இலங்கை : “Go Home GOTA’ - வீதிக்கு வந்த பத்திரிகையாளர்கள்,நாட்டை விட்டு ஓடும் பணக்காரர்கள்

ராஜபக்சே குடும்பம் பதவியில் இருந்து ராஜிநாமா செய்யக் கோரி இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் பத்திரிகையாளர்களும், வழக்கறிஞர்களும் இணைந்துள்ளனர்.
இலங்கை
இலங்கைNewsSense
Published on

ராஜபக்சே குடும்பம் பதவியில் இருந்து ராஜிநாமா செய்யக் கோரி இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் பத்திரிகையாளர்களும், வழக்கறிஞர்களும் இணைந்துள்ளனர்.

கொழும்பு லிப்டான் சர்கஸ் அருகே நடந்த போராட்டத்தில் அதிகளவில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newssense

என்ன நடக்கிறது அங்கே?

கோட்டபய ராஜபக்சே தான் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்றும் ஆனால் அதே வேளை யார் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார்களோ அவர்களிடம் சுமூகமாக அரசாங்கத்தை ஒப்படைத்துவிட்டு செல்வேன் என்றும் அவர் கூறியதாக டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று நடந்த அரசியல் உயர்மட்ட கூட்டத்தில் அவர் இவ்வாறாக கூறியதாக தெரிகிறது.

NewsSense

கூடும் நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் இப்போது ஆளும் இலங்கை பொதுஜன முன்னணியை தவிர யாரிடமும் பெரும்பான்மையை நிரூபிக்க கூடிய அளவிற்கான ஆதரவு இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அனைத்து உறுப்பினர்களும் பக்சேவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என சொல்ல முடியாது.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணியளவில் கூடுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர். தேசிய அமைச்சரவை அமைக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு வீட்டிற்கு செல்லுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி செயலக வளாகத்தை திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை இளைஞர், யுவதிகள் முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இலங்கை
இலங்கை நெருக்கடி : அதிபர் கோட்டபயாவின் நெருங்கிய நண்பர் தீவு தேசத்தை விட்டு வெளியேறினாரா?

நாட்டை விட்டு ஓடும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள்

இப்படியான சூழலில் இலங்கையை விட்டு பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் வெளியேறி வருகின்றனர்.

இலங்கை அதிபர் கோட்டபயாவின் நெருங்கிய சகாவான அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி இலங்கையைவிட்டு ரகசியமாக வெளியேறினார் என டெய்லி மிர்ரர் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை Sri Lanka Guardian தளமும் உறுதிப்படுத்தி உள்ளது.

நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை உறுதிப்படுத்த முடியவில்லை.

முன்னதாக சனிக்கிழமை நாமல் ராஜபக்ஷவின் குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 02ஆம் தேதி வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கை
இலங்கை : மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ராஜிநாமா - மீளுமா தீவு தேசம்?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com