செய்திதாள் படிப்பவர்கள் ஒரு நாளைத் தொடங்குவதே முதல் பக்க செய்தியிலிருந்து தான். செய்தி தாள்களில் வணிக நோக்கத்துடன் பல விளம்பரங்கள் வருவதைப் பார்த்திருப்போம். ஆனால் ஆஸ்திரேலியவில் உள்ள ஒரு ஊர் மக்களுக்கு இந்த ஒருபக்க விளம்பரத்தைப் பார்த்ததுமே அதிர்ச்சியும் சிரிப்புமாக இருந்திருக்கிறது.
அப்படி ஒரு விசித்திரமான விளம்பரத்தை பார்த்தனர் அந்த மக்கள். ஒரு காதலன் அவரது காதலியை ஏமாற்றியது குறித்த விளம்பரம் தான் அது.
Mackay and Whitsunday Life என்ற செய்திதாளில் தான் அந்த விளம்பரம் வந்திருந்தது.
"அன்புள்ள ஸ்டீவ், நீ அவளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்று நம்புகிறேன். நீ எப்படிப்பட்ட இழிவான, ஒரு ஏமாற்றுக்காரன் என்பதை இப்போது முழு ஊரும் தெரிந்துகொள்ளும்." என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தை ஜென்னி என்ற பெண் அனுப்பியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை செய்திதாளில் பார்த்து அந்த ஊர்மக்கள் யார் இந்த ஜென்னியும் ஸ்டீவும் எனத் தேடத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்த செய்திதாள் நிறுவனத்துக்கு பல மெசேஜ்கள் குவிந்திருக்கிறது.
"இந்த விளம்பரத்திற்கான செலவு உன்னுடைய க்ரெடிட் கார்டிலிருந்து தான் செய்யப்பட்டுள்ளது " என பின் குறிப்பும் அளித்திருந்தது தான் இதில் ஹைலைட்டே!
தங்களுக்கு வந்த விளம்பரங்களுக்கு பதிலளித்த செய்திதாள் நிறுவனம்,
எங்களுக்கு ஸ்டீவ் யார் என்று தெரியாது.
ஜென்னி குறித்து எதுவும் வெளியிட மாட்டோம்.
அந்த க்ரெடிட் கார்டை நாங்கள் பொருட்படுத்தவில்லை.
என பதிலளித்துள்ளது. இந்த விளம்பரத்தின் மூலம், ஆஸ்திரேலியாவிலிருந்து உலகம் முழுகவதும் ட்ரெண்டாகியுள்ளார் இந்த காதலி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust