The Toyota War : பீரங்கிகளை வீழ்த்திய கார்கள் - ஆப்ரிக்காவை உலுக்கிய போரின் சுவாரஸ்ய கதை!

300 T55 இராணுவ பீரங்கிகள், சாதரண பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், Mi-24 ஹெலிகாப்டர்கள் மற்றும் 60 வானூர்திகள் இடம் பெற்றிருந்த பெரும்படையை சில டொயோட்டா கார்களின் உதவியுடன் வென்றது தான் இதில் வியக்கத்தக்க விஷயம்!
The Toyota War : பீரங்கிகளை வீழ்த்திய கார்கள் - ஆப்ரிக்காவை உலுக்கிய போரின் சுவாரஸ்ய கதை!
The Toyota War : பீரங்கிகளை வீழ்த்திய கார்கள் - ஆப்ரிக்காவை உலுக்கிய போரின் சுவாரஸ்ய கதை!Twitter
Published on

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட் மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவுக்கு இடையில் 1978ம் ஆண்டு முதலே எல்லைப் பிரச்னைகள் இருந்து வந்தன.

அதன் தொடர்ச்சியாக 80களின் பிற்பகுதியில் போர் வெடித்தது.

இந்த போரில் தன்னை விட ராணுவ பலம் மிகுந்த லிபியாவை போதிய ஆயுதங்கள் கூட இல்லாமல் எதிர்கொள்ளும் நிலையில் இருந்தது சாட்.

ஆனால் போரின் நிலைமை மாறி இறுதியில் லிபியாவைத் தோற்கடித்து அமைதி ஒப்பந்தத்துக்கு அழைத்து வந்தது சாட்.

சில டொயோட்டா கார்களின் உதவியுடன் இந்த வெற்றி சாத்தியமானது என்பது தான் இதில் வியக்கத்தக்க விஷயம்! அப்படி என்ன நடந்தது அந்த போர்களத்தில்? விரிவாகக் காணலாம்.

ஏன் போர் தொடங்கியது?

சாட் நாட்டின் வடக்கு எல்லையில் உரேனியம் வளம் மிகுந்த அவுஜோவு என்ற இடம் லிபியாவின் கண்களை உறுத்தியது.

அப்போது லிபியாவின் அதிபராக இருந்த முயம்மர் கடாபி லிபியாவை அணு ஆயுத சக்தி கொண்ட நாடாக உருவாக்க நினைத்தார்.

இதற்காக சாடில் இருந்த லிபியா ஆதரவு குழுக்களுக்கு நியுதவி அளித்து சிறிது சிறிது இடங்களைக் கைப்பற்றினர்.

சாட் அரசாங்கம் லிபியாவின் நடவடிக்கைகளை எதிர்க்கத் தொடங்கியது. அவுஜோவு பகுதியில் தங்களது படையை விரிவுபடுத்தியது சாட்.

இதனால் லிபிய ராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்கும் நெருக்கடி ஏற்பட்டது.

பிரான்ஸ் உதவி

லிபிய இராணுவத்தில் அப்போது 8,000 வீரர்கள் இருந்தனர். 300 T55 இராணுவ பீரங்கிகள், சாதாரண பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், Mi-24 ஹெலிகாப்டர்கள் மற்றும் 60 வானூர்திகள் என பெரும்படை தயாரானது.

ஆயுத பலமோ, ஆள் பலமோ அல்லது தொழில்நுட்ப பலமோ கூட இல்லாத சாட் ராணுவம் லிபியாவை எதிர்த்து செய்வதறியாது திகைத்து நின்றது.

The Toyota War : பீரங்கிகளை வீழ்த்திய கார்கள் - ஆப்ரிக்காவை உலுக்கிய போரின் சுவாரஸ்ய கதை!
வளைகுடா நாடுகள் : நடத்தப்பட்ட அகழாய்வு, அவிழ்ந்த முடிச்சுகள் - சுவாரஸ்ய பயணம்

போர் தொடங்கிய போது பலத்த பின்னடைவைச் சந்தித்த சாட், பிரான்ஸ் நாட்டில் உதவியை நாடியது.

பிரான்ஸ் வீரர்களை சாடுக்கு அனுப்பி வைத்ததுடன் ஆயுதங்களையும் வழங்கியது.

லிபியாவின் வானூர்திகளை சாட் சமாளிக்கத் தொடங்கியது ஆனால் T55 பீரங்கிகள் தொடர்ந்து சேதாரம் ஏற்படுத்தின.

வென்ற சாட்

லிபியாவும் சரி, சாடும் சரி சகாரா பாலைவனத்துக்கு நடுவில் அமைந்திருக்கின்றன.

பாலை வனத்தைக் கடந்தோ நீர் வழித்தடம் வழியாகவோ பீரங்கியைக் கொடுக்க முடியாது என்பதனால் பிரான்சால் பீரங்கிகள் வழங்க முடியவில்லை ஆனால் அதற்கு பதிலாக டொயாட்டோ கார்களை வழங்கியது.

டொயாட்டோ ஹிலக்ஸ் மற்றும் லாண்ட் க்ரூஸர் வகை வாகனங்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டன. இவை பொதுவாக சரக்குகளை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும்.

லிபியாவின் 300க்கும் மேற்பட்ட பீரங்கிகளை 400 கார்கள் எதிர் கொண்டன.

கார் களத்தில் இறங்கியதுமே காற்று சாட் பக்கம் வீசத் தொடங்கியது. 5000 லிபிய வீரர்களை வீழ்த்தியது சாட் இராணுவம்.

800 பேர் கொல்லப்பட்டனர், 92 பீரங்கிகள் அழிந்தன. ஆனால் சாட் இராணுவத்தில் மொத்தமே 18 வீரர்களை தான் இழந்திருந்தனர்.

The Toyota War : பீரங்கிகளை வீழ்த்திய கார்கள் - ஆப்ரிக்காவை உலுக்கிய போரின் சுவாரஸ்ய கதை!
Hiroo Onoda: ஓர் உத்தரவுக்காக 29 ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்த ஜப்பான் வீரரின் விறு விறு கதை!

எப்படி சாத்தியமானது?

சாட் நாட்டின் பரந்த பாலைவனத்தில் டொயோட்டோ கார்கள் பறந்தன.

ஆனால் லிபிய பீரங்கிகளால் ஆமை வேகத்தில் தான் நகர முடிந்தது. பீரங்கிகள் தலையை திருப்பி சுடவும் அதிக நேரம் எடுக்கும்.

அதற்குள் காரில் இருக்கும் வீரர்கள் லிபிய வீரர்களை வீழ்த்திக்குவித்தனர்.

தானாக அமைதி உடன்படிக்கைக்கு இறங்கி வந்தது லிபியா.

The Toyota War : பீரங்கிகளை வீழ்த்திய கார்கள் - ஆப்ரிக்காவை உலுக்கிய போரின் சுவாரஸ்ய கதை!
உக்ரைன் போர் முதல் ஹிஜாப் போராட்டம் வரை: 2022ன் 5 முக்கிய நிகழ்வுகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com