பாலினத்தை கடந்து சாதித்த திருநங்கை : அழகி போட்டி நிறுவனத்தை வாங்கியது ஏன்?

இவர் விலை கொடுத்து வாங்கி இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பை ஒரு காலத்தில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வைத்திருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
Thai transgender businesswoman
Thai transgender businesswomanTwitter
Published on

இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட சமத்துவம் சரியாக நுழையாத சில இடங்கள், வியாபாரங்கள், நிறுவனங்கள், வீடுகள், நாடுகள், நிறைய மனித மனங்கள் இருக்கத் தான் செய்கின்றன. அப்படி ஒட்டுமொத்த உலகமே பார்க்கும் சமத்துவமற்ற ஒரு இடம் அழகிப் போட்டிகள்.

இந்த போட்டியில் யார் பங்கெடுக்க வேண்டும், எப்படிப் பங்கெடுக்க வேண்டும் என்பது தொடங்கிப் பல விஷயங்களில் பொது சமூக சமத்துவம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. உதாரணத்துக்கு உலக அழகிப் போட்டிகளில் திருமணமானவர்கள் பங்கெடுக்க முடியாது.

அதை எல்லாம் துடைத்தெறிய, ஜகபொங் ஜக்ரஜுடாடிப் (Jakkaphong Jakrajutatip) என்கிற திருநங்கை களத்தில் குதித்திருக்கிறார்.

ஜகபொங் ஜக்ரஜுடாடிப் ஏற்கனவே தாய்லாந்தின் ஊடகத்தில் ஒரு கொண்டாடப்படும் நபர். அவர் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியை நடத்தும் அமைப்பை, சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியுள்ளார். மிஸ் யுனிவர்ஸ் நிறுவனம் தன்னுடைய குழுமத்தில் இணைவது ஒரு வலுவான மற்றும் முக்கியமான விஷயம் என கூறியுள்ளார்.

தன்னுடைய பாலின மாற்றப் பயணத்தை வெகு சாதாரணமாக எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளும் ஜகபொங் ஜக்ரஜுடாடிப், மிஸ் யுனிவர்ஸ் அமைப்பை வாங்கியது குறித்தும் ஒரு முக்கிய விஷயத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் நிறுவனம் பலதரப்பட்ட கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், பின்புலங்களிலிருந்து வரும் திறமையான, பேரார்வம் கொண்டவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுப்பதோடு, இந்த பிராண்டை அடுத்த தலைமுறைக்கும் மேம்படுத்தி எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதாக பிபிசி ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

உலக அளவிலான எங்கள் கூட்டாளிகள் மற்றும் பிராண்டுகள் எப்போதும் இந்த அளவுக்கு வலுவாக இருந்ததில்லை. எங்களுடைய முன்னேற்றம் சார்ந்த செயல்பாடுகளினால், நாங்கள் இந்தத் துறையின் முன்னோடிகளாகத் தொடர்ந்து இருப்போம் என மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி ஏமி எம்மிரிச் (Amy Emmerich) மற்றும் அவ்வமைப்பின் தலைவர் பலா ஷுகர்ட் (Paula Shugart) கூறியுள்ளனர்.

இவர் ஏற்கனவே ஜே கே என் குளோபல் குழுமத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அந்நிறுவனம் தாய்லாந்தில் பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து வருகிறது. பல பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் இந்நிறுவனம் தான் ஷார்க் டேங்க் என்கிற பிரபல நிகழ்ச்சியையும் தயாரித்து வருகிறது.

இவர் விலை கொடுத்து வாங்கி இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பை ஒரு காலத்தில், மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் 1996 முதல் 2015 வரை, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வைத்திருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Thai transgender businesswoman
Nykaa: இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார் ஃபால்குனி நாயர் - அடுத்தடுத்த இடங்களில் யார்?

சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்களைக் குறித்து, தன் பிரசாரத்தில் மிக மோசமாகப் பேசியதைத் தொடர்ந்து, இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள், மிஸ் யுனிவர்ஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப மறுத்தனர். அதன் பிறகு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பை டிரம்ப் விற்று வெளியேறினார் என்பது நினைவுகூரத்தக்கது.

அதே போல முன்னாள் மிஸ் யுனிவர்ஸான வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த அலிசியா மசாடோ (Alicia Machado) உடல் எடை கூடியது தொடர்பாக, மிக மோசமான வார்த்தைகளைக் கொண்டு டொனால்ட் டிரம்ப் விமர்சித்து பொதுவெளியில் பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.

எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வித்திடும் ஜகபொங் ஜக்ரஜுடாடிப்

அடுத்த ஆண்டில் இருந்து, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் திருமணமான பெண்கள், குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று கூறி ஒட்டுமொத்த பெண்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஜகபொங் ஜக்ரஜுடாடிப்.

கடந்த 71 ஆண்டுகளாக நடைபெறும் இந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில், திருமணமானவர்கள், குழந்தை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் பங்கெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி கிட்டத்தட்ட 160 நாடுகளில் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thai transgender businesswoman
சாவித்ரி ஜிண்டால்: இந்தியாவின் நம்பர் 1 பெண் பில்லியனரான 72 வயது பெண்மணி - ஒரு வாவ் ஸ்டோரி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com