கடந்த 2017 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த பத்திரிகை நிருபர் ஒருவர் ஒரு போலி ரெஸ்டாரன்ட்டை உருவாக்கியது மட்டுமல்லாமல், அதனை லண்டனின் நம்பர் 1 உணவகமாக்கிய கதை உங்களுக்கு தெரியுமா?
வைச் என்ற ஊடகத்தின் பத்திரிகையாளர் ஊபா பட்லர். கடந்த 2017 ஆம் ஆண்டு, ட்ரிப் அட்வைசர் இணையதளத்தில், 'தி ஷெட் அட் டல்விச்' என்ற பெயரில் ஒரு கணக்கை இவர் உருவாக்கினார்.
தி ஷெட் அட் டல்விச் என்பது ஒரு உனவகம். இந்த உணவகம் குறித்த அடிப்படை தகவல்களை பதிவேற்றிய பட்லர், தனது நண்பர்களை வைத்து, இந்த உணவகத்திற்கு ரேட்டிங்க் அளிக்குமாறு கூறினார். இதன் மூலம் அவரது இந்த உணவகம் லண்டனில் நிச்சயம் பார்க்கவேண்டிய இடமாக மாறும் என்று அவர் கருதியுள்ளார்
ஆனால் இது ஒரு போலி உணவகம். அந்த பெயரில் லண்டனில் எந்த உணவகமும் இல்லை. அப்படிப்பட்ட இடமும் இல்லை.
இந்த உணவகத்திற்காக ஊபா தனது வீட்டின் தோட்டத்தை பயன்படுத்திக்கொண்டார். அதாவது, தோட்டத்தில் உணவகம் போன்ற அமைப்பை உருவாக்கி, அது லண்டனின் நம்பர் 1 உணவகமாக மாற்றினார். உணவகத்தில் ஃபுட் ஆர்டர்கள் எடுத்துக்கொள்ள ஒரு போலி தொலைப்பேசியையும் அவர் வாங்கினார்
உணவகம் குறித்து மக்கள் இணையத்தில் தேடுவார்கள் என்பதால் டொமைன் ஒன்றையும் இதற்காக அவர் வாங்கினார்
ஒரு உணவகத்தை குறித்து நாம் இன்டர்னெட்டில் தேடினால், நம்மை கவர்வது அவர்களது சிக்னேச்சர் டிஷஸ் தான். அவற்றின் புகைப்படமே நம்மை அதன் பக்கம் கட்டி இழுக்கவேண்டும்.
இதனால், தனது ரெஸ்டாரன்ட்டின் சிக்னேச்சர் டிஷ்ஷை உருவாக்க ஊபா, தேன், சில மாத்திரைகள் மற்றும் ஷேவிங் கிரீமை பயன்படுத்தி ஒரு உணவு போல அலங்கரித்து புகைப்படத்தை பதிவேற்றினார்
அதன் பிறகு உணவகம் இணையத்தில் வைரலானது. பலரும் அங்கு வர விரும்புவதாக விருப்பங்கள் தெரிவித்தனர். எதிர்பார்த்ததை விட அதிகமாக வரவேற்பு கிடைத்ததால், ஊபா ஒரு இடத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பார்ட்டியும் வைத்துள்ளார்.
அங்கு வந்த பிறகு தான், இந்த உணவகம் போலியானது என்றும், ஊபா பிரான்க் செய்வதற்காக இப்படி செய்தார் என்பதும் தெரியவந்துள்ளது. ஊபா இது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபடுவார் எனவும் அவரை தெரிந்தவர்கள் சொல்லுகின்றனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust