துபாய் டு தாய்லாந்து : உலக நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கும் விசித்திரமான கண்டிஷன்ஸ்

நாம் செல்லும் இடத்தின் பழக்கவழக்கங்கள் தெரியாமல், நம் பாட்டுக்கு ஏதாவது செய்து வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டாம் அல்லவா?
துபாய் டு தாய்லாந்து : உலக நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கும் விசித்திரமான கண்டிஷன்ஸ்
துபாய் டு தாய்லாந்து : உலக நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கும் விசித்திரமான கண்டிஷன்ஸ்Canva
Published on

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. When in Rome do as Romans என்று. அதுபோல, நாம் ஒரு இடத்துக்கு செல்கிறோம் என்றால், அங்கு நிலைக்கு ஏற்றவாரு நம்மை மாற்றிக்கொள்வதில் நன்மை இருக்கிறது.

நாம் செல்லும் இடத்தின் பழக்கவழக்கங்கள் தெரியாமல், நம் பாட்டுக்கு ஏதாவது செய்து வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டாம் அல்லவா?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் சுற்றுலா செல்பவர்களுக்கு சில விசித்திரமான கண்டிஷன்கள் இருக்கின்றன. அவை என்னென்ன? இங்கே பார்க்கலாம்...

துபாய்

துபாயில் பொதுவெளியில் காதலை வெளிப்படுத்தும் எந்த செயலும் குற்றமாகும். தப்பித் தவறி முத்தம் கொடுத்துவிட்டால் கூட சிறைக்கு செல்ல நேரிடலாம்!

இலங்கை

இலங்கையில் பௌத்த மதம் பரவலாக பின்பற்றப்படுகிறது. இதனால் அங்கு புத்தரின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால், கண்ணுக்கு தெரியும்படி டாட்டூக்களை உடம்பில் பச்சைக்குத்தி கொண்டிருந்தால் குற்றமாக பார்க்கிறார்கள் மக்கள்.

இதனை கண்டறிந்தால், உங்களை நாட்டிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள், அல்லது நாட்டிற்குள் செல்வதை தடை செய்து விடுவார்கள்.

துபாய் டு தாய்லாந்து : உலக நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கும் விசித்திரமான கண்டிஷன்ஸ்
இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை: உலகின் 5 அழகான நாடாளுமன்ற கட்டிடங்கள்

பார்படாஸ்

இங்கு கேமொஃப்ளாஜ்களுக்கு தடை உள்ளது. அதாவது, ராணுவம் தொடர்பான விஷயங்களை நாம் சாதாரணமாக அணிதல், உதாரணத்திற்கு ராணுவ உடையை ஃபேஷனுக்காக அணிபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி அணிய இங்கு தடை.

நியூயார்க்

நியூயார்க்கில் ஹாரன் அடிக்க தடை உள்ளது. மீறினால், 350 டாலர் வரை அபராதம் செலுத்த நேரிடலாம்

துபாய் டு தாய்லாந்து : உலக நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கும் விசித்திரமான கண்டிஷன்ஸ்
நேபாளம்: இங்கு இந்திய ரூபாய் செல்லுமா? அண்டை நாடு குறித்து அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள்

தாய்லாந்து

தாய்லாந்தில் அவர்கள் நாட்டின் பணத்தை மிதித்தால் குற்றமாகும். அந்நாட்டின் பணத்தில் அவர்களை ஆண்ட பேரரசருடைய புகைப்படம் இருப்பதால், மிதிப்பதை பாவமாக கருதுகிறார்கள்.

high heel
high heel Canva

க்ரீஸ்

கிரேக்க நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தலங்களில் பெண்கள் ஹீல்ஸ் செருப்புகள் அணிய தடையுள்ளது. இது நினைவுச்சின்னங்களை சேதப்படுத்தும் என்பதால் இந்த தடை.

சான் ஃபிரான்சிஸ்கோ

சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்குள் புறாக்களுக்கு உணவளிப்பது குற்றமாகும். அப்படி புறாக்களுக்கு உணவளிப்பதால், அதிகளவில் பறவைகள் குவியும் எனவும், இதனால் சுகாதார கேடுகள் வரும் எனவும் கூறுகின்றனர்.

துபாய் டு தாய்லாந்து : உலக நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கும் விசித்திரமான கண்டிஷன்ஸ்
கண்ணுக்கே தெரியாத வீடு - எங்கே இருக்கிறது இந்த invisible house? என்ன ஸ்பெஷல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com