மனிதன் அவன் நினைப்பதை பேச மொழி முக்கிய கருவியாக இருக்கிறது. வாய்வழிச் சொற்களாக இருந்தாலும் சரி, சைகை பாஷையாக இருந்தாலும் சரி, நாம் நம் மனதில் உதிக்கும் விஷயங்களை எதிராளியிடம் சொல்ல அதுவே ஒரே கருவி.
மொழி ஒரு நபரின் கலாச்சாரத்துக்கான அடையாளமாக இருக்கிறது. மனிதனின் வளர்ச்சிக்கும் அது மிக முக்கிய காரணியாக திகழ்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் பல தரபட்ட மொழிகள் பேசப்படுகின்றன. ஒரு சில பண்டையக் கால மொழிகள் இன்னும் வழக்கத்தில் இருக்கின்றன, ஒரு சில மொழிகள் மருவி மாற்றங்கள் கண்டு மற்றொரு மொழி பிறக்க காரணமாக இருந்துள்ளன.
உலகின் மிகப் பழமையான மொழிகளில் தமிழுக்கு தனிச் சிறப்பு இருக்கிறது.
இப்படி உலகில் பேசப்படும் பாசைகளில் எது மிகவும் மகிழ்ச்சியான மொழி என்கிற கணக்கெடுப்பை சமீபத்தில் வெர்மாண்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்டது.
அந்த ஆய்வில், அறிவியல் ரீதியாக உலகின் எந்தெந்த மொழிகள் மிகவும் நேர்மறையான மற்றும் சந்தோஷமான மொழிகளாக இருக்கின்றன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த ஆய்வின் படி ஸ்பானிஷ் மொழி தான் உலகின் மிக மகிழ்ச்சியான மொழியாக கண்டறியப்பட்டுள்ளது
இந்த ஆய்வை மேற்கொள்ள கூகுள் புக்ஸ், ட்விட்டர், இசை, டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் மாற்று மொழி சப் டைட்டில்கள்பாடல் வரிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பல்வேறு மொழிகளை இவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். இவற்றில் ஒவ்வொரு மொழியிலிருந்தும் இவை அனைத்திலும் பயன்படுத்தப்படும் பொதுவான வார்த்தைகளை சேகரித்தனர்.
ஒவ்வொரு வார்த்தையின் பொருளை வைத்து அதனை நேர்மறையான அல்லது எதிர்மறையான வார்த்தையாக பிரித்தனர்.
அதனடிப்படையில் முதல் பத்து மகிழ்ச்சியான மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
எனில் முதல் பத்து இடங்களில் என்னென்ன மொழிகள் இடம்பெற்றுள்ளன?
அதிக நேர்மறையான வார்த்தைகளை கொண்டுள்ளதன் அடிப்படையில் ஸ்பானிஷ் மகிழ்ச்சியான மொழிகளில் முதலிடத்தை பெற்றுள்ளது
உலகின் ரொமாண்ட்டிக் மொழியாக பார்க்கப்படும் போர்ச்சுகீஸ் மொழி உலகின் இரண்டாவது மகிழ்ச்சியான மொழியாக இருக்கிறது
உலகில் ஆதிக்கம் செலுத்தும் மொழிகளில் ஒன்றான ஆங்கிலம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது
மனித மொழியில் அதிக நேர்மறையாக இருக்கும் மொழியாக இந்தோனேசியன் மொழி இருக்கிறது. இம்மொழியில் பயன்படுத்தப்படும் சப் டைட்டில்களுக்கு அதிக ரேட்டிங்கும் கிடைத்துள்ளது
கூகுள் வெப் க்ரால், ட்விட்டர் மற்றும் கூகுள் புக்ஸ் ஆகிய தலங்களில் பயன்படுத்தப்படுவதன் அடிப்படையில் பிரஞ்சு மொழி இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது
தொடர்ந்து முறையே ஆறு முதல் பத்தாவது இடங்களில் ஜெர்மன், அரபிக், ரஷ்யன், கொரியன் மற்றும் சைனீஸ் மொழிகள் உள்ளன
முதல் பத்து மொழிகளில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust