இந்த தீவில் கார் இல்லை, கடிகாரம் இல்லை - என்ன காரணம் தெரியுமா?

குர்ன்சியின் பெய்லிவிக் பகுதியில் அமைந்துள்ள ஹெர்ம் 1.35 மைல்களுக்குள் பரவியுள்ளது. கடிகாரங்கள் இல்லாத ஹோட்டலைக் கொண்டுள்ளது. குர்ன்சியிலிருந்து 15 நிமிட படகு சவாரி அல்லது லண்டன் கேட்விக்கிலிருந்து 90 நிமிட விமானம் மூலம் இந்த இடத்தை அணுகலாம்.
இந்த தீவில் கார் இல்லை, கடிகாரம் இல்லை - என்ன காரணம் தெரியுமா?
இந்த தீவில் கார் இல்லை, கடிகாரம் இல்லை - என்ன காரணம் தெரியுமா?canva
Published on

குறைவான கூட்டமே இருக்கு இடத்திற்கு செல்ல நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா? அப்படி உலகம் முழுக்க பல்வேறு இடங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் இங்கிலாந்தில் உள்ள ஒரு தீவு குறித்து தான் பார்க்க போகிறோம்.

ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் அல்லது கிரீஸ் ஆகிய நாடுகளில் சன்பாத் எடுக்க கரையோரங்களை பலர் தேர்வு செய்கின்றனர்.

ஹெர்ம் தீவு, சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க சிறந்த இடமாக உள்ளது. இங்கு 'கார்கள் இல்லை, கூட்டம் இல்லை, மன அழுத்தம் இல்லை.

குர்ன்சியின் பெய்லிவிக் பகுதியில் அமைந்துள்ள ஹெர்ம் 1.35 மைல்களுக்குள் பரவியுள்ளது. கடிகாரங்கள் இல்லாத ஹோட்டலைக் கொண்டுள்ளது. சுற்றுலா பயணிகள், நேரம், காலம் பார்க்காமல் இங்கு ஓய்வெடுத்து தங்களது விடுமுறையை கழிக்கிறார்கள்.

குர்ன்சியிலிருந்து 15 நிமிட படகு சவாரி அல்லது லண்டன் கேட்விக்கிலிருந்து 90 நிமிட விமானம் மூலம் இந்த இடத்தை அணுகலாம். ஹெர்ம் அழகிய வெள்ளை மணல் கடற்கரைகள், டால்பின்கள் என பல அழகிய காட்சிகளை வழங்குகிறது.

வெறும் 65 மக்கள்தொகையுடன், ஹெர்மின் சூழல் அழியாமல் உள்ளது. தீவு அதன் எளிமையை தழுவி இருக்கிறது. மேலும் ஒரு ஹோட்டல், ஒரு தீயணைப்பு நிலையம், நான்கு மாணவர்களைக் கொண்ட ஆரம்பப் பள்ளி மற்றும் ஒரு காவல் நிலையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த தீவில் கார் இல்லை, கடிகாரம் இல்லை - என்ன காரணம் தெரியுமா?
சென்டினல் தீவு : கால்வைத்த வெளிநபர்கள் உயிருடன் திரும்பியதில்லை - ஒரு திக்திக் பயணம்

ஹெர்மின் அதிகாரப்பூர்வ இணையதளம், தீவை 'சொர்க்கத் தீவு' என அடையாளப்படுகிறது. ஹெர்மில் கோடைக்காலம் ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியத்தைத் தருகிறது. ஹெர்மின் கோடைக்காலம் இங்கிலாந்தை விட ஆறு வாரங்கள் முன்னதாகவே தொடங்குகிறது.

இந்த மறைக்கப்பட்ட சொர்க்கத்தின் அழகின் மத்தியில் மன அழுத்தம் மறைந்துவிடும். நிச்சயம் இந்த தீவை பார்வையிடுங்கள்!

இந்த தீவில் கார் இல்லை, கடிகாரம் இல்லை - என்ன காரணம் தெரியுமா?
நாயை பார்த்துக்கொள்ள 1 கோடி சம்பளம் வழங்கும் இங்கிலாந்து குடும்பம் - கண்டிஷன்ஸ் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com