ஆசியாவின் ரகசியமான பணக்கார நகரம் எது தெரியுமா? - ஆச்சரிய தகவல்

தைவான் 1950 களில் இருந்து செல்வந்தர்களை உருவாக்கி வருகிறது. நைட் ஃபிராங்கின் 2019 வெல்த் அறிக்கையின்படி, தைவானின் தைபே நகரம் அதிக நிகர மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்ட செல்வந்தர்கள் அதிகம் வாழும் நகரங்களாக எட்டாவது இடத்தில் உள்ளது.
Taiwan
Taiwantwitter
Published on

நியூயார்க்கில் அதி உயர் அரும் பொருட்களை விற்கும் ஏல நிறுவனம் சோதேபி. இந்நிறுவனம் 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள மார்க் ரோத்கோ ஓவியத்தை ஏலமிட முடிவு செய்தது. மார்க் ரோத்கோ என்பவர் பால்கன் நாடான லாத்வியாவில் பிறந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த யூத அகதி. 1903 இல் பிறந்த இவர் 1973 இல் மறைந்தார். இவரது அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

நியுயார்க்கை விட மேற்கண்ட ஓவியத்தை விற்பதற்குச் சிறந்த இடமென்று சோதேபி நிறுவனம் நினைத்த இடம் ஆசியா. ஹாங்காங்கில் அதன் ஆசிய மண்டல அலுவலகம் இருக்கிறது. சரி, ஆசிய நகரங்களில் விற்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்த நகரம் எது? ஷாங்காய், டோக்கியோ, சிங்கப்பூர் போன்ற நகரங்கள் அல்ல. அது தைவானின் தலைநகரமான தைபே. வாங்குபவர்கள் இருக்குமிடத்திற்கு நாங்கள் கலையை எடுத்துச் செல்கிறோம் என்று கூறுகிறார் சோதேபியின் ஆசிய தலைவர் பாடி வாங். மேலும் தைவான் சந்தை எங்களுக்கு முக்கியமானது என்றும் அவர் கூறுகிறார்.

தைவான்

சீனா வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இப்போது வேகமாக கோடீஸ்வரர்களை உருவாக்குகிறதாகக் கூறப்படுகிறது. ஆனால் தைவான் 1950 களில் இருந்து செல்வந்தர்களை உருவாக்கி வருகிறது. நைட் ஃபிராங்கின் 2019 வெல்த் அறிக்கையின்படி, தைவானின் தைபே நகரம் அதிக நிகர மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்ட செல்வந்தர்கள் அதிகம் வாழும் நகரங்களாக எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் 1,519 பேர் குறைந்தபட்சம் 30 மில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டளவில் 1,864 ஆக உயரும் என்று நைட் ஃபிராங்கின் கணித்துள்ளது.

செல்வ வளமுள்ள தைவான் தீவு நாட்டில் மொத்தம் 2 கோடியே 35 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். 1970 முதல் இங்குச் சிறு உற்பத்தியாளர்கள் பல்வகை தொழில்களைத் துவங்கினர். அவை தொலைக்காட்சிகள் முதல் பார்ப்பி பொம்மை வரை பரந்திருந்தன. இது ஏற்றுமதி சார்ந்த தைவானின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தது. 1980களில் கணினி சார்ந்த நிறுவனங்கள் வளரத் துவங்கின. சிப் தயாரிக்கும் ஏசெர், தைவான் செமிகண்டக்டர் போன்ற நிறுவனங்கள் அவற்றில் சில.

Taiwan
TaiwanTwitter

சீனா அந்நிய முதலீட்டிற்காகத் தனது நாட்டை திறந்த போது தைவானின் நிறுவனங்கள் தைவான் ஜலசந்தியைக் கடந்து சீனாவில் உற்பத்தி மையங்களை அமைத்தன. புதிய தைபே நகரம் சார்ந்த பாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தின் நிறுவனர் டெர்ரி கோவ்வின் சொத்து மதிப்பு மட்டும் ஏப்ரல் 1, 2019 நிலவரப் படி 4.3 பில்லியன் டாலராகும்.

சீனாவிலிருந்து தைவானுக்குத் திரும்பிய பணம் பல ஆடம்பர சின்னங்களை தைபே நகரில் உருவாக்கியது. தைபே 101 கோபுரம் 2004இல் திறக்கப்பட்டபோது, இது உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. 2010இல் துபாயின் புர்ஜ் கலீஃபா கட்டுப்படும் வரை அதுவே உயரமான கட்டிடம். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் டியர் 1950களில் உலகின் முன்னணி ஃபேஷன் டிசைனராக விளங்கினார். இன்று அவரது பெயரில் உலக நகரங்கள் அனைத்திலும் ஃபேஷன் கடைகள் இருக்கின்றன. இது அதி பணக்காரர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட கடையாகும். உலகிலேயே இதன் மிகப்பெரிய கடை தைபேயில் இருக்கிறது.வெளிநாட்டில் பணம்

தைவானில் தொழில் முனைவோர் ஈட்டிய பணத்தில் கணிசமான பகுதி வெளிநாட்டில் இருக்கிறது. யூபிஎஸ் குழும அறிக்கையின் படி தைவானில் அதி பணக்காரர்கள் 500 பில்லியன் டாலரைக் கடல் கடந்த வெளிநாடுகளில் வைத்திருக்கின்றனர். அவை வரியில்லா சொர்க்கங்களாகவோ, ரியல் எஸ்டேட், இதர சொத்துக்களாகவோ, வங்கி முதலீடுகளாகவோ இருக்கலாம். உலகில் அதி பணக்காரர்கள் கடல் கடந்து வைத்திருக்கும் நாடுகளில் சீனா 1.4 டிரில்லியன் டாலருடன் முதலிடத்திலும், அமெரிக்கர்கள் 700 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. இதிலிருந்து தைவானின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

தைவானிய பில்லியனர்களுக்கு ரியல் எஸ்டேட் மீதும் ஆர்வம் அதிகம். நைட் ஃபிராங்கின் கூற்றுப்படி தைவானின் பெரும் செல்வந்தர்கள் தலா சராசரியாக 5.4 மாளிகைகளை வைத்திருக்கின்றனர். இது ஹாங்காங்கில் 4, மத்திய கிழக்கில் 4.6 ஆகவும் இருக்கிறது. தைபேயின் புறநகர்ப் பகுதியில் பெல்ஜிய கட்டிடக் கலைஞர் வின்சென்ட் கைவண்ணத்தில் உருவான அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 32 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்திய ரூபாயில் ஒரு வீட்டின் விலை ரூபாய் 244 கோடி ஆகும். இப்படி விலையுள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டை நீங்கள் இந்தியாவில் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Taiwan
அமெரிக்கா ஏரியா 51 மர்மங்கள் : இங்கு ஏலியன்கள் ஆய்வு நடக்கிறதா? US எதனை மறைக்கிறது?

வெளிநாட்டில் பணம்

எளிமையோ எளிமை

இப்படி பணம் குவித்தாலும் ஒரு தைவானிய பில்லியனரை பார்த்தால் அப்படி இருக்க மாட்டார். அவர்கள் திடீர் பணக்காரர்கள் போன்று இல்லை. ஆடம்பரங்களைத் தவிர்க்கிறார்கள். அவர்கள் ஜப்பானியர்களிடமிருந்து அடக்கத்தையும், சீனாவின் மனத்தாழ்மையில் பாரம்பரிய நல்லொழுக்கத்தையும் மதிக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் விமானத்தில் பிசினெஸ் கிளாசில் பறப்பதில்லை.

இதனால் தைவானின் பணக்காரர்கள் தமது பணத்தை எப்படி மகிழ்ச்சியாகச் செலவழிப்பது என தெரியாதவர்கள் அல்ல. அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செய்கிறார்கள். இல்லையென்றால் நியூயார்க்கில் விற்க வேண்டிய 50 மில்லியன் ஓவியம் தைபேனில் விற்க வேண்டிய அவசியம் என்ன? இந்த குட்டி தீவின் பணக்காரர்கள் உலகில் மூன்றாம் இடத்தில் கடல் கடந்த நாடுகளில் செல்வத்தைக் குவித்திருக்கிறார்கள் என்பதிலிருந்து என்ன தெரிகிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Taiwan
ரஷ்யா எரிபொருள் : திணறும் உலக நாடுகள் - இதுதான் உண்மையான களநிலவரம்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com