இந்தோனேசியாவில் இருக்கும் Chicken Church - கைவிடப்பட்ட இந்த கட்டிடம் பிரபலமானது எப்படி?

டேனியல் ஆலம்ஸ்ஜா என்பவர் தான் இதனை எழுப்பினார். 1988ல் ஒரு நாள் இரவு டேனியலுக்கு தூக்கத்தில் கனவு ஒன்று வந்தது. அதில், மலை ஒன்றின் மீது மிகப்பெரிய புறா ஒன்று அமைந்திருப்பது போல ஒரு இடத்தின் தெய்வீக காட்சி தோன்றியுள்ளது.
இந்தோனேசியாவில் இருக்கும் Chicken Church - கைவிடப்பட்ட இந்த கட்டிடம் பிரபலமானது எப்படி?
இந்தோனேசியாவில் இருக்கும் Chicken Church - கைவிடப்பட்ட இந்த கட்டிடம் பிரபலமானது எப்படி?twitter

இந்தோனேசியாவின் காடுகளில் ஒரு வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட கட்டிடம் அமைந்திருக்கிறது. இதன் பெயர் சிக்கன் சர்ச்.

வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஒரு கோழியின் வடிவத்தை இது கொண்டுள்ளதால் இந்த பெயரைப் பெற்றுள்ளது கட்டிடம்.

ஆனால் இது உண்மையில் சர்ச் இல்லை. இதன் வடிவமும் கோழியின் வடிவம் இல்லை. இதன் உருவாக்கத்துக்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறது.

இந்த பதிவில்...

சிக்கன் சர்ச் உருவான கதை

கெரெஜா அயம் அல்லது சிக்கன் சர்ச் என்றழைக்கப்படும் இந்த கட்டிடம் இந்தோனேசியாவின் மேகலாங் என்ற காட்டுப்பகுதி ஒன்றில் அமைந்துள்ளது.

டேனியல் ஆலம்ஸ்ஜா என்பவர் தான் இதனை எழுப்பியவர். 1988ல் ஒரு நாள் இரவு டேனியலுக்கு தூக்கத்தில் கனவு ஒன்று வந்தது. அதில், மலை ஒன்றின் மீது மிகப்பெரிய புறா ஒன்று அமைந்திருப்பது போல ஒரு இடத்தின் தெய்வீக காட்சி தோன்றியுள்ளது.

இந்த இடமானது அனைத்து மதத்தவரும் வழிப்படக் கூடிய ஆலயமாக அமையவேண்டும் என்றும், அதனை டேனியல் கட்டமைக்க வேண்டும் என்றும் அந்த கனவின் மூலம் செய்தி வந்தது என்று கூறுகிறார் டேனியல்

வடிவமைப்பு

தன் கனவினை நிஜமாக்கும் முடிவுக்கு வந்தார் டேனியல். ஒரு முறை மேகலாங் காட்டுக்குள் நடந்து செல்கிறார். அப்போது புகித் ரேமா என்ற மலையை காண்கிறார். அவரது கனவில் தோன்றிய மலை வடிவம் இது தான் என்பதை உணர்கிறார்.

ஒரு வார காலத்திற்குள் இந்த மலையில் ஒரு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். மேலும் ஆலயம் அமைக்க தேவையான அனுமதிகள் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

மாறிபோன உருவம்

இவரது முயற்சிக்கு தடங்கல்கள் பல வந்தன. மனந்தளராத டேனியல், 10 ஆண்டுகாலம் போராடி பறவை வடிவிலான ஆலயத்தை கட்டிமுடித்தார். கட்டுமானம் முடியும் வரை ஒவ்வொரு வாரமும் அங்கிருந்து மேற்பார்வையிட்டார்.

கட்டுமானம் முடிந்திருந்த போது ஒரு பெரிய பறவை மலையின் உச்சியில் அமைந்திருக்கும் பிரம்மாண்ட காட்சியை கண்டு வியந்தார் டேனியல். ஆனால்,

இவர் கனவில் கண்ட வடிவம் புறா. கட்டுமானம் முடிந்து வந்த இறுதி வடிவமோ கோழியை போல இருந்துள்ளது. இதனால் அதனை கெரெஜா அயம் என்று பெயரிட்டனர்.

இந்தோனேசியாவில் இருக்கும் Chicken Church - கைவிடப்பட்ட இந்த கட்டிடம் பிரபலமானது எப்படி?
Malcha Mahal: இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இந்த அமானுஷ்ய மாளிகை பற்றி தெரியுமா?

கைவிடப்பட்ட கட்டிடம்

இந்த நேரத்திற்கு எல்லாம் டேனியலிடம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அதனை மறுவடிவமைப்பு செய்ய அவரால் இயலவில்லை.

இதனால் அந்த கட்டிடத்தை கைவிட்டுவிட்டார் டேனியல். கேட்பாரற்று கட்டிடமும் கலையிழக்க தொடங்கியது.

ஆனால், அருகில் இருந்த புத்த மடாலயத்தின் வழியாக இந்த சிக்கன் சர்ச்சிற்கு மறு உயிர் கிடைத்தது என்று சொல்லலாம்.

இந்தோனேசியாவில் இருக்கும் Chicken Church - கைவிடப்பட்ட இந்த கட்டிடம் பிரபலமானது எப்படி?
கன்னியாக்குமரி: பாழடைந்து கிடக்கும் இரணியல் அரண்மனையின் வரலாறு தெரியுமா?

மறு உயிர் பெற்ற சிக்கன் சர்ச்

உலகின் மிகப்பெரிய புத்த கோவில் பொரோபுதூர். இந்த இடத்திற்கு வருகை தந்த மக்களுக்கு அரசல்புரசலாக இந்த சிக்கன் சர்ச் பற்றி தெரிந்தது. வித்தியாசமான வடிவத்தில் கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்று இருப்பதை பற்றி அறிந்துகொள்ள மக்கள் வரத் தொடங்கினர்.

இந்த இடமும் பிரபலமானது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட டேனியல், இதனை சுற்றுலா தலமாக மாற்றினார். இந்த கட்டிடத்தை சுற்றிப்பார்க்க ஒரு கட்டணத்தை வசூலிக்க ஆரம்பித்தார்.

டேனியல், கட்டிடத்தில் கணிசமான உள்கட்டமைப்பு மாற்றங்களை செய்தார். டைல்சுகள் பதிக்கப்பட்டு, சுவர்களில் இந்தோனேசிய வரலாற்று கதைகள் ஓவியமாக வரையப்பட்டது. 12 வழிபாட்டு அறைகளும் உள்ளன.

இந்த பறவையின் தலையில் இருக்கும் கிரீடத்தில் இருந்து சூரியன் உதிப்பதை பார்க்கலாம். மேலும், இந்த கட்டிடத்தின் பின்புறத்தில் ஒரு கஃபேவும் இருக்கிறது.

இன்று இந்தோனேசியாவின் ஒரு தவிர்க்க முடியாத சுற்றுலா தலம் இந்த சிக்கன் சர்ச்!

இந்தோனேசியாவில் இருக்கும் Chicken Church - கைவிடப்பட்ட இந்த கட்டிடம் பிரபலமானது எப்படி?
பீட்சா முதலில் விவசாய உணவா? எப்படி உலகம் முழுவதும் பிரபலமானது? ஓர் சுவாரஸ்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com