உலகின் மிகப் பெரிய புத்த கோவில் இந்தோனேசியாவின் செண்ட்ரல் ஜாவா மாகாணத்தில் உள்ளது. போரோபுதூர் என அழைக்கப்படும் அந்த கோவில் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
உயரமான மலையில் அமைந்துள்ள இந்த கோவில் மஹாயனா புத்த கோவிலாகும். 1970களில் யுனெஸ்கோ உதவியுடன் இந்த கோவில் மீட்டெடுக்கப்பட்டது.
இப்போது புத்த யாத்திரிகளுக்கும் சாகச விரும்பிகளுக்கும் விருப்பமான இடமாக இருக்கிறது.
கோவிலுக்குள் வட்டமான பரப்பில் 72 திறந்தவெளி ஸ்தூபிகள் அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு ஸ்தூபியிலும் புத்தரின் சிலை அமைந்துள்ளது.
வரலாற்றின் படி இந்த கோவில் கி.பி.778 - 850 க்கு இடையில் கட்டப்பட்டது. எரிமலை சாம்பலில் பல ஆண்டுகள் புதைந்து கிடந்தது.
தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் என்ற ஆங்கிலேய லேப்டினண்ட் கவர்னர் 1814ம் ஆண்டு முதன்முறையாக இந்த கோவிலைக் கண்டறிந்தார். இதனை அகழாய்வு செய்யும் பணி 1907ம் ஆண்டு தொடங்கியது.
இந்த கோவிலில் முதலாவதாக அடிவாரத்தில் உள்ள 115 அடி உயர பிரம்மாண்டமான ஸ்தூபி தான் நம் கண்ணில் படும். இந்த கோவில் முழுவதும் 2 லட்சம் கன சதுர அடி எரிமலை சாம்பல் கற்களால் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலை இப்போது சுற்றிப்பார்க்க சில வழிமுறைகள் இருக்கின்றன. அடிவாரத்தில் தொடங்கி அலங்கார தகடுகள் வழியாக செதுக்கப்பட்ட கற்களையும் புத்த சிலைகளையும் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் பாதையில் நடக்க வேண்டும்.
இந்த கோவிலில் உள்ள 9 அடுக்குகளையும் சுற்றிப்பார்க்க வேண்டும். அப்போதுதான் முழுமையாக இந்த இடத்தைப் பார்க்க முடியும். ஒவ்வொரு அடுக்காக நடந்தால் 5 கிலோமீட்டர் நடந்த பின்னர் உச்சத்துக்கு செல்லலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust