இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன் இருக்கும் முக்கியப் பிரச்சனைகள், சவால்கள் என்ன?

நீண்ட அரசியல் அனுபவம், புத்திசாலித்தனம் கொண்ட ரணில் விக்ரமசிங்கே இலங்கையில் உள்ள பிரச்சனைகளைச் சமாளித்து ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்கச் சரியான நபராக இருப்பார் என சில ஊடகங்கள் கூறுகின்றன.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேNewsSense
Published on

ஒரு காலத்தில் சிங்களர்கள் மற்றும் தமிழர்களுக்கு மத்தியில் நடந்து வந்த போராட்டங்களால் மட்டுமே அறியப்பட்ட இலங்கை, கடந்த சில மாதங்களாகச் சாதி, மத, இன பாகுபாடுகளன்றி சாலைக்கு வந்து தங்கள் பொருளாதார நிலையைக் கூறி அரசுக்கு எதிராகப் போராடிய இலங்கை மக்களால் அறியப்படுகிறது.

அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலையற்ற தன்மையால் அடுத்தடுத்து கேபினட் அமைச்சர்கள், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அதிபர் கோட்டபய்அ ராஜப்கஷ வரை அனைவரும் பதவியிலிருந்து விலகி உள்ளனர். இலங்கையின் பழம்பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் எட்டாவது அதிபராகப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

இதற்கு முன்பு இலங்கையின் அதிபராவதற்கு ரணில் விக்ரமசிங்கே இருமுறை முயன்றும் தோல்வி அடைந்தார். அந்த இரு முயற்சிகளிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை என்றே கூறலாம்.

1999 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்காவை எதிர்த்து அதிபர் பதவிக்காகப் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகள் இயக்கம் அவரை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சியில், சந்திரிகா ஒரு கண்ணை இழந்தார். அது இலங்கை வாக்காளர்கள் மத்தியில் ஒரு பெரும் பரிதாப அலையை ஏற்படுத்தியது. தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கா வென்று இலங்கை அதிபர் ஆனார்.

ரணில் விக்ரமசிங்கே
ரணில் விக்ரமசிங்கேTwitter


2005 ஆம் ஆண்டு மீண்டும் ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை அதிபருக்கான போட்டியில் களமிறங்கிய போது, இலங்கைத் தமிழர்கள் யாரும் தேர்தலில் பங்கேற்கக் கூடாது என விடுதலைப் புலிகள் உத்தரவிட்டது. தமிழர்களின் வாக்கு சதவீதமின்றி ரணில் விக்ரமசிங்கே மீண்டும் மகிந்த ராஜபக்க்ஷவிடம் தோற்றுப் போனார்.

எந்த ராஜபக்சேவிடம் தோற்று அதிபராக முடியாமல் இலங்கை அரசியலில் ரணில் விக்கிரமசிங்கே தடுமாறிக் கொண்டிருந்தாரோ, அதே மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டு வெளியேறிய பிரதமர் பதவியை அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே அழைத்து கையில் கொடுத்தார். கேபினட் அமைச்சரவையே இல்லாத இலங்கை அரசை எப்படியாவது நிலைப்படுத்த வேண்டும் என்பது கோத்தபய ராஜபக்ஷவின் எண்ணமாக இருந்தது.

இலங்கை அரசு வீழ்ந்து விட வேண்டும் என்று கருதியவர்கள் ரணில் விக்ரமசிங்கவின் வரவை பார்த்து வெகுண்டு எழுந்தனர். மற்றொரு தரப்பினருக்கோ எப்படியாவது இலங்கை அரசு நிலைபெற்றுச் சரியான திசையில் வழி நடத்தப்பட வேண்டும் என்ற கருதியவர்கள் ரணில் விக்கிரமசிங்கேவின் வரவை ஒரு நம்பிக்கையாகப் பார்த்தனர்.

ஒரு கட்டத்தில் கோத்தபய ராஜபக்சேவை தன் அதிபர் பதவியை ராஜினாமா செய்து வெளியேறினார். நேற்று நடந்த தேர்தலில் 134 வாக்குகளைப் பெற்று ரணில் விக்ரமசிங்கே கலவர பூமியாக இருக்கும் இலங்கையின் எட்டாவது அதிபராகப் பொறுப்பேற்று இருக்கிறார்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கை : ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளுமா தீவு தேசம்?

மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் யுனைடெட் நேஷனல் பார்ட்டி வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுன கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்று தன் பெரும்பான்மையை நிரூபித்தது. கிட்டத்தட்ட ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அஸ்தமனம் ஆகிவிட்டதாகவே பலரும் கருதினர்.

ஆனால் இன்று அதே ராஜபக்சேவின் கட்சி தான் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிபர் பதவி கொடுத்து அழகு பார்த்து இருக்கிறது.

நீண்ட அரசியல் அனுபவம், புத்திசாலித்தனம் கொண்ட ரணில் விக்ரமசிங்கே இலங்கையில் உள்ள பிரச்சனைகளைச் சமாளித்து ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்கச் சரியான நபராக இருப்பார் என சில ஊடகங்கள் கூறுகின்றன.

