ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை : உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் - எந்த நாட்டுக்கு முதலிடம்?

பயங்கரவாதம், உள்நாட்டு மோதலால் ஏற்படும் இறப்புகள் மற்றும் கொலை விகிதம் உள்ளிட்ட 23 வெவ்வேறு விஷயங்களின் அடிப்படையில் ஒரு நாடு எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த அறிக்கை அளவிடுகிறது.
ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை : உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் - எந்த நாட்டுக்கு முதலிடம்?
ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை : உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் - எந்த நாட்டுக்கு முதலிடம்?Twitter
Published on

ஒவ்வொரு ஆண்டும், Economics and Peace என்ற நிறுவனம் உலகளாவிய அமைதி குறியீட்டு அறிக்கையை வெளியிடுகிறது.

பயங்கரவாதம், உள்நாட்டு மோதலால் ஏற்படும் இறப்புகள் மற்றும் கொலை விகிதம் உள்ளிட்ட 23 வெவ்வேறு விஷயங்களின் அடிப்படையில் ஒரு நாடு எவ்வளவு ஆபத்தானது அல்லது பாதுகாப்பானது என்பதை இந்த அறிக்கை அளவிடுகிறது.

அப்படி உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் குறித்து காணலாம்

1.ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் உள்ளது.

தாலிபான்கள் ஆட்சி அமைத்தது முதலே அந்த நாட்டில் வன்முறைகள், மரண தண்டனைகள், தேவையற்ற கட்டுப்பாடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் ஓங்கியிருக்கின்றன.

ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை : உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் - எந்த நாட்டுக்கு முதலிடம்?
ஆப்கானிஸ்தான் : பெண்கல்வியை ஒடுக்கும் தாலிபான்களுக்கு சவால் விடும் ஹசாரா பெண்கள்!

2. ஏமன்

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஏமன் தற்போது உலகின் மிக மோசமான மற்றும் மனிதாபிமானமற்ற நாடாக உள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இராணுவ மோதலால் 4.3 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

14 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

3. சிரியா

சிரியா உள்நாட்டுப் போர் மார்ச் 2011 முதல் நீண்ட காலமாக நடந்துக் கொண்டிருக்கின்றது. இது 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது கொடிய போர் எனவும் கருதப்படுகிறது.

மார்ச் 2019 நிலவரப்படி, 5.7 மில்லியன் மக்கள் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6 மில்லியனுக்கும் அதிகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.

சிரியாவில் நடந்துகொண்டிருக்கும் மோதல்கள், உள்நாட்டு அமைதியின்மை உட்பட பல வன்முறைக் குற்றங்கள் நாட்டை ஆபத்தான நாடாக குறிக்கிறது.

ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை : உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் - எந்த நாட்டுக்கு முதலிடம்?
ரஷ்யா vs உக்ரைன் : இந்த போர் எந்த திசையில் செல்லும்? - இதுதான் கள நிலவரம்

4. ரஷ்யா

இந்த பட்டியலில் ரஷ்யா இடம் பெற ரஷ்ய-உக்ரைன் போர் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இருக்கும் பொருளாதார அழுத்தங்கள் , ரஷ்யா மீதான வர்த்தகத் தடைகள் மற்றும் பிற சர்வதேச கட்டுப்பாடுகள் அந்த நாட்டை பொருளாதார மந்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது.

போரினால் பல உயிரிழப்புகள் மற்றும் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

5. தெற்கு சூடான்

தெற்கு சூடான் அதிக அளவிலான உள்நாட்டு மோதல்கள் நடைபெறும். வன்முறையில் அதிகளவில் ஈடுபட்டாலும் கடந்த ஆண்டை ஓப்பிடுகையில் ஒட்டுமொத்த பாதுகாப்பில் முன்னேற்றம் கண்டுள்ளது.

உள்நாட்டு மோதலால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை மற்றும் ஒட்டுமொத்த கொலை விகிதம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது.

6. காங்கோ

வன்முறைகளால் ஏற்படும் இறப்புகளின் விகிதத்தில் ஆப்பிரிக்காவின் இரண்டாவது மிக ஆபத்தான நாடாக காங்கோ குறிப்பிடப்படுகிறது.

வறுமை மற்றும் அரசியல் அமைதியின்மை ஆகியவை அன்றாட கிளர்ச்சிகளாக உள்ளது.

இது தவிர கொலை, வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகளவில் இங்கு இருக்கும்.

வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை பேரழிவுகளும் அதிகம் நிகழும் நாடாக இந்த காங்கோ உள்ளது.

7. ஈராக்

ஈராக்கில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ISIS தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ஈராக் ஆயுதப்படை உறுப்பினர்களை கொன்று வருகின்றனர்.

ஈராக்கிற்கு வருகை தரும் அமெரிக்க குடிமக்கள் வன்முறை உள்ளாகும் ஆபத்து இங்கு அதிகம் உள்ளது.

ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை : உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் - எந்த நாட்டுக்கு முதலிடம்?
சவுதியில் சீன அதிபர் ஷி ஜின்பிங்: ஈராக் முதல் கத்தார் வரை- எந்தெந்த தலைவர்களை சந்தித்தார்?

8. சோமாலியா

2022 ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகையில் 20% க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக உலக அமைதி குறியீட்டு அறிக்கையில் சோமாலியா எட்டாவது இடத்தில் உள்ளது.

9. மத்திய ஆப்பிரிக்க குடியரசு

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு சோமாலியாவுக்கு அடுத்ததாக ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இங்கும் 20% மக்கள்தொகை நாட்டை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூடான்

சூடான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடித்ததுள்ளது

ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை : உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் - எந்த நாட்டுக்கு முதலிடம்?
3 கண்டங்கள், 30 நாடுகள், 30000 கி.மீ - உலகின் நீளமான இந்த பாதைகளில் பயணம் செய்ய தயாரா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com