செலெஸ்டியல் பேரரசு முதல் கிரேட் பிரிட்டன் வரை : உலகை ஆண்ட டாப் 5 பேரரசுகள் எவை?

செங்கிஸ்கான், அலெக்ஸாண்டர், நெப்போலியன் என பேரரசை உருவாக்க முனைந்த பல மாவீரர்களை நாம் அறிவோம். உலகை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பேரரசுகள் எவை? அவை ஆண்ட பகுதிகள் எவ்வளவு பெரியது என்பதைக் காணலாம்.
செலெஸ்டியல் பேரரசு முதல் கிரேட் பிரிட்டப் வரை : உலகை ஆண்ட டாப் 5 பேரரசுகள் எவை?
செலெஸ்டியல் பேரரசு முதல் கிரேட் பிரிட்டப் வரை : உலகை ஆண்ட டாப் 5 பேரரசுகள் எவை? Canva

உலகப் பேரரசுகள் ஒரே நாளில் உருவாகவில்லை. ஒவ்வொரு மன்னர் மட்டுமல்லாது அவரது பல தலைமுறைகள் போரிட்டு ஒவ்வொரு அரசையும் வீழ்த்தி தங்களது பேரரசை விரிவு படுத்துகின்றனர்.

பேரரசை விரிவுபடுத்துவது, மொத்த உலகையும் ஒரே குடையின் கீழ் ஆளுவது எல்லா பேரரசர்களின் கனவாகவும் இருந்தது என்றால் மிகையாகாது.

பெரும் படையுடன் மன்னர்களும் வீரர்களும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்தது தங்கள் உயிரைப் பணயம் வைத்து போரிட்டது பேரரசு எனும் அசைக்க முடியாத் சக்தியை உருவாக்கத்தான்.

செங்கிஸ்கான், அலெக்ஸாண்டர், நெப்போலியன் என பேரரசை உருவாக்க முனைந்த பல மாவீரர்களை நாம் அறிவோம். உலகை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பேரரசுகள் எவை? அவை ஆண்ட பகுதிகள் எவ்வளவு பெரியது என்பதைக் காணலாம்.

செலெஸ்டியல் பேரரசு

1636 முதல் 1912 வரை ஆசிய கண்டத்தின் பாதியை ஆண்ட பேரரசு செலெஸ்டில் குயிங் பேரரசு (Celestial Dynasty Empire Qing). பல கலாச்சாரங்களை ஆதரித்த இந்த பேரரசு 3 நூற்றாண்டுகள் நிலைத்திருந்தது. இன்றைய சீனா உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது செலெஸ்டியல் பேரரசு தான்.

செலெஸ்டியல் பேரரசு முதல் கிரேட் பிரிட்டப் வரை : உலகை ஆண்ட டாப் 5 பேரரசுகள் எவை?
மா சே துங் : சீனாவின் புதிய வரலாற்றை உருவாக்கியவரின் கதை

ஸ்பானிய பேரரசு

ஹிஸ்பானிக் முடியாட்சி அல்லது கத்தோலிக்க முடியாட்சி என்றும் அழைக்கப்படும் இது ஒரு காலனித்துவ பேரரசாகும்.

ஸ்பெயினைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த பேரரசில் வட அமெரிக்காவின் தெற்கு பகுதிகளும் தென்னமெரிக்காவின் மேற்கு பகுதிகளும், மத்திய அமெரிக்க நாடுகளும் அடங்கும்.

தவிர ஆப்ரிக்க பகுதிகளும் கிழக்கு ஆசிய தீவுகளும் இந்த பேரரசின் கீழ் இருந்தன.

செலெஸ்டியல் பேரரசு முதல் கிரேட் பிரிட்டப் வரை : உலகை ஆண்ட டாப் 5 பேரரசுகள் எவை?
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை

ரஷ்ய பேரரசு

1721 முதல் 1917 வரை இருந்த ரஷ்ய பேரரசு நிலைத்திருந்தது. ஆனால் 20 நூற்றாண்டில் ஜப்பானின் வலிமையான எதிர்ப்பின் விளைவாக ரஷ்யா உடைந்தது.

இன்றைய ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ​​லாட்வியா, லிதுவேனியா, எஸ்டோனியா, பின்லாந்து, போலந்து, மால்டோவா, ஆர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணமும் ரஷ்ய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது

செலெஸ்டியல் பேரரசு முதல் கிரேட் பிரிட்டப் வரை : உலகை ஆண்ட டாப் 5 பேரரசுகள் எவை?
Mikhail Gorbachev : சோவியத் யூனியனின் கடைசித் தலைவர் - சீர்த்திருத்தவாதியின் சரித்திர கதை!

மங்கோலியப் பேரரசு

ஆசியாவில் இருக்கும் இன்றைய மங்கோலியாவில் தொடங்கியது இந்த பேரரசு. 1206ம் ஆண்டு செங்கிஸ்கான் பல நாடோடி மக்களை இணைத்து உருவாக்கியது மங்கோலியப் பேரரசு.

15 நூற்றாண்டின் தொடக்கம் வரை நிலைத்திருந்த இந்த பேரரசு இன்றைய ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பெரும் பகுதியை ஆண்டது.

செலெஸ்டியல் பேரரசு முதல் கிரேட் பிரிட்டப் வரை : உலகை ஆண்ட டாப் 5 பேரரசுகள் எவை?
மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு!

தி கிரேட் பிரிட்டன்

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய நிலப்பரப்பை ஆண்ட பேரரசு என்றால் அது பிரிட்டிஷ் பேரரசு தான்.

இப்போதைய இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் தெங்கிழக்கு ஆசிய பகுதிகள், ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, பல ஆப்ரிக்க நாடுகள், வட அமெரிக்காவின் வடக்குப் பகுதி, கனடா, மத்திய மற்றும் தென்னமெரிக்காவின் சிறிய பகுதிகளை ஆட்சி செய்தது பிரிட்டிஷ் பேரரசு.

செலெஸ்டியல் பேரரசு முதல் கிரேட் பிரிட்டப் வரை : உலகை ஆண்ட டாப் 5 பேரரசுகள் எவை?
பிரிட்டிஷ் அரச குடும்பம் எப்படி பணம் சம்பாதிக்கிறது? - வியக்க வைக்கும் தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com