இந்தியா, எகிப்து, ஜப்பான்: உலகின் பழமையான நாடுகள் இவை தான்!

நாகரிகங்கள் பிறந்தன. மனிதன் இடம்பெயர ஆரம்பித்தான். மொழி, இனம், கலாச்சாரம், உணவு போன்ற விஷயங்களின் அடிப்படைகளில் குழுக்களாக பிரிந்தனர். அவர்களுக்கென்று தனி இடம் உருவாக்கத் தொடங்கினர். கிராமங்கள், நகரங்கள், நாடுகள் பிறந்தன.
இந்தியா, எகிப்து, ஜப்பான்: உலகின் பழமையான நாடுகள் இவை தான்!
இந்தியா, எகிப்து, ஜப்பான்: உலகின் பழமையான நாடுகள் இவை தான்!canva (rep)
Published on

இந்த பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து உயிரினங்கள் உருவாக தொடங்கின. விலங்குகள், மனிதர்கள், பறவைகள் என ஒவ்வொன்றாக தோன்றியது, பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டன. மனிதன் தன் தேவைக்கு ஏற்ப புதிய விஷயங்களை கண்டுபிடிக்க ஆரம்பித்தான்.

நாகரிகங்கள் பிறந்தன. மனிதன் இடம்பெயர ஆரம்பித்தான். மொழி, இனம், கலாச்சாரம், உணவு போன்ற விஷயங்களின் அடிப்படைகளில் குழுக்களாக பிரிந்தனர். அவர்களுக்கென்று தனி இடம் உருவாக்கத் தொடங்கினர். கிராமங்கள், நகரங்கள், நாடுகள் பிறந்தன.

அப்படி உலகில் தோன்றிய நாடுகளில் மிகப் பழமையான நாடுகள் யாவை? இந்த பதிவில்

சான் மரினோ

ஐரோப்பாவின் மூன்றாவது சிறிய நாடான சான் மரினோ கிபி 301 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இத்தாலியால் சூழப்பட்டுள்ள இந்த நாடானது, நிலபரப்பு அளவிலும் சிறியது.

2021ஆம் ஆண்டின் அறிக்கையின் படி, இந்நாட்டின் மக்கள் தொகை வெறும் 33, 745 தான்.

இங்கு இத்தாலியன் மொழி பேசப்படுகிறது மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் இங்கு ஏராளம்.

சான் மரினோவின் அரசியலமைப்புச் சட்டம் உலகிலேயே பழமையானது என்று நம்பப்படுகிறது. இது கிபி 1600ல் எழுதப்பட்டது.

இந்தியா, எகிப்து, ஜப்பான்: உலகின் பழமையான நாடுகள் இவை தான்!
Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

இந்தியா

பழமையான நாடுகள் என்றால் அந்த பட்டியலில் எப்படி இந்தியா இல்லாமல் இருக்கும்?

5000 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்த நாடானது, வேதிக் நாகரிகம் உருவான சமயத்தில் கிட்ட தட்ட கிபி 1500ல் உருவானது. இதன் பிறகு இங்கு பல நாகரிகங்கள் தோன்றின. இந்தியாவை பல அரச குலங்கள் ஆட்சி புரிந்துள்ளன.

இந்தியா உலகின் பழமையான நாடுகளில் 7வது இடத்தில் இருக்கிறது

க்ரீஸ்

பெரும்பாலும் தீவுகளால் ஆன இந்த நாட்டின் வரலாறு நாம் அறிந்ததே. அரிஸ்டாட்டில், பிலாட்டோ போன்ற தத்துவவியலாளர்களுக்காக, ஜூஸ், அதீனா போன்ற கடவுள்களர்க்கும் பிரபலம்.

மேற்கு உலகில் ஜனநாயகம் முதன் முதலில் தோன்றிய நாடு கிரேக்கம் தான். உலக நாடுகளில் புரட்சிகள் தோன்றவும் கிரேக்க நாடு தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

ஒலிம்பிக்ஸ் மற்றும் தியேட்டர் தோன்றியது கிரீஸில் இருந்து தான்.

இந்தியா, எகிப்து, ஜப்பான்: உலகின் பழமையான நாடுகள் இவை தான்!
துபாய் டு தாய்லாந்து : உலக நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கும் விசித்திரமான கண்டிஷன்ஸ்

ஜப்பான்

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள இந்த நாடு ஒரு தீவு தேசம். வரலாற்றின் அடிப்படையில், ஜப்பானின் முதல் மன்னர் கிமி 660ல் இருந்த சூரிய கடவுளான அமெதரசுவின் வம்சத்தை சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.

இதனால் இந்த நாடும் உலகின் பழமையான நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது.

அர்மேனியா

கிமி 782ல் கண்டறியப்பட்ட அர்மேனியா உலகின் பழமையான நாடுகளில் ஒன்றாகும்.

கிமு 90,000ல் மனிதர்கள் இந்த நாட்டில் வாழ ஆரம்பித்தனர். இங்குள்ள குகைகளும் கல்வெட்டுகளும் இதற்கு சான்றாக விளங்குகின்றன.

இந்த நாடு அதன் உணவு வகைகள், பரந்து விரிந்த நிலப்பரப்புகள் மற்றும் வரலாற்று தலங்களுக்காக பிரபலமாக அறியப்படுகிறது.

எகிப்து

உலகின் இரண்டாவது பழமையான எழுத்து முறையை கொண்ட நாடு என்றால் எகிப்தின் வயதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

எகிப்து என்றவுடன் அங்குள்ள பிரம்மாண்டமான, வரலாற்று சிறப்புமிக்க பிரமிடுகள் நம் நினைவுக்கு வரும்.

எகிப்து நாட்டின் நாகரிகம் உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும். இது கிமு 6000ல் கண்டறியப்பட்டதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்

இந்தியா, எகிப்து, ஜப்பான்: உலகின் பழமையான நாடுகள் இவை தான்!
உலகின் டாப் 10 மெதுவான நாடுகள் - இந்தியாவின் இடம் என்ன தெரியுமா?

பிரான்ஸ்

இந்த பட்டியலில் அடுத்ததாக இருக்கும் நாடு பிரான்ஸ். கலைப்படைப்புகளுக்காகவும் வரலாற்று நினைவுச் சின்னங்களுக்காகவும் அறியப்படும் இந்த நாடானது முன்பு மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது

ஈரான்

வரலாற்று அறிஞர்களின் கூற்றுபடி கிமு 550ல் கண்டறியப்பட்டது ஈரான். அப்போது ஆகிமெடின் வம்சம் இரானை ஆட்சி புரிந்து வந்தனர். இதற்கு முன் ஈரான் பெர்சியா என்று அழைக்கப்பட்டது. 1930ல் அதிகாரப்பூர்வமாக இந்த நாட்டின் பெயர் ஈரான் என்று மாற்றப்பட்டது

இந்தியா, எகிப்து, ஜப்பான்: உலகின் பழமையான நாடுகள் இவை தான்!
மகாபலிபுரம்: நூற்றாண்டுகள் பழமையான கடற்கரை கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா? Wow Facts

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com