தைவானில் காணாமல் போன 'யானை தும்பிக்கை பாறை' - என்ன நடந்தது?

தைவான் வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் புகைப்படத் தளமாக விளங்கியது. இதன் வித்தியாசமான வடிவமைப்புக்காக இதனை ஆனை தும்பிக்கை பாறை என அழைத்தனர்.
தைவானில் காணாமல் போன 'யானை தும்பிக்கை பாறை' - என்ன நடந்தது?
தைவானில் காணாமல் போன 'யானை தும்பிக்கை பாறை' - என்ன நடந்தது?Canva

தைவானின் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக இருந்த ஆனை தும்பிக்கை பாறை காணமல் போய்விட்டது.

வடக்கு தைவானில் உள்ள ரூயிஃபாங் மாவட்டத்தின் புதிய தைபெய் நகர அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தைவான் வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் புகைப்படத் தளமாக விளங்கியது. இதன் வித்தியாசமான வடிவமைப்புக்காக இதனை ஆனை தும்பிக்கை பாறை என அழைத்தனர்.

அந்த பிரபலமான பாறையின் தும்பிக்கைப் போன்ற பகுதி கடலில் விழுந்துவிட்டது. நீண்டகாலமாக நடந்துவரும் கடல் அரிப்புதான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

கடல்காற்றாலும், உப்பு நீராலும் தொடர்ந்து அரிக்கப்படுவதனால் பாறைகளுக்கு இப்படி நடப்பது மிகவும் இயல்பானதுதான் என்கின்றனர்.

ஆனை தும்பிக்கை பாறை இப்போது பார்வையாளர்கள் வர முடியாதபடி மூடப்பட்டுள்ளது. இன்று வரை "Elephants Trunk Rock" என்று அழைக்கப்பட்டு வந்த இந்த பாறையை இனி எப்படி அழைப்பார்கள்?

தைவானில் காணாமல் போன 'யானை தும்பிக்கை பாறை' - என்ன நடந்தது?
பயண காதலர்களுக்கு சொர்க்கமாக இருக்கும் பொதுபோக்குவரத்து - எந்தெந்த நகரங்களில் தெரியுமா?

தைவானில் ஆபத்தில் இருக்கும் இயற்கை அமைப்புகளில் மற்றொன்றும் உள்ளது. அதுதான் "ராணியின் தலை" என்று அழைக்கப்பட்ட பாறை.

ராணி எலிசபெத்தை நினைவுபடுத்தும் இந்தப் பாறை பார்பதற்கு எலிசபெத் ராணியின் கழுத்து வரை வடிக்கப்பட்ட சிற்பம் போல காட்சியளிக்கும்.

இந்த பாறை ஒவ்வொரு ஆண்டும் சிறியதாகிக்கொண்டே வருகிறதாம். இன்னும் சில காலத்தில் இல்லாமல் போய்விடும் என்பதனால் தைவான் செல்பவர்கள் இப்போதே இதனருகில் ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

தைவானில் காணாமல் போன 'யானை தும்பிக்கை பாறை' - என்ன நடந்தது?
மணிகரண் : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இயற்கை வெந்நீர் ஊற்று - எப்படி உருவானது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com