தொடரும் போராட்டம், நெருக்கடியில் ராஜபக்சே சகோதரர்கள்
தொடரும் போராட்டம், நெருக்கடியில் ராஜபக்சே சகோதரர்கள்NewsSense

எரியும் இலங்கை : தொடரும் போராட்டம், விலகிய அமைச்சர், நெருக்கடியில் ராஜபக்சே சகோதரர்கள்

இன்று காலை ரோஷன் ரணசிங்கே என்ற முக்கியமான அமைச்சர், மக்கள் படும் அவதியைப் பார்த்து, தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.
Published on

இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால், அங்கு அரசியல் சூழல் பரபரப்புடன் காணப்படுகிறது. இது தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை பார்க்கலாம்!

1. இலங்கையில், தற்போது இருக்கும் அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, காபந்து அரசை அமைக்க வேண்டும் என நேற்று ஆளும் ராஜபக்‌ஷே அரசின் கூட்டணிக் கட்சிகள், அதிபர் கோத்தபயா ராஜபக்‌ஷேவிடம் வலியுறுத்தியிருந்தனர்.

2. அதன் தொடர்ச்சியாக, அவசர நிலையை உடனடியாக பிரகடனப்படுத்தினார் கோத்தபயா ராஜ்பக்‌ஷே

3. இன்று காலை ரோஷன் ரணசிங்கே என்ற முக்கியமான அமைச்சர், மக்கள் படும் அவதியைப் பார்த்து, தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.

தொடரும் போராட்டம், நெருக்கடியில் ராஜபக்சே சகோதரர்கள்
எரியும் இலங்கை : ”10 % ஃபசில் ராஜபக்‌ஷே” - எதிர்கட்சிகள் விமர்சனம்

4. இலங்கையின் முன்னாள் அதிபர் சிறிசேனா தரப்பில், அனைத்து கட்சிகளும் இணைந்த ஆட்சி நடத்தலாம் என யோசனை வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவையை உருவாக்க வேண்டும் என சிறிசேனா தெரிவித்திருக்கிறார்.

5. இந்திய வர்த்தகர்களிடமிருந்து 40,000 டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது!

6. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால், இலங்கையில் இன்று பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

7. இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிகிப்பட்டிருக்கிறது. நாளை நாடு தழுவிய அளவில் மக்கள் மிகப்பெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இலங்கை அரசு உத்தரவு!

8. டீசல் தட்டுப்பாடு காரணமாக மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. 13 மணி நேரம் மின் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இலங்கை கிளை, 6000 மெட்ரிக் டன் டீசலை, மின்சாரத்துறைக்கு வழங்கியிருக்கிறது.

9. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) கடன் பெற இலங்கை அரசு முயன்று வருகிறது. இந்தியா மற்றும் சீனாவிடமும் கூடுதல் கடன் பெற முயற்சி செய்து வருகிறது.

10. இலங்கையின் தற்போதைய மொத்த கடன் $51 பில்லியன். இலங்கை ஜி.டி.பியில் இது கிட்டத்தட்ட 110% எனக் கூறப்படுகிறது!

தொடரும் போராட்டம், நெருக்கடியில் ராஜபக்சே சகோதரர்கள்
எரியும் இலங்கை : தீவு தேசத்தில் அவசர நிலை பிரகடனம் - Latest 10 Updates
தொடரும் போராட்டம், நெருக்கடியில் ராஜபக்சே சகோதரர்கள்
எரியும் இலங்கை : நெருக்கடி, போராட்டம் - நேற்று இரவு என்ன நடந்தது? | விரிவான தகவல்கள்
logo
Newssense
newssense.vikatan.com