லடாக் முதல் லெயிங் பாஸ் வரை: உலகிலேயே உயரமான இடத்தில் இருக்கும் சாலைகள்

உயரத்தில் இருந்து எதையும் பார்க்கும் போது நம் கோணம் மாறுபடும். அப்படிக் கழுகு பார்வையில் உலகை வேடிக்கைப் பார்த்தபடி பயணிக்க, உலகின் மிகவும் உயரமான சாலைகள் பற்றி தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
லடாக் முதல் லெயிங் பாஸ் வரை: உலகிலேயே உயரமான இடத்தில் இருக்கும் சாலைகள்
லடாக் முதல் லெயிங் பாஸ் வரை: உலகிலேயே உயரமான இடத்தில் இருக்கும் சாலைகள் Twitter
Published on

உயரம் என்றாலே பலருக்கு அச்சம் தொற்றிக்கொள்ளும். ஆனால் சிலருக்கு அது பறப்பது போன்ற உற்சாகத்தை அளிக்கும்.

உயரத்தின் மீது சிறுவயதிலிருந்து நம் அனைவருக்குமே ஒரு ஈர்ப்பு இருந்திருக்கும். அது தான் உயரமான மலைகளை நம் ஓவியங்களாக வரையத் தூண்டியிருக்கும்.

உயரத்தில் இருந்து எதையும் பார்க்கும் போது நம் கோணம் மாறுபடும். அப்படிக் கழுகு பார்வையில் உலகை வேடிக்கைப் பார்த்தபடி பயணிக்க, உலகின் மிகவும் உயரமான சாலைகள் பற்றி தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

மர்சிமிக் லா, இந்தியா

உலகிலேயே உயரமான சாலை இந்தியாவில் தான் இருக்கிறது.

லடாக்கில் உள்ள இந்த இடத்துக்கு லங்கர் லா என்ற பெயரும் உள்ளது.

இந்த சாலை 5,590 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

துரதிஷ்டவசமாக இந்த சாலை இராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கரகோரம் நெடுஞ்சாலை, சீனா முதல் பாகிஸ்தான் வரை

சர்வதேச சாலைகளில் மிக உயரத்தில் அமைந்திருப்பது இதுவே.

மிக நீண்ட தூரம் எந்த பிரச்னையும் இல்லாமல் உயரமான சாலையில் பயணிக்க விரும்புபவர்கள் இந்த சாலையைத் தேந்தெடுக்கலாம்.

இந்த சாலை 4,693 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இது மே மாதம் முதல் அக்டோபர் வரை திறந்து இருக்கும்.

சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் இதன் நீளம் 1,300 கிலோமீட்டர்.

கர்துங் லா

இந்த சாலையும் லடாக் பகுதியில் தான் அமைந்துள்ளது. இதில் பயணிப்பது த்ரில்லான அனுபவமாக இருக்கும்.

பெரும்பாலும் பாறைகள், தூசி மற்றும் உருகும் பனிப்பாறைகள் வழியாக பயணிக்க வேண்டியது இருக்கும்.

இந்த சாலையில் பயணிக்க விரும்புபவர்கள் அரசிடம் அனுமதிப் பெற வேண்டியது அவசியம்.

இந்த ஒரு வழி சாலை காலை 9 மணு முதல் மதியம் 1 மணி வரை மட்டும் தான்

ட்ரைல் ரிட்ஜ் ரோடு

பாறைகள் நிறைந்த வட அமெரிக்க மலைகளின் உச்சியில் 65 கிலோமீட்டர் உல்லாச பயணத்தை இந்த சாலையில் மேற்கொள்ள முடியும்.

காடுகள், ஏரிகளை கடந்து செல்லும் இதில் பயணிக்கும் போது மான்களையும் ரசிக்கலாம்.

இந்த சாலையின் உயரம் 3000 மீட்டர்.

லடாக் முதல் லெயிங் பாஸ் வரை: உலகிலேயே உயரமான இடத்தில் இருக்கும் சாலைகள்
Loneliest Whale : உலகிலேயே தனிமையான திமிங்கலம் - மர்ம உயிரினம் கண்டறிப்பட்டது எப்படி?

அப்ரா பதபம்பா

பெரு நாட்டில் உள்ள இந்த சாலையில் அடிக்கடி சரளைகள் உருளுவதனால் மிகவும் பாதுகாப்பாக இங்கு பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த உயரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவெ உயரம் ஒத்துக்கொள்ளாதவர்கள், சுவாச பிரச்னைகள் இருப்பவர்கள் இந்த வழியாக செல்லாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

இது 4,910 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

லடாக் முதல் லெயிங் பாஸ் வரை: உலகிலேயே உயரமான இடத்தில் இருக்கும் சாலைகள்
Piaget to Patek Philippe : உலகிலேயே விலையுயர்ந்த 5 வாட்ச் நிறுவனங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்

லெயிங் பாஸ்

காலநிலைக் காரணமாக தாவரங்களே வளராத பகுதியில் இருக்கிறது இந்த சாலை.

பாறைகள், அருவிகள், ஆறுகள் வழியாக செல்லும் இந்த பாதை பல வளைவுகளைக் கொண்டுள்ளது.

இந்த பாதையின் உயரமான பகுதி 2,820 மீட்டர் நீளமுடையது.

கோல் டே லில்செரென்

பிரான்ஸில் உள்ள இந்த சாலை உண்மையாகவே அழகிய சாலைகளில் ஒன்று.

29.4 கிலோ மீட்டர் நீளமான இந்த சாலை 2,770 மட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

லடாக் முதல் லெயிங் பாஸ் வரை: உலகிலேயே உயரமான இடத்தில் இருக்கும் சாலைகள்
உலகிலேயே சுத்தமான காற்று இருக்கும் சுற்றுலா தலங்கள் இவைதான்!

மவுன்ட் ஹட் ஆக்சஸ் ரோடு

இது நியூசிலாந்தில் அமைந்துள்ளது. இது குறுகிய மண்சாலை ஆகும்.

1970ல் கட்டப்பட்ட இந்த சாலை, 13 கிலோ மீட்டர் நீளமும் 1,597 மீட்டர் உயரத்திலும் உள்ளது.

இந்த சாலையில் பயணிக்க அரசாங்கத்திடம் அனுமதி வாங்கத் தேவையில்லை என்றாலும், காலநிலை அனுமத்தித்தால் மட்டுமே வாங்க முடியும்.

லடாக் முதல் லெயிங் பாஸ் வரை: உலகிலேயே உயரமான இடத்தில் இருக்கும் சாலைகள்
உலகிலேயே உயரமான மனிதர் இவர்தானா? வளர்ந்துக்கொண்டே போகும் விநோதம் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com