ஆண் வேலைக்காரர் இருந்தா தான் இங்க குடியுரிமை - எந்த நாட்டில் இந்த வினோத கண்டிஷன்?

இவர்களை தனித்த இறையாண்மை தேசமாக உலகின் மற்ற எந்த நாடும் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் இவர்களுக்கு என்று காவல் துறை அமைப்பு, தனி நாணயம், பாஸ்போர்ட் ஆகியவை உள்ளது.
ஆண் வேலைக்காரர் இருந்தா தான் இங்க குடியுரிமை - எந்த நாட்டில் இந்த வினோத கண்டிஷன்? (rep)
ஆண் வேலைக்காரர் இருந்தா தான் இங்க குடியுரிமை - எந்த நாட்டில் இந்த வினோத கண்டிஷன்? (rep)canva
Published on

ஒரு நாட்டில் குடியுரிமை பெறுவது என்பது அந்த அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு அடிப்படை உரிமையாகும். அதற்கென்று ஒரு சில விதிகளும் இருக்கும்.

ஆனால் இந்த நாட்டில் குடியுரிமை பெற ஒரு தனித்துவமான கண்டிஷன் இருக்கிறது. இந்த நாட்டில் வாழும் பெண்களுக்கு குறைந்தது ஒரு ஆண் வேலைக்காரர் இருந்தால் தான் அவருக்கு குடியுரிமை.

எந்த நாட்டில் இப்படியான ஒரு கண்டிஷன்?

செக் குடியரசில் இருந்து 1966ஆம் ஆண்டு ஒரு பகுதி தனித்து வந்தது. இதற்கு தி அடஹ்ர் வேர்ல்டு கிங்டம் என்று பெயர் சூட்டினர். இங்கு தான் இந்த வினோத குடியிரிமை சட்டம் அமலில் உள்ளது.

இவர்கள் நாட்டில் பெண்களுக்கு தான் ஆளும் உரிமை. ராணி பேட்ரிசியா 1 இந்த நாட்டின் அரசி. பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டிடங்களை இந்த நாட்டு மக்கள் வசிப்பிடங்களாக மாற்றிக்கொண்டு விட்டனர்.

ஒரு தனி நாடு எப்படியெல்லாம் செயல்படுமோ அதற்கான வழிமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்து வருகிறது இந்த நாடு.

இவர்களை தனித்த இறையாண்மை தேசமாக உலகின் மற்ற எந்த நாடும் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் இவர்களுக்கு என்று காவல் துறை அமைப்பு, தனி நாணயம், பாஸ்போர்ட் ஆகியவை உள்ளது.

ஆண் வேலைக்காரர் இருந்தா தான் இங்க குடியுரிமை - எந்த நாட்டில் இந்த வினோத கண்டிஷன்? (rep)
Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

அரசாட்சி விதிகளின் படி, இந்த நாடு செயல்பட்டு வருகிறது.

இவர்கள் தனித்து தங்கள் நாட்டினை நிர்வகித்து வருகின்றனர். ஆனால் பெண்களை கொண்டு.

குறிப்பாக அண்டை நாடுகளில் இருந்து இந்த நாட்டுக்கு வரும் பெண்களுக்கு குடியுரிமை வழங்க இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவர்கள் குடியுரிமை பெறவேண்டும் என்றால், அதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது.

அதில் முக்கியமான விதிமுறை, குடியுரிமை பெற விரும்பும் பெண்களுக்கு கண்டிப்பாக குறைந்தது 1 ஆண் வேலைக்காரரை வைத்திருக்க வேண்டும்.

ஆண் வேலைக்காரர் இருந்தா தான் இங்க குடியுரிமை - எந்த நாட்டில் இந்த வினோத கண்டிஷன்? (rep)
Nushu : ஆண்களுக்கு தெரியாமல் சீன பெண்கள் பயன்படுத்திய இரகசிய மொழி - 400 ஆண்டுகால வரலாறு!

இந்த ஆணுக்கு மது அருந்த அனுமதி உண்டு. ஆனால் அதுவும் மகாராணியின் சம்மதத்துடன், அவரது கால்களில் வைத்துவிட்டு பிறகு எடுத்து அருந்தலாம்.

பெண்கள் குடியுரிமை பெற மேலும் சில கண்டிஷன்ஸ் உள்ளன. பெண்கள் மகாராணியின் அரண்மனையில் தங்கி குறைந்தது 5 நாட்களுக்கு அவருக்கு பணி செய்திருக்கவேண்டும். இந்த ஐந்து நாட்களும் ராணி சொல்வதை எதிர்கேள்வி கேட்காமல் அந்த பெண்கள் அப்படியே செய்யவேண்டும்.

மகாராணியின் உத்தரவே இறுதியானது

ஆண் வேலைக்காரர் இருந்தா தான் இங்க குடியுரிமை - எந்த நாட்டில் இந்த வினோத கண்டிஷன்? (rep)
ஆண்களுக்கு அனுமதி இல்லை! அருணாச்சல பிரதேசத்தின் இந்த பெண்கள் விழா பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com