அதிபராகப் பதவியேற்ற இருக்கும் ரணில் விக்ரம் சிங்குக்கு எதிரில் இருக்கும் பிரச்சனைகள் என்ன?

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே NewsSense

கட்சி அரசியல்

அதிபராகப் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே, போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட அரசு உறுப்பினர்களின் வீடுகள் மீண்டும் கட்டித்தரப்படும் என்று கூறினார். இது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரளவுக்காவது சமாதானப்படுத்தி தன் பக்கம் இழுக்க உதவி இருக்கும் என்று கருதலாம்.

இலங்கையில் இத்தனை பெரிய கலவரங்கள் போராட்டங்கள் ஏற்பட்ட பிறகும் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமன கட்சி இப்போது வரை ஒற்றைக்கட்டாகவே இருக்கிறது. இப்போதும் அக்கட்சியில் உள்ள வெகு சில உறுப்பினர்கள் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கோ, மாற்றுக் கட்சிகளுக்கோ சென்று சேர்ந்துள்ளனர்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க உரையில் இடம்பெற்றுள்ள 7 விஷயங்கள்

இப்போதும் அக்கட்சியின் மீது ராஜபக்ஷவுக்கு பலத்த செல்வாக்கு இருப்பதாகவே சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தெரிய வருகிறது. அதிபராகப் பொறுப்பேற்று இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு இந்த பிளவு பட்ட கட்சி அரசியல் நிச்சயம் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ரணில் இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பின் தன்னுடைய முதல் வெற்றிப் பேச்சுரையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா உட்பட, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரின் பெயரைச் சொல்லி, இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது இலங்கையில் உள்ள அரசியல் சூழலைப் புரிந்து கொண்டு அவர்களை ஒருங்கிணைக்கும் நோக்கோடு ரணில் விக்ரமசிங்கே பேசுவதாகப் பார்க்கப்படுகிறது.

போராட்டம் மற்றும் போராட்டக்காரர்கள்

இரு முறை இலங்கையின் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றுப் போன ரணில் விக்ரமசிங்கேவுக்கு தற்போது இலங்கை அதிபர் பதவி கிடைத்திருப்பதற்கு அந்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் போராட்டமே காரணம்.

அப்போராட்டத்தை அதிகாரம் கொண்டோ, ராணுவம் கொண்டோ அடக்குவதற்கும் சமாளிப்பதற்கும் பதிலாக, போராட்டத்திற்கான அடிப்படை காரணம் என்ன என்று புரிந்து அதற்கான தீர்வை வழங்க வேண்டும்.

இலங்கை பொருளாதார நெருக்கடி
இலங்கை பொருளாதார நெருக்கடிNewsSense

போராட்டக்காரர்கள் எந்த பிரச்சனைக்காகக் களத்தில் இறங்கிப் போராடுகிறார்களோ அப்பிரச்சனை பெருவாரியான இலங்கை மக்களின் பிரச்சனை. ஆகையால் தான் சாமானிய இலங்கை மக்களும் வீதியில் இறங்கிப் போராடும் போராட்டக்காரர்களுக்கு தங்கள் ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். இதைச் சரியாகக் கையாளவில்லை எனில் இலங்கை அரசியல் நிலைத்தன்மை ஏற்படுவது சிரமமே.

பொருளாதாரப் பிரச்சினை

சிங்களர்கள் - தமிழர்கள் என்கிற இன பாகுபாடு முதல் பாலினம், தலைமுறை, பார்க்கும் தொழில்... எனப் பல வித்தியாசங்களைக் கடந்து இலங்கையில் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்த பெருமை இப்போராட்டத்தையே சேரும்.

தங்கள் செல்வத்தைக் கொள்ளை அடித்த, சுமார் மூன்று ஆண்டுக் காலத்துக்குள் தங்களின் அன்றாட வருமானத்தைப் பாதிக்குப் பாதியாகச் சரிய வைத்த அரசு, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்கிற நோக்கம் போராட்டக்காரர்களை ஒன்றிணைத்தது.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கை : பொருளாதார நெருக்கடி தீவு தேசத்தை தொடர்ந்து திவாலை நோக்கி நகரும் இந்த 12 நாடுகள்

எந்த பொருளாதார காரணத்திற்காக மக்கள் வெகுண்டு எழுந்தார்களோ அக்காரணிகள் இப்போதும் இலங்கையில் அப்படியே தொக்கி நிற்கின்றன.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 20-வது பிரிவு இலங்கை அதிபருக்கு ஒப்பற்ற உச்ச அதிகாரங்களைக் கொடுக்கிறது. அதைக் கையில் எடுத்திருக்கும் ரணில் விக்ரமசிங்கே கட்சி பாகுபாடுகளை எல்லாம் தாண்டி உயர்ந்து நிற்க முடியும். ஆனால் அந்த அதிகாரத்தைக் கொண்டு இந்த கடுமையான பொறுப்புகளையும் பிரச்சனைகளையும் எப்படிக் கடப்பார் என்பதே சாமானிய மக்களின் கேள்வி.

இனியாவது இலங்கை மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடட்டும். ஓர் அமைதியான வாழ்க்கை அவர்களுக்கு வாய்க்கட்டும். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கை பொருளாதார நெருக்கடி : இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com