்பமண்டல மருத்துவத்துக்கான லண்டன் கல்விநிலையம் இணைந்து வெளியிட்டது.
சோமாலியா மற்றும் அதன் அண்டை நாடுகளான கென்யா, எத்தியோப்பியாவில் தொடர்ந்து 6 பருவங்களுக்கு மழைப் பொய்த்திருக்கிறது. இதுவே பெரும் வறட்சி நிலவக் காராணம்.
தவிர உலக அளவில் உணவுப்பொருட்கள் விலையேற்றமும் உக்ரைன் போரும் சோமாலியா உணவுப் பற்றாக்குறையின் முக்கிய காரணங்களாகும்.
இதுவரை இல்லாதவகையில் 60 லட்சம் மக்கள் சோமாலியாவில் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை மிகவும் கடினமான சூழல் என விளக்கியுள்ளது ஐநா.
பஞ்சத்தினால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை கொடூரமானதாக உருவெடுத்திருக்கிறது. பசியால் குழந்தைகள் செத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் காலரா போன்ற நோய்களின் தாக்கமும் அதிகரித்து மரணத்துக்கு காரணமாக இருக்கிறது.
நாட்டில் உள்ள குழந்தைகளில் 30 பேர் ஊட்டச்சத்துக்குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் 10000த்தில் இரண்டு பேர் இறந்து வருவதாகவும் அறிக்கை கூறுகின்றது.
2011ம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தால் 2,50,000 பேர் (பெரும்பாலும் குழந்தைகள்) இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நிலவும் பஞ்சம் அதை விட மோசமானதாக இருக்கும் என்று காலநிலை ஆர்வலர்களும் மனிதாபிமான அமைப்புகளும் எச்சரித்துள்ளன.
தென்மேற்கு சோமாலியாவின் பே மற்றும் பகூல் பகுதிகளும் தலைநகர் மொகடிஸ்ஷுவுக்கு புதிதாக இடம்பெயர்ந்த மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அல்கொய்தாவின் கிழக்கு ஆப்ரிக்க அமைப்பான அல்-ஷபாப் உடன் சோமாலியா நீண்டகாலமாக சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம் மற்றும் போர் காரணமாகவே சோமாலிய மக்கள் தங்களது கால்நடைகளை இழந்துள்ளனர்.
ஐ.நாவின் இடப்பெயர்ச்சி முகமை கூறுவதன் படி சோமாலியாவிலிருந்து 38 லட்சம் மக்கள் வேறுநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டின் படி, சோமாலியாவில் கிட்டத்தட்ட 50 லட்சம் குழந்தைகள் இந்த ஆண்டு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள்.
சோமாலியாவுக்கு தொடர்ச்சியாக உதவிகளை செய்துவந்த பல நபர்கள், அமைப்புகள் உக்ரைனில் கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் உதவி கிடைக்கும் திசை தெரியாமல் தவிக்கிறது சோமாலியா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust